உலக நடப்புகள் 1-பகவான் வைகுண்டர்

சிவன், விஷ்ணு, பிரம்மா என்னும் மும்மூர்த்திகளும் கலியுகத்தில் ஒரே மூர்த்தியாக அய்யா வைகுண்டர் என்னும் திருநாமத்துடன் திருச்செந்தூர் திருபாற்கடலில் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20ல் அவதரித்தனர். பகவான்
அய்யா வைகுண்டர் தீர்க்க தரிசனமாக கலியுகத்தின் இறுதி காலக்கட்டத்தில் உலகில் என்ன என்ன நடக்கும் என்பதை அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள்நூல் என்னும் தமிழ் வேதம் மூலம் நமக்கு கூறியுள்ளார்.
அய்யா சொன்ன அனைத்தும் இப்போது அப்படியே ஒன்றுக் கூட தவறாமல் உலகில் நடந்து வருகிறது.

அவற்றில் சில.

1. கிணறு பாழாகும் கீழுற்றுப் பொய்யாகும்(கிணறுகள் தண்ணீர் இல்லாமல் பயணற்று போகும், பூமிக்கு கீழ் கிடைக்கும் நீர் இல்லாமல் ஆகிவிடும்)

2. மாநிலத்தில் வேளாண்மை மழையில் மிகக்கேடுவரும்(விவசாயம் போதிய மழை இல்லாததால் தடைப்படும்)

3.ஈனருக்கு காலம் ரொம்ப ரொம்ப உண்டாகும்(மானம் இல்லாமல் சுயமரியாதை இல்லாமல் வாழ்பவர்கள் சுகமாக வாழ்வர்)

4.காணிக்கை வேண்டல் கைக்கூலி தான் மீறும். (நமக்கு உள்ளே குடிகொண்ட இறைவனை உணராமல் காணிக்கை கொடுத்து இறைவனை அடையும் எண்ணம் மக்களிடம் காணப்படும். இறைவனிடமே நீர் எனக்கு இதை செய்தால் நான் பதிலுக்கு அதை செய்கிறேன், இதை செய்கிறேன் என்று லஞ்சம் கொடுக்கும் அளவுக்கு பக்தி இருக்கும்.

5. மாமோக ஆசையினால் மாசண்டை ஆகிவரும்(மண்,பெண்,பொன் என்னும் பெரிய ஆசையால் மக்களுக்குள் விரோதம் ஏற்பட்டு சண்டை வரும்)

6.கூடப் பிறப்பைக் கொடும் பகை போல் எண்ணிடுவார்(அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற கூட பிறப்புகளுக்குள் ஒற்றுமை இல்லாத பகையாளியாக இருப்பர்)
7. வாரி கோபிக்கும் வாங்குஞ் சில இடங்கள் (கடல் கோபம் கொண்டு சுனாமி ஏற்ப்பட்டு சில இடங்களை அபகரிக்கும்).
8. நாடுதனில் ராசாக்கள் பாவிகளாய் நாள்தோறும் (நம்மை ஆளும் அரசியல்வாதிகள் இராச நீதப்படி ஆளாமல் மக்களுக்கு தீமையே செய்யவார்கள்).
9. இவன்மா ளும்போது இனத்துக் கினம்பகையாம் (சாதி சண்டையால் மக்கள் மடிவர்)
10. பிராயம் வருமுன்னே பெண்கள் நிலையழிவார் (வயதுக்கு வருவதுக்கு முன்பே பெண்கள் தங்களின் உயர்ந்த நிலையில் இருந்து தவறுவர்).
11. போருக்கு யாரும் புத்தியாய்த் தானிருப்பார் (அடுத்தவரிடம் எப்போதும் சண்டை போடும் மனநிலையிலே மக்களின் புத்தி இருக்கும்).

12.”பிள்ளையுடன் கொண்ட பெண்ணைப் பேறாக விற்றிடுவார்”
(பணத்துக்காக பெற்றோர் தாங்கள் பெற்ற பிள்ளைகளையும், கணவன் தான் தாலிகட்டின மனைவியையும் கூட விற்பனை செய்துவிடுவர்)

13. “ஓயாமல் தீனதிய திருட்டுப் பெருத்து வரும்”
(கொலை, கற்பழிப்பு போன்ற கொடிய குற்றங்களை கூட திருட வேண்டி செய்வர், திருட்டு நாள்தோறும் பெருகிக் கொண்டே இருக்கும்)

14.”ராஐனவன் கைக்கூலி நடத்தியே வாங்கிடுவான் பேசிடுவான் ஞாயப் பிழையாக”
(அன்று மன்னன் போல் இன்று நீதி பரிபாலனம் செய்கின்றன நீதிபதிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு நியாயம் தவரி தப்பான தீர்ப்பு கொடுப்பார்கள்)

15. “ஆசையுள்ள அண்ணனுக்கு தம்பிபகை”
“அன்னையருக்கு பிள்ளை பகை”
(பாசம்முள்ள உறவுகளுக்குள் பெரும் பகை ஏற்ப்படும் )

16.”பெண்ணாலும் பொன்னாலும் நிலங்கரையில் மண்ணாலும் நித்தம் மடிவார்”
(பெண்ணுக்காகவும், பொன் பணத்துக்காகவும், நிலத்துக்காகவும் மக்கள் தங்களுக்குள் சண்டை போட்டு நித்தம் நித்தம் சாவார்கள்)

17.”நாள்தோறும் பூமியெல்லாம் காடுதணிந்துவரும்”
(காடுகள் அழிக்கப்படும் )

18. “மேகத்திலே இருந்து மீனும்விழும் மழையதிலே”
(மழை பெய்யும் போது அதில் மீனும் விழும்)

19. ஏறு அக்கினியால் நாள் தோறும் பூமி நடுக்கம் உண்டாகும்(பூமி வெப்பம் ஆகிகொண்டே செல்வதால் தினமும் பூமியில் எங்காவது ஒரு பகுதியில் நிலநடுக்கம் இருக்கும்).
20. வட்டி அநியாயம் வாங்கிடுவார் கட்டழிந்து(பல்வேறு பெயர்களில் வட்டியை அநியாயமாக வாங்கிடுவார்)
21. வெள்ளத்தால் பஞ்சம் வரும் வெண்சாவி ஆகிவிடும்.
22. அம்புவியெல்லாம் நித்தநித்தம் பெண்கள் மோகம் பெருகிக்கண்ட கணவன் மேல் மோகக்கலவி செய்வார்(பெண்கள் அடுத்தவளின் கணவன் மேல் காதல் கொண்டு தப்பான உறவு கொள்வர்)
23. நாள்தோறும் பூமியெல்லாம் காடுந்தணிந்துவரும்(இயற்கை அழிக்கப்படும்).

24. மாட்டின் வயிற்றில் மனிதர் போல் தான்பிறக்கும்

25.தூசியிடத் தெண்டந் தொடர்ந்து பிடிப்பார்கள்(நாம் வேண்டாம் என்று குப்பையில் போடுவதற்கு கூட வரி வசூலிக்கப்படும் )

அய்யா சொன்னது தப்பாமல் நடக்கிறது அன்போரே நாம் தப்பு செய்யாமல் இருந்து அய்யாவின் தர்மயுத்தை அடைவோம்.

அய்யா ?உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *