தர்மம் பெரிது தாங்கியிரு என்மகனே

*”தர்மம் பெரிது தாங்கியிரு என்மகனே”*.
*” நல்லோர்கள் இட்ட தர்மம் நாள்தோறும் பொங்குமடா”…*
அன்போர்க்கும் ஈயு……..
ஆகாப்பேர்க்கும் ஈயு……….
வன்போர்க்கும் ஈயு…………
வழி போவோர்க்கும் ஈயு………..
சகலோர்க்கும் ஈந்து தானிரு நீ என்மகனே….!!!
வலியோர்க்கும் ஈயு……..
வழிபோவோர்க்கும் ஈயு………
மெலியோர்க்கும் ஈயு…………..
மேன்மையாய் என்மகனே……!!!

ஆர்க்குமிக ஈந்தால்
அந்தத் தர்மமே கொதிக்கும்……..
போர்க்கு நினைத்தாரை பெலி கொடுக்கும்
“”தர்மம் அது”” ……
தர்மந்தான் (வாளு/)வாழு  சக்கரங்கள் அல்லாது……..
தின்மையது கேடு செப்பக்கேள் என்மகனே……. !!
“சாதிபதிநெட்டும் தன்னால் கேடாகும்வரை
நீதி அழியாதே நீ சாபம் கூறாதே”… அகிலம். *நாராயணர்*

தான,தர்மம் செய்து வாழ்வோமானால்  காணாலாம்,மேலும் நாம் செய்யும் தர்மம் அதர்மங்களை/அக்கிரமகாரர்களை அழித்து,தருமயுகத்தை படைக்கும்….

அன்பானவர்க்கும், ஆகாதபேர்க்கும்,வம்போர்க்கும்,வழி போவோர்க்கும்,வலியோர்க்கும்,மெலியோர்க்கும்,…இப்படி சகலோர்க்கும் ஈந்து/கொடுத்து தர்மம் செய்து வந்தால் … *அந்த தருமமே கலியை அறுக்கும்/அழிக்கும் வல்லமை கொண்டது*…

உருவமில்லா கலியை அழிக்க, *தர்மம் தான் வாள்*…

தருமத்தை செய்ய எப்போதும் விரும்ப வேண்டும் என்பது இதன் பொருள். தருமம் செய்வதற்கு பொருள் மட்டுமல்ல மனமும் அவசியம் வேண்டும்.பொருள் இல்லாவிட்டால் தருமம் செய்ய முடியாது என்றாலும், ஒருவனுக்கு அறஞ்செய்ய வேண்டும் என்னும் விருப்பம் மாத்திரம் இருக்குமானால், ஒரு காலத்தில் அவர் செய்த நல்வினைப்பயனால் பொருள் கிடைக்கின்ற சமயத்தில் அவர் தர்மம் செய்வார் என்பது நிச்சயம்.

ஆதலால் முதலில் அறத்தைச்செய்ய எல்லோருக்கும் விருப்பம் இருக்க வேண்டும். விருப்பம் உண்டானால் அதற்கான வழியும் ஏற்படும்!. ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டாகிலும் தர்மத்தை செய்ய முயற்சி செய்ய வேண்டும்.ஏனென்றால் தர்மம் நன்மையை உண்டாக்கும் சக்தியுடையது.

*’தர்மமே செயம்’ ‘தர்மம் தலை காக்கும்’*.. என்னும் பழமொழிகளே! தர்மத்தின் சிறப்பை எல்லோருக்கும் எடுத்துக் காட்டும். தர்மம் எப்படி தலைகாக்கும் என்பது பெரும்பாலும் நாம் அறிந்துதான் இருக்கிறோம். என்றாலும்…..

கர்ணன் எப்போதும் தர்மம் செய்வதிலேயே நாட்டமுள்ளவன், யார் எதை கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் மனமுடையவன். கொடையில் சிறந்தவன் கர்ணனே…!! என்று எல்லோராலும் புகழ்ந்து பேசப்பட்டான்!

இவன் பிறந்தபோது கவச குண்டலங்களுடன் பிறந்தவன்.அந்த கவசகுண்டலங்கள் இவனிடம் உள்ள அளவும் அவனை உலகத்தில் எவராலும் வெல்ல முடியாது.

இந்திரன் ஒரு முறை மாறுவேடம் கொண்டு கர்ணனிடம் வந்து அவனுடைய கவச குண்டலங்களை கேட்க, கர்ணன் தன் உயிருக்கு உயிரான அவற்றையும் மனக்களிப்புடன் தானம் செய்தான்!

மகாபாரத யுத்தத்தில் கர்ணன் தனது உயிர்த்தோழனான துரியோதனனுக்கு துணைவனாய்,அவன் சேனைக்குத் தலைவனாய் பேருதவி புரிந்து போர் செய்தான்.

போர்க்களத்தில் அடுத்தடுத்து அருச்சுனன் விட்ட அம்புகள் பாய்ந்ததில் அடிபட்டு மூர்ச்சித்து ரதத்தில் விழுந்து விட்ட கர்ணனைக் காப்பாற்றும் பொருட்டு அவன் இத்தனைநாளும் செய்த தருமத்தின் பலனாக “தருமதேவதை” அவனிருந்த ரதத்திற்கு முன் வெளிப்பட்டு நின்று அருச்சுனன் கணக்கில்லாமல் சொரிந்த அம்புகூட்டங்களையெல்லாம் கர்ணன் மேல் படாமல் தாங்கி நின்றாள்.

அருச்சுனனும் அம்பு போட்டு போட்டு கை அசந்து போய் விட்டான்,…இதையெல்லாம் கண்டு நின்ற பலரும் தர்மம் தலைகாத்து நிற்பதை பார்த்து வியந்து கர்ணனை புகழ்ந்தனர்.

அப்போது தர்மம் ஜெயித்து நிற்பதையும்,அருச்சுனன் தோற்றத்தையும் அறிந்த கிருஷ்ணன் ஒரு சாதாரண மனிதனைப் போன்ற கோலத்தில் இரப்பனை போன்று மயங்கி சரிந்து கிடக்கும் கர்ணனிடம் போய் அவன் செய்துள்ள தர்மத்தின் பலன் முழுவதையும் தானமாக கொடுக்க வேண்டினான்.

சாகுந்தறுவாயில் கிடக்கும் கர்ணன் இந்த நிலையிலும் தர்மம் செய்ய சமயம் வாய்த்ததே அதுவும் தர்மமாக கேட்கும் பொருளும் தன்னிடம் இருக்கிறதே என்று மிக மகிழ்ச்சியோடு தன் தருமத்தின் பலனையெல்லாம் தானம் கொடுத்து விட்டான்.அதன் பிறகுதான் கர்ணனை அருச்சுனனால் கொல்ல முடிந்தது. தர்மம் உள்ளவரை அவனை கொல்ல முடியவில்லை.

அய்யாஉண்டு..

ஆதலவிளை அய்யா வைகுண்டர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *