மணவைப்பதியில் வைகாசி திருநாள் தொடக்கம் – 26/05/2017

வைகாசி திருவிழா

சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசுவாமி தலைமைப்பதியில் வைகாசி மாத திருவிழா மே மாதம் 26 -ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. வைகாசி திருவிழா ஒவ்வொரு வருடமும் இரண்டாம் வெள்ளிக்கிழமை தொடங்கி பதினோரு நாட்கள் நடைபெறும். தேரோட்டம் ஜன் 5ம் தேதி திங்கள் கிழமை நடைபெறுகிறது . 

  முதல் நாள் திருவிழா வாகனப் பவனியின் போது தொட்டில் வாகனப் பவனியும், இரண்டாம் நாள் திருவிழா அன்று மயில் வாகனப் பவனியும், மூன்றாம் நாள் திருவிழா அன்று அன்ன வாகனப் பவனி நிகழ்கின்றது. அன்ன வாகனப் பவனிக்கு வாகனத்தை வெண்மை வண்ண மலர்களால் அலங்கரிக்கின்றனர். நான்காம் நாள் திருவிழா அன்று புலி (கடுவாய்) வாகனப் பவனியும், ஐந்தாம் நாள் திருவிழா அன்று அய்யா வைகுண்டர் வாகனப் பவனி நடைபெறுகின்றது. இவ் வாகனப் பவனிக்கு வாகனத்தை பச்சை வண்ணத்தால் அலங்காரம் செய்கின்றனர்.ஆறாம் திருவிழா அன்று சர்ப்ப வாகனப் பவனியும், ஏழாம் திருவிழா அன்று கருட வாகனப் பவனியும் நடைபெறுகின்றது. கருட வாகனப் பவனிக்கு வாகனத்தைச் சிவப்பு வண்ணத்தால் அலங்காரம் செய்கின்றனர். எட்டாம் திருவழா அன்று குதிரை வாகனப் பவனி சிறப்பாக நடைபெறுகின்றது. இவ் வாகனப் பவனி நிறைவு பெற்றவுடன் அய்யா வைகுண்டர் முத்திரிக் கிணறு வந்து கலியை வேட்டையாடும் நிகழ்வு குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிக்கு அம்பையும் வில்லையும் பயன்படுத்துகின்றனர். அதன் பிறகு பக்தர்கள் முத்திரிக் கிணற்றின் புனித நீரை அருந்துகின்றனர். ஒன்றாம் திருவிழா முதல் ஏழாம் திருவிழா வரை சாதி, மத, இன வேறுபாடுகளின்றி வீடுகள் தோறும் பிச்சை எடுத்து ( யுகார குரு பிச்சை ), அப்பொருட்களைக் கொண்டு எட்டாம் திருவிழா அன்று பெரிய உகப்படிப்பு படித்து மகா அன்னதானம் நடைபெறுகின்றது . எட்டாம் திருவிழா அன்று நடைபெறும் அன்னதானத்திற்குப் பிச்சையாக அரிசி, நெல், காசு, காய்கறிகள் என தங்களிடம் இருப்பதைக் அன்பாக எல்லா இன, சாதி, மத மக்களும் அளிக்கின்றனர்.ஒன்பதாம் திருவிழா அன்று அனுமான் வாகனப் பவனி நடைபெறுகின்றது. பத்தாம் திருவிழா அன்று இந்திர வாகனப் பவனி நடைபெறுகின்றது. பதினொன்றாம் திருவிழா அன்று தேரோட்டம் நடைபெறுகின்றது.அனைவரும் வருக, அய்யாவின் அருள் பெருக!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *