ஆதலவிளை – அய்யா வைகுண்டர் திரு நிழல்தாங்கல்

எல்லாம் வல்ல எல்லாமும் ஆன வல்லத்தான் வைகுண்ட பரம்பொருள் திருவருளால், ஆதலவிளை என்னும் ஊரில் உள்ள அருள் தலத்தில் அய்யாவின் அருட்பெரும் கருணையால் பற்பல அற்புதங்களும் அதிசயங்களும் நடத்தி அய்யா அருளாட்சி புரிந்து கொண்டு இருக்கிறார். அய்யாவின் அருளால் ஆதலவிளையில் அய்யா வைகுண்டர் திரு நிழல்தாங்கல் சுமார் 150 ஆண்டுக்கு முன் ஆதலவிளை ஊர் சான்றோர்களாள் சிறிய பணை ஓலையில் குடில் அமைத்து பணிவிடை செய்து வந்தனர். அந்த தாங்கல் இன்று இராஜகோபுரத்துடன் புதிய தாங்கல் ஆக வளர்ந்து உயர்ந்து உள்ளது. இந்த தாங்கல் வைகுண்டர் ஆண்டு 173-ம் ஆண்டு சித்திரை மாதம் 9-ம் தியதி (22-04-2005) வெள்ளிக்கிழமை அன்று திரு. பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில்; திரு.P. அரிராமகிருஷ்ணன் அவர்கள்(A.P.N.Plaza, A.P.Tiles உரிமையாளர்),ஸ்தபதி.திரு.N.ராஜமுத்து (இராஜகோபுரம், தாங்கல் வடிவமைப்பு), அதலவிளை ஊர் பொதுமக்கள், நிர்வாகக்குழு மற்றும் திருப்பணிக்குழு முன்னிலையில்; உயர்திரு.சி.பா.இராமசந்திர ஆதித்தனார் அவர்கள் (TMB இயக்குநர், தேவி வார இதழ்) இராஜகோபுரத்துடன் கூடிய புதிய நிழல்தாங்கலை திறந்து வைக்கப்பட்டது.

To know more just click
www.athalavilaiayyavaikundar.com
image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *