அய்யா சரணம்

அய்யாமார்களே

நாளை கார்த்திகை மாதம் ஆரம்பிக்கிறது

கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி நமது அகிலதிரட்டு அம்மானை தினவிழா என்பதை நாம் எல்லோரும் அறிவோம்

இருப்பினும் உலக மக்கள் எல்லோரையும் அறிய செய்ய நாம் ஒரு கருவியாக செயல் படுவோம்

நாளை முதல் அகிலதிரட்டு அம்மானை தினவிழாவை நமது இல்லங்களிலும் நாம் சார்ந்து இருக்கும் பதிகளிலும் கொண்டாட ஏற்பாடுகளை துவக்குவோம்

அகிலதிரட்டு அம்மானை தினவிழா அன்று நமது இல்லங்களிலும் நாம் சார்ந்து இருக்கும் பதிகளிலும் நிறைய தீபம் ஏற்றி விழாவை கொண்டாடுவோம்

அகிலதிரட்டு அம்மானை தினவிழா அன்று குறைந்த பட்சம் ஒருவருக்காவது ஒரு அகிலதிரட்டை கொடுத்து விழாவை சிறப்பித்து அகிலதிரட்டை உலகறிய செய்வோம்

அன்றைய தினம் நாம் எல்லோரும் மாறி மாறி வாழ்த்துக்களை சொல்லி அய்யா சொன்ன அய்யாவழி படி நடப்போம் என உறுதி மொழி மேற்கொண்டு செயல் படுவோம்

அய்யா உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *