அய்யா சரணம்

அய்யா உண்டு. அய்யா நாங்கள் உன் வழி நடக்கவே நல்ல அகிலம் தந்தாய்.

அன்று திருவிதாங்கூர் மன்னன் உம்மை மகாவிஷ்ணுவாக ஏற்க்க மறுத்து, புத்தியற்று மனிதன் என்றான், ஆனால் மன்னன் அவையில் இருந்த பூவண்டரோ மன்னனையே எதிர்த்து, விளக்கின் ஒளிபோல் வீரத்தனமாய், மன்னனின் சொல்வது தப்பு என்று மன்னனுக்கு நேராகவே சுட்டிக்காட்டி உம்மை பரம்பொருளின் அவதாரம் என்றார். அன்று உம்மை நாராயணராய் ஏற்க்க மறுத்த மன்னனின் தப்பை சுட்டிக்காட்டிய பூவண்டர் செய்தது சரி என்றால், இன்றும் உம்மை நாராயணரின் அவதாரமாக ஏற்க்க மறுத்து எங்கள் பாட்டனார் என்றும், முத்துக்குட்டி என்றும், சமூக சீர்திருத்தவாதி என்றும், மனிதன் என்றும் சொல்வோர் யாராக இருந்தாலும் அவர்களை நீவீர்தந்த அன்புவழியில் எதிர்ப்பதும் சரிதானே எங்கள் அப்பாவே?

வேதம் கற்ற வேதியன் ஒருவன் தீயவையை கண்ணால் காணகூடாது என்பர். ஆனால் உம்மை மன்னன் கடுவாய் கூட்டில் அடைத்ததை காணவந்து மாண்டு போனான் அந்த வேதியன். எட்டாத சொருபமாய் எங்கும் நிறைந்த பரம்பொருளான உனக்கு ஒரு உருவம் கொடுத்து போட்டோ வைத்து *வரம்பு தப்பாதே வழிதவறி நில்லாதே*என்னும் அய்யாவின் வார்த்தையை மீறிவிட்ட செயலை அகிலம் படித்த எங்களால் தடுக்கத்தான் முடியவில்லை, எதிர்க்கவுமா கூடாது?

தவம் இருந்த முனிவனை சோதிக்க நீயும், அம்மை உமையாளும் பாசுவும், கன்றுமாக வந்தீர்கள். கன்றை புலி கடிக்கவந்த போது நீர் பசுவாக நின்று கன்றை காப்பாத்தும்படி முனியிடம் முறையிட்டீர். ஆனால் அந்த முனியோ தடுக்கவில்லை, தடுக்கத்தான்வில்லை ஒரு சத்தமாது போடு கன்று காப்பாத்தப்படும் என்றீர் ஆனால் முனி அது கூட செய்யவில்லை. தன் கண்முன் நடக்கும் அநியாயத்தை தடுக்காததாலே முனியின் தவம் தடைப்பட்டதாக சொன்னீரே எங்கள் அய்யாவே?. எங்கள் கண்முன்னே உமக்கு வெள்ளி வாகனம் செய்ய தர்மகாசு பெற்று, செய்த குதிரையை சிறைவைத்து 8 ஆண்டுக்கு ஒருமுறைத்தான் விடுவிக்கும் அநியாயத்தை அறவழியில் கேட்கின்ற மன சக்தியை எங்களுக்கு தாரும் அய்யா.

பாவத்தைக் காணாதே பகட்டுமொழி பேசாதே

உம்மை சிறைப்பிடிக்க வந்த கலி நீச மன்னனின் படையை அடிக்க சாடிய நல்ல சான்றோர்குல மக்களை பொறுதியுடன் இருக்க சொன்னீர். ஆனால் உம்மை சிறையில் அடைத்து விடுவித்த பின்னர் *விளக்கு ஒளிபோல் வீரத்தனமாய்* இருக்க சொன்னீர், அதாவது யார் தப்பு செய்தாலும் அவர்களை அடிக்கவோ, அசிங்கமான வார்த்தையில் திட்டவோ, வன்முறை செய்யவோ கூடாது, ஆனால் யாராக இருந்தாலும் நீர் தந்த அன்புவழியில், தர்மமாக, பொறுமையாக தப்பை எதிர்க்க சொன்னாய். வலியோர்க்கு, எளியோருக்கு என்று தனிதனி நியாயம் பேசாமல் நீதியாய் நிக்க சொன்னீர். நீர் சொன்ன சட்டத்தை கடைப்பிடிக்கும் மன சக்தியும் எம்பெருமானே நீயே எங்களுக்கு தாரும்.

நாட்டில் ஒருவனுமன் நல்லவனை நானயச்சு
கோட்டிசெய் யென்றுரைப்பேன் கோமனே உன்காலம்.

  அய்யா உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *