அம்பலப்பதி

அம்பலப்பதி

அய்யா வைகுண்டர் பலம் என்ற இடத்திற்குப் போய் இரண்டு வருட காலம் தங்கி இருந்தார். அதனால் இந்த பதி அம்பலபதி ஆனது. நாகர்கோவிலில் இருந்து பத்து கிலோ தொலைவில் உள்ளது இந்த முக்கியமான பதி. இந்தப் பதியை பல்லத்துப்பதி என்றும், மூலகுண்டப்பதி என்றும் அழைக்கின்றனர்.

அம்பலப்பதி என்ற அந்த இடத்தில் தான் அய்யா சிவசொருபியாக இருந்தார். அய்யா அந்த இடத்தில் இருந்தபொழுது பார்வதி மற்றும் பகவதியின் சக்திகளை தனக்குள் எடுத்துக் கொண்டார். முருகனாக இருந்து வள்ளி மற்றும் தேவானையின் சக்திகளையும், பிரும்மாவாக இருந்து மண்டைக்காட்டம்மனின் சக்தியையும் பெற்றுக் கொண்டார்.

அங்கிருந்து அய்யாவின் பக்தர்கள் அவரை குதிரை ஒன்றின் மீது அமர வைத்து கடம்பான்குளம், பாம்பன் குளம் போன்ற இடங்களுக்கு அழைத்துச்சென்றனர். அந்த இடங்களில் எல்லாம் அய்யா நிழல் தாங்கல்களை அமைத்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சாமித்தோப்பிற்குத் திரும்பி விட்டார்.

அவர் நிறுவிய அம்பலம் கவனிக்கப்படாமல் அழிந்து போக அதன் பின் வேறு சிலர் அந்த இடத்தில் ஆலயம் அமைத்து பணிவிடை செய்யத் துவங்கினர். அவர்களுடைய சந்ததியினர் இன்றும் அந்த நல்ல காரியத்தைத் தொடர்ந்து செய்தவண்ணம் உள்ளனர். ஒவ்வொரு வருடமும் அங்கு திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அய்யாவை ஆலயத்தைச் சுற்றி பவனியாக எடுத்துச் செல்ல பல வாகனங்கள் அங்கு அமைக்கப்பட்டு உள்ளன.
image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *