அய்யா உண்டு Loading...

ஆதலவிளை, அய்யா வைகுண்டர் திரு நிழல்தாங்கல்

//ஆதலவிளை, அய்யா வைகுண்டர் திரு நிழல்தாங்கல்

அய்யா சரணம் !!                                     வைகுண்டா சரணம்!!

ஒன்றுக்கு மலைய வேண்டா முகபர னானை

என்றுக்கு மலையில் மீது லேற்றிய தீபம் போல

கன்றுக்குப் பால் போலுங் கண்ணுக்குப் புருவம் போலும்

என்றுக்கு மக்கா உங்க ளிடமிருந் தரசு வாழ்வேன்- அய்யா வைகுண்டர்

உபகார நாதனாகிய அய்யா வைகுண்டர் ஆணையிட்டுச் சொல்கிறேன். 

எல்லாம் வல்ல எல்லாமும் ஆன வல்லத்தான் வைகுண்ட பரம்பொருள் திருவருளால், ஆதலவிளை என்னும் ஊரில் உள்ள அருள் தலத்தில் அய்யாவின் அருட்பெரும் கருணையால் பற்பல அற்புதங்களும் அதிசயங்களும் நடத்தி அய்யா அருளாட்சி புரிந்து கொண்டு இருக்கிறார். அய்யாவின் அருளால் ஆதலவிளையில் அய்யா வைகுண்டர் திரு நிழல்தாங்கல் சுமார் 150 ஆண்டுக்கு முன் ஆதலவிளை ஊர் சான்றோர்களாள் சிறிய பணை ஓலையில் குடில் அமைத்து பணிவிடை செய்து வந்தனர். அந்த தாங்கல் இன்று இராஜகோபுரத்துடன் புதிய தாங்கல் ஆக வளர்ந்து உயர்ந்து உள்ளது. இந்த தாங்கல் வைகுண்டர் ஆண்டு 173-ம் ஆண்டு சித்திரை மாதம் 9-ம் தியதி (22-04-2005) வெள்ளிக்கிழமை அன்று திரு. பாலபிரஜாபதி அய்யா தலைமையில்; திரு.P. அரிராமகிருஷ்ணன் அய்யா (A.P.N.Plaza, A.P.Tiles உரிமையாளர்), ஸ்தபதி.திரு.N.ராஜமுத்து (இராஜகோபுரம், தாங்கல் வடிவமைப்பு), அதலவிளை ஊர் பொதுமக்கள், நிர்வாகக்குழு மற்றும் திருப்பணிக்குழு முன்னிலையில்; உயர்திரு.சி.பா.இராமசந்திர ஆதித்தனார் அய்யா அவர்கள் (TMB இயக்குநர், தேவி வார இதழ்) இராஜகோபுரத்துடன் கூடிய புதிய நிழல்தாங்கலை திறந்து வைக்கப்பட்டது.

ஆதலவிளையின் சிறப்பு

அய்யா வைகுண்டர் தீமையே அழிக்க மூம்மூர்த்திகளின் மகன் என திருச்செந்தூர் கடலில் மணுவாக தோண்றினார் .அவர் அவதாரித்தது கொல்லம் ஆண்டு 1008 மாசி 20-ல். அய்யாவழி பின்பற்றுபவர்கள் “`அய்யா வைகுண்டர் அவதார தினம்“` என்று கொண்டாடுகிறார்கள்.

ஆண்டாயிரத்து எட்டு முன்னே அன்னை எனவே நீயிருந்தாய்

கூண்டாம் எட்டம் மாசியிலே குணமாய் நாராயணர் மகவாய்

சான்றோர் கதிகள் பெற்றிடவே தர்மகுண்டம் பிறந்து வொரு

குன்றாக் குடைக்குள் அரசாளக் கொண்டே போறேன் கண்டிரு நீ

-அகிலத்திரட்டு அம்மானை

அனைத்து அய்யா பதிகள் மற்றும் தாங்கலில் அய்யா அவதார தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.எல்லா தாங்கலிலும் முதன்மை தாங்கலாக ஆதலவிளையில் உள்ளது. இந்த தாங்கல் இப்பொழுது வான் உயர்ந்த வைகுண்ட மாமலையும், 71 அடி உயரம் உள்ள இராஜகோபுரம் கொண்டு அந்த பகுதியில் பரம்பொருள் அய்யா வைகுண்டரின் அன்புவழியை அனைவரும் அறிய செய்கிறது. அய்யா வைகுண்டர் அவதாரம் தினம், 19 மாசி வைகுண்டர் அவதாரம் முன் தேதியும் , 20 மாசி வைகுண்டர் அவதாரம் தினம் என இரண்டு தினங்களும் மிகவிமர்சியாக நடைபெறும். மாசி 19ம் நாள் மாலை வைகுண்ட ஜோதி வைகுண்ட மாமலையில் ஏற்றுதல், அவதார தினம் அன்று காவிகொடி ஊர்வலமும் இரவு அய்யா தொட்டில் வாகன பவணியிம் நடைபெறும்.

