முகவுரை

அய்யா துணை

வைகுண்டர் அவதரித்தார்

“……கன்னிகள் மதலையான கற்பக குலங்கள் தன்னில்

மன்னிய மனுபோல் மாயன் மன்னுகத்துதித்தார் தானே……”

-அகிலத்திரட்டம்மானை

 ♦ கலியுகத்தில் நாம் வழிபடவேண்டியது அய்யா வைகுண்டரை மட்டுமே

♦ அகிலத்திரட்டம்மானை மற்றும் அருளாகமம் மட்டுமே இறை வேதம்

♦ நாம் வழிபட்ட 23 தெய்வங்களும் வைகுண்டருக்குள் ஒடுங்கி விட்டன. எனவே தனித்தனி வழிபாடு தேவையில்லை

அராகரா என்று கரம் தூக்கி அபயமிட்டு சிவசிவா என்று துதிக்கின்ற நந்தி மந்திரமே கலியழிக்கும் சிவ நாமம்

♦ இந்த உலகின் மனிதர்கள் அனைவருமே அய்யாவுக்கும் சப்தகன்னியர்க்கும் பிறந்தவர்களே.

♦ கோமம் வளர்த்தல், சிலை வழிபாடு, தீபாரணை, ஆராட்டுதல், மஞ்சணை நீராடல், அபிசேகம், நவகிரக வழிபாடு, ஆட்டுக்கொடை பூசை முழுமையாக தவிர்த்தலே நலம்

♦ பொறாமை, சினம், பேதம் பாராட்டுதல், பணிவின்மை, தற்பெருமை போன்றவற்றை அடியோடு வேரறுப்போம்.

 “…….நாட்டுமுடி யிறக்கி நாராயணர் பதியாள வருகிறார்

நம்பி பிடித்திடுங்கோ அய்யா சிவ சிவா சிவ சிவா அரகரா அரகரா…….”

-அருளாகமம்

கூடி சிரிப்பாரை குடலை பிடுங்கிடவும்
கும்பிட்டு விழுவாரை கூட்டி அணைத்திடவும்
அவதாரம் எடுத்து வரும்
ஆதிபரம் பொருள்
அய்யா சிவ வைகுண்டம்
பதம் தொழுவோம்
தர்ம பதி கண்டு வாழ்வோம்

அய்யா உண்டு