அய்யாவழி

அய்யா வைகுண்டர்

ஆதிமூல பரம்பொருள் அய்யா வைகுண்டர் அவதரித்தார்

“……கன்னிகள் மதலையான கற்பக குலங்கள் தன்னில்
மன்னிய மனுபோல் மாயன் மன்னுகத்துதித்தார் தானே……”
-அகிலத்திரட்டம்மானை

♦ கலியுகத்தில் நாம் வழிபடவேண்டியது  அய்யா வைகுண்டரை மட்டுமே

♦ அகிலத்திரட்டம்மானை மற்றும் அருளாகமம் மட்டுமே இறை வேதம்

♦ நாம் வழிபட்ட 23 தெய்வங்களும் வைகுண்டருக்குள் ஒடுங்கி விட்டன. எனவே தனித்தனி வழிபாடு தேவையில்லை

மேலும் படிக்க

அய்யாவழி நடைமுறைகள்

ஏன் சமாதியை வணங்கி வழிப்பாடுவதை பகவான் அய்யா வைகுண்டர் தடுக்கிறார்?

குருபுஜை என்பது இறந்தவர்களை அவர்களின் நினைவாக   அவர்களின் கல்லறையிலோ அல்லது புகைப்படத்தை வைத்தோ வணங்குவது ஆகும். இவ்வாறு வழிப்படுபவர்களை அய்யா தமக்கு ஆகாத பேர்கள் என்கிறார்.
இதனை அய்யா

“கோவில்கள் வைத்துக் குருபூசை   செய்யார்கள்”
என்ற அகில வரிகள் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.

நாம் என்பது நமது ஆன்மாவை(உயிர்) குறிக்குமே அன்றி  நமது பஞ்சபூதங்களால் ஆன பூதஉடல் குறிக்காது. நமது உயிருக்கு என்றும் தாயும், தந்தையுமாக இருப்பது நமது அய்யா மட்டுமே ஆவார். இந்த அய்யாவுடனான உறவு மட்டுமே என்றும் அழிவில்லாத நிரந்தர உறவு ஆகும்.  

மேலும் படிக்க