வைகுண்ட மாமலை

வைகுண்ட மாமலை இந்திய மேற்கு தொடர்ச்சி மலைகளின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதலவிளை அருகே அமைந்துள்ளது மகேந்திரகிரி மலை பகுதியில் இருக்கும் ஒரு மலை . இந்த மலை அய்யா வைகுண்டர் அவதார திருவிழா போது அய்யாவழி சமய மத முக்கியத்துவம் உள்ளது. வைகுண்ட மாமலை ஆனது பசுமை நிறைந்த செடி கொடிகளும் தாழ்வான மரங்களுடன் காண்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.இங்கு பல மருத்துவ செடிகளும் நீலவேம்பு ,ஆலமரம்,போன்ற சித்த மருத்துவ தாவரங்கள் உள்ளன.அது மட்டும் இல்லாமல் நற்மணம் தரும் சுக்குநாரி போன்ற குறிஞ்சி வகை செடிகளும் இங்கு வளர்கின்றன.இங்கு உள்ள செடி கொடிகள் சுற்று வட்டாரத்தில் உள்ள கோகளுக்கும் (மாடுகள்) ,ஆடுகளுக்கும் எக்காலத்திலும் மங்காத தாவர உணவை வழங்கி வருகிறது.

ஆதலவிளையில் அய்யா வைகுண்டர் அவதார தினம்

19 மாசி (3 மார்ச்) வைகுண்டர் அவதாரம் முன்தினம் ஆதலவிளை தாங்கலில் அய்யாவின் அன்புகொடி மக்கள் வைகுண்ட அவதார முன்தினம் காலை பதம்விட்டு உகப்படிப்பும் மதியம் உச்சிபடிப்பு முடிந்ததும் 2.00 மணி அளவில் சேன்டை மேளம் முழங்க “`அய்யா சிவசிவா அராகரா“` ஒலிக்க அய்யாவின் வைகுண்ட தீபம் ஏற்ற 10 தீபம் தாங்கி வரும்அன்பர் உடன் ஆதலவிளை ஊர் அன்புகொடி மக்கள் முன்னிலையில் அனைத்து சுற்றுவட்டார மக்களுடன் ஆதலவிளையில் இருந்து தலைமைபதியாம் சாமிதோப்பு செல்வார்கள்.ஒரு ஜோதி (சுடர்) வைகுண்டர் அவதார சின்னமாக இந்த மலை உச்சியில் ஏற்றபடும். அய்யா வைகுண்டர் அவதார திருவிழா கொண்டாட்டம் போது, இரண்டு ஊர்வலங்கள், திருவனந்தபுரம் இருந்தும்,திருச்செந்தூர் இருந்தும் ஆதலவிளை மலையே அடையும். அங்கு தர்மங்கள் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் மத திட்டங்கள் பல தொடர்ந்து இரவு முழுவதும் நடைபெறும்.மற்ற அய்யாவழி புனித இடங்களில் போலல்லாமல்,வைகுண்டமலை அய்யாவழி புனிதமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Vaikunda mamalai (1)

தினபணிவிடை விவரம்

காலை 5.30 மணிக்கு: அய்யாவுக்கு பணிவிடை, உகப்படிப்பு மற்றும் தர்மம் நடைபெறும்.

மாலை 6.30 மணிக்கு: அய்யாவுக்கு பணிவிடை, உகப்படிப்பு மற்றும் தர்மம் நடைபெறும்.

ஞாயிறு நண்பகல் 12.00 மணிக்கு: அய்யாவுக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு மற்றும் அன்னப்பால் தர்மம் நடைபெறும்.

திருநாள் விவரங்கள்

 முதல் ஞாயிறு திருநாள்-தமிழ் மாதம்

காலை 5.30 மணிக்கு : அய்யாவுக்கு பணிவிடை, உகப்படிப்பு மற்றும் தர்மம் நடைபெறும்.

நண்பகல் 12.00 மணிக்கு: அய்யாவுக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு மற்றும் அன்னப்பால் தர்மம் நடைபெறும்.

   மாலை 6.30 மணிக்கு: அய்யாவுக்கு பணிவிடை, உகப்படிப்பு, அய்யாவின் அன்பர்கள்                                                            பஜனை பாடி ஊர் சுற்றி வலம் வருதல் மற்றும் வாழப்படிப்பு

  இரவு 9.30 மணிக்கு: அன்னதர்மம் தர்மம் நடைபெறும்.

அய்யா வைகுண்டர் அவதார திருநாள்

மாசி 19ம் நாள்

Will update Soon….

மாசி 20ம் நாள்

Will update Soon…

முழுமாத திருநாள்-கார்த்திகை மாதம்

Karthikai…Will update Soon

வருடாந்திர திருநாள்-தமிழ் வருடம்

Chithirai…Will update Soon

தொடர்புகள்

நிர்வாகம்: ஆதலவிளை  ஊர் பொதுமக்கள்

தலைவர்:  செல்வராஜ் அய்யா

பணிவிடையாளர்: நாகலிங்கம் அய்யா

பேருந்து: 50, ஆதலவிளை (பேருந்து நிலையத்தில் இருந்து)

சமூக வலைதளங்கள்:

Facebook : Athalavilai Ayya Vaikundar Page, Athalailai Ayya Vaikunda Mamalai, Athalavilai Ayya Vaikundar

Whatapp: Athalavilai Ayya Vaikundar – 7373594212

Twitter: Athalailai_Ayya

Flickr, Instagram: Athalavilai_Ayya_Vaikundar

Website: www.athalailaiayyavaikundar.com

தர்மம் செய்ய விரும்பும் அய்யாவின் அன்பர்கள் அனைவரும் ஆதலவிளை  ஊர் நிர்வாகத்தை (அல்லது) ஆதலவிளை  அய்யா வைகுண்டர் திருநிழல் தாங்கல் பணிவிடையாளரை தொடர்பு கொள்க.  

புகைப்படங்கள்

Athalavilai, Ayya_Vaikundar_Thirunizhal_Thangal

Flickr Album Gallery Powered By: WP Frank

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: