மகாவிஷ்ணு ஏழு லோகத்தருக்கும் கொடுத்த வாக்குறுதிகள்

அய்யா துணை

1. தேவர்களுக்கு :
“மக்களே நீங்கள் வையகத்திலே பிறந்தால்
வக்கலிய னேதுவினால் மாயமுங்களைச்சூழ்ந்து
என்பேரும் ஈசர் ஏற்ற உமையாள் பேரும்
தன்பேருஞ் சொல்லாதே என்று தடுத்தடிப்பான்
ஆனதால் சாவுவரும் ஆனாலும் உங்களுக்கு
மானமது மாறாமல் மாறியவ் வினத்திலுறும்
இப்படியே நானுங்களை ரட்சித்துக் காக்குமட்டும்
எப்படியுமுங்களுயிர் இதில் விட்டகலா தென்றார்”….

2. எமலோகத்தார்களுக்கு: (தபோதனர்)
“உங்கள் குடும்பம் உடையோன் பதம் வணங்கி
எங்களுட மோட்சமதில் ஏகி இருப்பதினால்
ஆனதால் அவர்கள் அனுக்கிரகந்தன்னாலே
மானமுடன் மனுட வையகத்தில் வாழ்ந்திருந்தீர்
இன்னமுன் வழிகள் என்மகவா யங்கிருக்க
வன்னமுட னவ்வழிதான் வாய்த்த சாணார் இனத்தில்
போய்பிறந்து நன்றாய் புவிமீதிலே வளர்ந்து
மேல் பிறவி வந்திடினும் மேவும் உயிர் அவ்வழியில்
இப்படியே பிறந்து என்றுமிடறு செய்து
எப்படியுமென்குலத்தாலே இருளகன்று
உன்பிறப்போர் தன்னால் உதவி பெற்று வாழுமென்று எம்பெருமான் சொல்லி இனத்தில் பிறவி செய்தார்”…..

3. சொர்க்கலோகத்தார்களுக்கு :
“நான் பிறவிக்கெல்லாம் நம்பி கூடப் பிறந்து
என்பிறகே வந்து எனக்கேவல் செய்ததினால்
இன்னம் பிறவி இனத்திலுயி ரென்மகவாய்
வன்னமுள்ள சான்றோர் வழியி லிருப்பதினால்
காலக் கலிதான் கட்டழிந்தென் மகவு
மேலுகமாள விடை நித்திச் சிருப்பதினால்
நீங்களும் போயங்கே நிங்களுட தன்வழியில்
மங்களமாய்த் தோன்றி வாழுங்கோ என்மகவாய்
வாழுகின்ற நாளையிலே வருவேனா னுங்களிடம்
நாளும் பல ஊழியங்கள் நமக்கு மிகச் செய்திருங்கோ
ஏவல் கண்டு உங்களை இரட்சித்து ஆண்டு கொள்வேன்”..

4. பிரம்மலோகத்தார்களுக்கு:
“பொல்லாத குற்றம் பிரம்மனுக்கு செய்ததினால் …..
சென்ற ரிஷிஎல்லாம் செடமெடுத்து பூமிதன்னில்
மண்டலங்கள் தோறும் வாழுவார் கண்டீரே ……….
தீன்சோறருந்தாமல் செலங்குடித்து நாள்தோறும்
அற்பமுடன் கொஞ்சி அவன் சிலநாள் தானிருந்து
பிரம்ம வைகுண்டம் பிறப்பெடுத்து நான்தானும்
வரம் வைத்தவனை வதைத்துப் பின்னுன்னினத்தில்
படைத்துத் தருவேன் பார்த்துக்கோ லெக்கெனவே …..
இப்படியே அன்பத்து அஞ்சி இருள்சிகளும்
அப்படியே அவரவர்கள் அற்புதங்கள் வேறு செய்து
இருப்பாரவர்கள் இராட்சியத்துகொன்றாக
பருப்பா ரவர்கள் பழுது கைவாத்ததென்று
இருக்குமந்த நாளையிலே யான்வருவேன்தெச்சணத்தில்
ஒதுக்கி சன்னாசிகளை ஒன்றொன்றாய் கொண்டு வந்து
வைக்கசெய்வேன் வரத்தை மனுவறிய சிலரை
செயிப்பேன் பலபேரை செகமெல்லாம் அறிய
வதைத்து ஒவ்வொன்றாய் மனுவில் வரத்தாக்கி
நிதைத்துங்கள் தன்னோடு நிலைனிறுத்தியே தருவேன்
ஆனதால் நீங்கள் அவனியி லென்மகவாய்
இனமாயுங்கள் இனத்தில் பிறந்திருங்கோ
வாழுங்கோ கலியன் மாய்கையினால் சாவுவந்தால்
பாலுபோ காதேவுயிர் பதியுமுங்கள் தன்வழியில்
நான் வந்து உங்களையும் நாட்டமுடனெடுத்து
மானொத்த தர்ம வையகத்தில் வாழவைப்பேன் “….

5. வைகுண்டலோகத்தார்களுக்கு:
“இல்லாதெளியோர்க்கு  எனை நினைந்து தர்மமிட்டு
பல்லுயிர்க்கு இன்னுயிராய் பார்த்தீரொருப்போலே
நீத நிலைமை நிறுத்தி எனை நினைந்து
சீதமாய்ப் பூமி செலுத்தியர சாண்டிருந்து
வந்தீர்கள் கூட்டோடு வைகுண்டமானதிலே
சேர்ந்தீர்களா கிடினும் செய்த நன்றி தான்பார்த்து
உங்களுக்கின்னாள் வரையும் உதவி
தரவில்லையல்லோ
தங்களுக்கு நன்மை தரவேணு மானாக்கால்
இன்னுமொரு பிறவி என்மகவிலே பிறவும்
வன்னப் பிறவி என்மக வழியில் தான்பிறந்தால்
ஏழு யுகக்கணக்கும் யான்கேட்டு உங்களுக்கு
மாளுவ தில்லாமல் மறுபிறப்பும் அறுத்து
நம்முடைய சொத்தும் நாடி உங்களுக்கீந்து
மும்மடங்காய்த் தர்மம் ஓங்கி வளர்ந்தே இருப்பீர்…..
என்மக்களேழும் இயல் கலியில் பட்டுழன்று
வன்மக் கலியதனால் மாறிமிகச் செய்ததெல்லாம்
நான் பொறுத்து உங்களுக்காய் நானே தவசு பண்ணி
வான்சிவனுக் கேற்க வாய்த்த தவமிருந்து
மக்களேழு பேர்கள் வம்மிசங்கள் உள்ளதெல்லாம்
ஒக்கவோன்று போலே உகந்தெடுத்து உண்மையுடன்
நாடாள வைப்பேன் நல்லமக்க ளேழ்வரையும்
தாடாண்மையான சக்தியுமை தன்னாணை
நீங்களென்ன குற்றம் நிலையில்லா செய்தாலும்
தாங்கிப் பொறுப்பேன் தருவேன் நான் நல்ல புத்தி
உங்கள் கர்மமெல்லாம் ஒக்க துலைப்பதற்கு
மங்களமாய் சிவனை வருத்தித் தவசுபண்ணி
நானுங்களாலே நல்ல தவசிருந்து
மானுபங்கள் கெட்ட மகா கலியுகத்தில்
தாயுந் தகப்பனையுந் தான்பழித்த துற்கலியன்
பேயுங்கலிநீச பிறப்பை சோதித்தறுத்து
தாடாண்மை தர்மம் தழைக்க வைத்துங்களையும்
நாடாள வைப்பேன் நம்மாணை தப்பாது”….

6. சிவலோகத்தார்களுக்கு:
“நல்லது காண் வானவரே நானினிமேல் செய்பிறவி
இல்லறத்தை விட்டுத்தவம் இல்லைகாண் வேறொன்றும்
ஆனதால் பேடேன்றும் அருளி யிருளி யென்றும்
மானமில்லாரென்றும் வாராது மேல்பிறவி
ஆணுக்கொரு பெண் அன்றூழி காலமெல்லாம்
தோணுதலாய் ஒன்றாய்த் தொல்லூழி காலம் வரை
வாழ்ந்திருப்பாரென்றும் மக்கள் கிளையோடும்
தாழ்ந்திருப்பார் பேராய்த் தழைத் தோங்க எந்நாளும்
பேருதழைக்க பெருமையாய் வாழ்ந்திருப்பார்
ஊரொன்று யுகமொன்று உரையொன்றுக் குள்ளாக்கி
இறவாமல் பெண்ணோடு இருந்து மிக வாழ்வதல்லால்
பிறவியற்று வாழ்வார் பெண்ணுடனே அல்லாது
ஊர்மறந்து பேர்மறந்து உற்றக்கிளை மறந்து
பார்மறந்து தேசப்பவிசு மிகமறந்து
ஆடல் மறந்து ஆயிழையைத் தான்மறந்து
பாடல் மறந்து பக்கத் துணை மறந்து
அன்ன மறந்து அதிக மண மறந்து
சொர்ண மறந்து சுகசோபன மறந்து
நலமறந்து தேக நளின மிகமறந்து
மலசல மறந்து வளருந்தவப் பேறுமில்லை
இத்தனை நன்மைகள் எல்லாம் மிகக் கொண்டாடி
சித்திரமாய்த் திரும்பி பிறப்பத்தவராய்
என்பிள்ளை ஏழும் எடுத்தவழி யோரினமாய்
அன்புள்ள பேராய் அரசாள்வோம் கண்டாயே……
வல்ல மக்களான வாய்த்த சாணார் குலத்தில்
ஏழு மகவின் ஏற்ற வானோர் வழியில்
மாளுவந்தா லுமதிலே மாறாய்ப் பிறக்கவென்றும்
நாராயணர் புவியில் நல்ல மக்கள் ஏழ்வரையும்
சீராக வந்தேற்று செய்த வினையும் நீக்கி
ஊழுழிக் காலம் உயிரழியா வண்ணமுந்தான்
ஆழிக்கரை யான்மகவு அரசாள்வாரென்று சொல்லி
சொல்லிப் பிறவி செய்தார்காண் சாணாராய்”..

7. பரலோகத்தார்களுக்கு:
“எல்லோருமென் மகவாய் இனத்தில் பிறந்திருங்கோ
வல்லோரே யுங்களை நான் வந்தெடுப்போ மஞ்சாதே
என்மக்களேழும் ஈன்ற வழிச் சான்றோரை
பொன் மக்களான பூமக்கள் தங்களுக்கு
என்சொத்துமீந்து என்பெயரையும் கொடுத்து
தன்சொத்தோடே இருந்து தற்சொருபம்
கொண்டிருப்பேன்
இறப்பு பிறப்பும் இல்லாமல் என்மகவை
பிறப் பிறப்பின்றி பேருலகாள  வைப்பேன்
ஆனதால் தர்மயுக அரசுங்க ளுக்கருளி
மானமாய்த் தந்தோம் மாயாண்டி தன்னாணை”….. அகிலம்

அய்யா உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *