ஏன் சமாதியை வணங்கி வழிப்பாடுவதை  பகவான் அய்யா வைகுண்டர் தடுக்கிறார்?

அய்யா துணை

அய்யாவே சரணம். குருபுஜை என்பது இறந்தவர்களை அவர்களின் நினைவாக அவர்களின் கல்லறையிலோ அல்லது புகைப்படத்தை வைத்தோ வணங்குவது ஆகும். இவ்வாறு வழிப்படுபவர்களை அய்யா தமக்கு ஆகாத பேர்கள் என்கிறார். இதனை அய்யா “கோவில்கள் வைத்துக் குருபூசை   செய்யார்கள்” என்ற அகில வரிகள் மூலம் நமக்கு உணர்த்துகிறார். நாம் என்பது நமது ஆன்மாவை(உயிர்) குறிக்குமே அன்றி  நமது பஞ்சபூதங்களால் ஆன பூதஉடல் குறிக்காது. நமது உயிருக்கு என்றும் தாயும், தந்தையுமாக இருப்பது நமது அய்யா மட்டுமே ஆவார். இந்த அய்யாவுடனான உறவு மட்டுமே என்றும் அழிவில்லாத நிரந்தர உறவு ஆகும். ஆனால் இந்த பூமியில் நாம் பிறக்கும் போதேல்லாம் நமது உடலுக்கு தாயும் தந்தையுமாக  ஒவ்வொரு பிறவியிலும் வேறு வேறு நபர்கள் இருப்பர்கள். இந்த உறவு முறை பிறவிக்கு பிறவி மாறுபட்டு நிரந்தரம் இல்லாத உறவு முறையாக இருக்கும் .  அதனால் தான் நமது பூதவுடல் இந்த பூமியில் இருக்கும் நாட்கள் வரை மட்டுமே இந்த உறவு முறையுகளும் நமக்குள்  இருக்கும். எனவே நாம் எப்போது இறக்கிறோமோ அப்போதே இந்த பூலோக தாய் தந்தை என்ற உறவும்  முடிவுக்கு வருகிறது .

இதனை நாம் மகாபாரதத்தில் அர்ஜுனன், அவன் மகன் அபிமன்யு வரலாறு மூலம் அறியலாம். இதை மீண்டும் நமக்கு அகிலத்திரட்டில் சம்பூர்ண தேவனின்(முத்துக்குட்டி) கதை மூலம் அய்யா நாராயணர் எடுத்துரைக்கிறார். முத்துக்குட்டி இரண்டு ஆண்டுகளாக நோய்வாய்பட்டது போல் சிவஞானத்தில் இருந்து இறைவனை அடையும் தகுதியை பெற்று அதன்படி அவரின் தாயார் கனவில் திருமால் தோன்றி உனது மகனை திருச்செந்தூர் திருவிழாவுக்கு அழைத்து வந்தால் பிணியை(பிறப்பு, இறப்பு என்னும் பிணி) மாற்றி நல்ல பேறு(முக்தி) கொடுப்போம் என்கிறார். அதன்படியே நாராயணர் முத்துக்குட்டிக்கு முத்தி(பேறு) கொடுத்து தன்னுடன் ஆட்கொள்கிறார். இதனை உணராத முத்துகுட்டியின் தாயிடம் அய்யா வைகுண்டர் சொல்கிறார் தாயே நீ “ஆண்டாயித்துக்கு முன்னே அன்னை என இருந்தாய்” என்கிறார். அதாவது உனது மகன் முத்துக்குட்டி இறந்து விட்டான், அவரது ஆன்மா அவரது   உண்மையான தாயும் தகப்பனாகிய என்னிடம் வந்துவிட்டது எனவே இன்றுமுதல் அவனுக்கு நீ  தாய் இல்லை என்கிறார். உங்கள் இருவருடன் இருந்த தாய் மகன் என்ற உறவு இனி இல்லை என்கிறார். இதன்மூலம் தாய் மகன் என்ற உடல் சம்மந்தப்பட்ட பூலோக உறவானது உடல் மண்னோடு சென்றதோடு முடிந்து விட்டது அதனால் நீ இப்போது அன்னை இல்லை ஆண்டு ஆயிரத்து எட்டுக்கு முன்பு அன்னை என இருந்தாய் என கூறினார். ஆனால் இதனை அந்த முத்துக்குட்டியின்  தாயினால் மகன் மீது கொண்ட பாசத்தால் உணர்ந்து கொள்ள முடியவில்லை எனவே அவளை பார்த்து அய்யா வரடே(இறைஞானம் இல்லாதவள்) என்று கூறுகின்றார். இதனை நாமும் நன்கு உணர்ந்து இறந்தவரின் சமாதியை கோவிலாக்கி குருபூசை செய்யாமல் அய்யாவுக்கு ஆகும் பேராக வாழ்ந்து தர்மயுக வாழ்வு பெறுவோம்.

அய்யா உண்டு. அய்யா உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *