அய்யாவே நீயே என்றும் துணை.

பசு கொலையின் பாவத்தை சொல்லி அதனை காக்க வலியுறுத்தும் அகிலத்திரட்டு அம்மானை:

1. ஆதி சான்றோர்கள் 7 பேர்க்கும் அய்யா நாராயணர்  பசுவின் பாலையே ஊட்டியே வளர்த்துள்ளார்.

2. அம்மைமார்கள் ஏழுவரின் தவம் நிறைவேறும் தருவாயில் அவர்கள் நாங்கள் என்ன தவறு செய்தோம் என உமையவளிடம் கேட்பதை அகிலம் 

“கற்பினையை மறந்தோமோ காராவை கொன்றோமோ” 

என கேட்டதாக கூறுகின்றது. இதன்மூலம் பசுவை கொல்வது பாவம் என அகிலம் உணர்த்துகின்றது.

3. துபராயுகத்தில் தர்மர் ஆண்ட குரு நாட்டை சிறப்பாக சொல்லும் அகிலத்திரட்டு அம்மானை துரியோதனன் ஆண்ட அஸ்தினாபுரத்தின் அவலத்தை கூறும் போது                        

கோவுகளுக்கு நீர் குடிக்கக் கிடையாது” 

என்கிறது. கம்சனின் கொடுங்கோள் ஆட்சியை சொல்லும் போது
“ஆவுதனை அடைத்து அதற்கிரைகள் போடாமல்
கோவுதனை கொல்வான் கொடும்பாவி நெட்டூரன்”
என்கிறது. பசுவை கொல்பவனை மற்றும் பட்டினி போடுபவர்களை கொடும்பாவி என  அய்யா கூறுகிறார்.

4. “பசுவை அடைத்து பட்டினிகள் போடாதே” என அய்யா நமக்கு விஞ்சை(உபதேசம்) அருள்கிறார்.

5. நமது கண் முன்னே பசு வதைக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்பதை அய்யா அகிலத்தில் வரலாற்று கதையின் மூலம் நமக்கு அறிவிக்கின்றார். ஒருமுறை காட்டில் கடும் தவசு செய்து கொண்டிருந்த முனிவனின் நீதியை சோதிக்க முடிவு செய்த சிவன் தான் பசுவாகவும், உமையவள் கன்றாகவும் வேடம்மிட்டு முனிவரின் அருகில் செல்கின்றனர். அப்போது அங்கு வந்த ஒரு கடுவாய் பசுவின் கன்றை கடித்து இழுத்து செல்ல அதனை சென்று தடுக்கும்படி முனிவரிடம் கன்று முறையிடுகிறது. தடுடுக்காததால் இங்கு இருந்தாவது சத்தம் போட்டு தடுக்க வேண்டியது பசு. அப்போதும் அந்த முனிவன் தடுக்காத காரணத்தினால் அவனின் தவம் நிறைவேறவில்லை. இதன் மூலம் ஒரு பசுவை காப்பது தவத்தைவிட முக்கியம் என அகிலம் அழகாக கூறுகிறது.

6. கலியுகத்தின் தர்ம, நியாயம், பாரம்பரியம் எல்லாம் எப்படி சீரழியும் என முன்பே தீர்க்க தரிசனமாக சொன்ன அய்யா   

“கங்கை கரைதனிலே காராம் பசுவை கொல்ல கண்ட கலியாச்சே”

என்கிறார். பசுவை கொல்வதை பாவமாக கலியில் மக்கள் கருதமாட்டார்கள் என்பதை மேற்க்கண்ட அருள்நூல் வாசகம் மூலம் அறியமுடிகிறது.

மலிவாக மாட்டு இறச்சி கிடைக்கிறது என்பதற்காக பசுவின் கொலைக்கு துணை போனால் கூடவே நிறைய பாவமும் சேருவதாக அகிலத்திரட்டு ததெளிவாக கூறுகின்றது.

    நமது இயற்கை விவசாயத்தை காக்கவும், ஆரோக்கியமான உணவினை பெறுவதற்க்காக கூட பசுவினை காப்பது நமது கடமை ஆகும்.

அய்யா உண்டு. அய்யா உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *