தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம் -அகிலம்

இந்த உலகத்திலே வாழ வழி இல்லாமல் அல்லது இயலாமல் தாழ்ந்து கிடப்பவர்களை  தற்காப்பதற்காக(வாழ வைப்பதற்காக) நாம் செய்யும் செயல்தான் உண்மையான தர்மம்…

தாழ்வு இரு வகை.. அவை ஒன்று பொருளாதாரத்தில் மற்றொன்று ஆன்மீக ஞானத்தில்..

இப்படி பொருள் இல்லாத பேருக்கு பொருள் கொடுத்து தற்காப்பதையும் ஞானம் இல்லாத பேருக்கு ஞானத்தை கொடுத்து தற்காப்பதையுமே மேன்மையான தர்மம் என்கிறார் அய்யா… இந்த ஒரு திருமொழியை நாம் ஒழுங்காக உணர்ந்து வழி நடந்தாலே நமக்குள் அத்தனை நல்ல பண்புகளும் தானாக வந்து விடும்.. எப்படி எனில் தாழக்கிடப்பாரை தற்காப்பதே நமது லட்சியமாக இருப்பதால் நம்மை விட பொருளாதரத்தில் உயர்ந்தவர்களை பார்க்கும் போது பொறாமை வராது மாறாக மனம் மகிழ்ச்சிதான் அடையும்.. கோபம் வராது அன்புதான் பெருகும்..பிறர் பொருளை அபகரிக்கும் எண்ணம் வராது..மாறாக கொடுக்கும் எண்ணமே பெருகும்.. இப்படி பற்பல… ஆகவே எம்பெருமான் தர்மத்துக்கு கொடுக்கும் வரையறைக்கு ஈடு இணை எதுவும் இல்லை..
“தாழக்கிடப்போரை தற்காப்போம்
தர்மயுக வழி நடப்போம்”

image

ஆதலவிளை அய்யா வைகுண்டர்

One thought on “தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம் -அகிலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *