சுவாமிதோப்பு பதி – மணவை பதி

மணவை பதி

பாரத திருநாட்டின் தென்முனையில் அமைந்துள்ள மூன்று கடல் சூழ்ந்த நகரமே கன்னியாகுமரி ஆகும்.இதன் அருகில் உள்ள ஒரு இடமே சாமிதோப்பு ஆகும்.இது தெச்சணம் என்றும்அழைக்கபடுகிறது.தெச்சணம் என்றால் சிவ பூமி என்று பொருள்.
கலி என்ற மாயையில் சிக்கி தவிக்கும் மனிதர்களை கரை ஏற்ற பரம்பொருள் விஷ்ணு அய்யா வைகுண்டமாய் 1008 இல் மாசி மாதம் 20 இல் அவதரித்து தேவர்கள் சூழ திருச்செந்தூர் விட்டு தெச்சணம் வந்தார்.அங்கு அவர் ஆறு ஆண்டுகள் தவம் செய்து சாதியால் தாழ்த்தப்பட்ட மக்களை உயர செய்தார்.மேலும் தண்ணீர், மண்ணால் பல நோய்களை தீர்த்தார்.சப்த மாதர்களையும் ,தெய்வ மாதர்களான மகாலெட்சுமி,பகவதி,பார்வதி,மண்டைகாட்டால் ,வள்ளி,தெய்வானை,பூமடந்தை ஆகியோரின் சக்திகளை இகனை மனம் புரிந்தார். இத்தனை சிறப்புகளை கொண்ட பதி சாமிதோப்பு பதி ஆகும்.

முத்திரி கிணறு

முத்திரி கிணறு அய்யா வைகுண்டரால் அனைத்து சாதி மக்களுக்காக அமைக்கப்பட்டது ஆகும்.முன்வினைகளை மாற்றும் கிணறு முத்திரி கிணறு ஆகும்.பதிக்கு செல்லும் பக்தர்கள் இங்கு பதமிட்டு அரகர சிவசிவ நாமம் சொல்லி பதிக்கு செல்வார்கள்.
அகிலம் இக்கிணற்றின் தோன்றலை பின்வருமாறு கூறுகிறது,
” கெங்கைக் குலதாயை கிருஷ்ணர் வரவழைத்து
தங்கையே என்னுடைய நாமமது கேட்டதுண்டல்
பால் போல் பதம்போல் பாவந்தீர் அன்பருக்கு
சூழ்புத்தி வன்பருக்கு சூது செய் மங்கையரே”

வடக்கு வாசல்

வடக்கு வாசல் அய்யா வைகுண்டர் தவம் செய்த இடமாகும். இங்கு வழிபட ஒரு நிலை கண்ணாடி மட்டுமே வைக்க பட்டுள்ளது. அவரவர் தங்களுக்குள்ளே இறைவனை காண வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.இங்கு பக்தர்கள் அய்யாவிடம் மாப்பு கேட்டு திருமண் எடுத்து நெற்றியில் வைப்பார்கள் .பள்ளியரையினுள் சிவமேடை அமைக்கப்பட்டு அதன் மேல் அய்யா அமர்ந்து இருப்பார்.வானுயர்ந்த கொடிமரமும், கோபுரமும் சிறப்பு மிக்கவையாகும்.

image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *