உலக நடப்புகள் 2-பகவான் வைகுண்டர்

அய்யாவே துணையாக உண்டு.

உலகில் தோன்றிய சில ஞானிகள் உலக நடப்பை பற்றி தீர்க்க தரிசனங்கள் சொல்லி உள்ளனர். அவைகள் சுனாமி, நிலநடுக்கம், அழிவுகள் போன்ற பெரிய நிகழ்வுகளை பற்றியவை ஆகும். ஆனால் பகவான் வைகுண்டர் மட்டுமே உலகில் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகளைப் பற்றியும் , மனித சமுதாயத்தில் ஏற்ப்படும் மாறுதல்களை பற்றி மிக துள்ளியமாக சொல்லி உள்ளார்.

அவற்றில் சில்…..,

1. கொலைகளவு ரொம்பக் கோள்கள் மிகுந்திருக்கும்(கொலைகள் என்பது அரிதாக நடந்த நிலைமாறி சாதாரண விசயத்துக்கும் நடக்கும், களவு செய்தல், ஒருவரைப் பற்றி மற்றொருவரிடம் கோள் சொல்வது அதிகமாக நடக்கும்)

2.கீழ்சாதி எல்லாங் கெறுவிதங்கள் மிஞ்சியவர்
மேல்சாதி தன்னை வேலைகொண்டு தான் வருவர்
(இங்கு அய்யா சொல்வது பிறப்பின் அடிப்படையில் நாம் வகைப்படுத்தி வைத்திருக்கும் கீழ் சாதி மேல் சாதி இல்லை. கீழ் எண்ணம் கொண்டவன் உயர்ந்த எண்ணம் கொண்டவர்களை அடக்கி வேலை செய்யும் நிலையை சொல்கிறார்)

3.வம்புக்கு நோக்கம் வாக்கில் மிகஇருக்கும்
அன்புக்கு நோக்கம் அடங்கி மிகஇருக்கும்
(மக்கள் தங்களுக்குள் அன்பாக பேசும் எண்ணம் இன்றி சண்டை போடும் நோக்கில் வம்பாகவே பேசுவர்)

4.சிவஞான நினைவு செல்லாது தேசமதில்
(இறைவனை அடைய வேண்டும் என்னும் ஞானம் மக்களிடம் குறையும். இறைஞானம் பெற்றவருக்கு உரிய மரியாதை கிடைக்காது)

5.தலைஞான வேதம் தடுமாறி கைவிடுவார்
(உலகின் முதன்மையான தலைசிறந்த முத்தி தரக்கூடிய வேதத்தை உலக ஆசையில் மயங்கி கைவிடுவார்கள்)

6.நேருக்கு காலம் நெகிழ்ந்திருக்கும் பார்மீதில்
(உலகில் மக்கள் தாங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் குறைந்து வரும்)

7.முனக்கத் துரோகி உலகில் மிகவுண்டாகும்
(மோசமான துரோகிகள் உலகில் பெருகிவருவர்)

8. காய்கள் பெருகும் கஞ்சா அபின்பெருகும்
(சூது போன்ற கேடுகள் பெருகும் மற்றும் கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை மக்கள் பயன்படுத்துவது பெருகும்)

9. சன்னாசி நிஷ்டை தவறி யலைவார்கள்
(சன்யாசி என வெளியில் காட்டினாலும் அவர்கள் தங்களது தவத்தை தவறவிட்டு ஆசை மயக்கத்தில் அழைவார்கள்)

10.சட்ட மழியும் சந்தியம்பல மிடியும்
(மக்கள் தர்மத்தின் அடிப்படையில் பின்பற்றி வந்த சட்டம் அழிந்துவிடும் மற்றும் நாட்டாமை முறையில் நியாயம் பேசும் முறை அழிந்துவிடும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *