அய்யா வைகுண்டர் அருளிய ஆகமங்கள்

1) அகிலத்திரட்டு அம்மானை

2) அருள் நூல்

அகிலத்திரட்டு அம்மானை

….இந்த ஆகம வேதநூலானது அன்னை மகாலட்சுமி ..மகாவிஷ்ணுவிடம்

“தீதகலும் நாயகமே சிறந்த மாலே,
தேசமதி லுமக்கெதிரித் தோன்றித் தென்று
நீதமுடன் தோன்றியங்கே யுகங்கள் தோறும்
நிந்தனைகள் படுவதெனக் கறிய சொல்வீர்”.. அகிலம்

என்று கேட்ட அன்னைக்கு இவ்வுலகம் தோன்றியது முதல் கலியுகம் வரை வந்த அசுரர்களின் வரலாற்றையும் அதற்கு நிகராக தான் தோன்றி அவனை அழித்ததையும் இனிவர இருக்கும் தர்மயுகம்  பற்றியும் தெள்ளத் தெளிவாக எடுத்தியம்பியதே அகிலத்திரட்டு அம்மானை ஆகும். 

நூல் நோக்கம்:

……ஏகம் ஒரு பரமாக இருக்க அதை இயக்கும் பொருட்டு பரப்பிரம்மமாகிய இறைவன் எண்ணியவுடனே உலக இயக்கம் ஏற்பட்டு அதன் காரணமாக வந்த நீடியயுகத்தில் குறோணி  என்னும் அசுர தோன்றலை தாமோதரனார் துண்டாறாக பிளந்து அழித்து, யுகாயுகங்கள் தோறும் இந்த ஆறு துண்டுகளின் தோற்றத்தின் மூலம் வரும் அசுரர்களை, தானே அவர்களுக்கு நிகராக தோன்றி அழிக்கும் பொறுப்பையும் இறைவன் ஏற்கிறார்.

..இப்படியாக, சதுரயுகத்தில் அந்த துண்டுகளில் ஒன்றில் முதல் தோற்றமான குண்டோமசாலி என்னும் அரக்கனை மகாமாலாக  நின்று அழித்து,…..

…..நெடியயுகத்தில் இரண்டாம் துண்டமதில் தோன்றிய  தில்லைமல்லாலன், மல்லோசிவாகணன் என்னும் அசுரர்களை திருமாலாக நின்று அழித்து,….

…..கிரேதாயுகத்தில்  மூன்றாம் துண்டின் தோற்றமாக வந்த சிங்கமுகாசூரன், சூரபற்ப்பன் ஆகியோருக்கு வீரபாகு தேவன் மூலம் புத்தி கூறியும் கேளாத காரணத்தால்,  ஆறுமுகவேலவனாகவும் ……

…..அவ்வுகத்திலே அவனை இரணியனாக பிறவி செய்து பிரகலாதன் மூலம் புத்தி உபதேசம் செய்தும் கேளாத காரணத்தால்  நரசிம்மமாகவும் நின்று அழித்தும்..

….. திரேதாயுகத்தில் நான்காம் துண்டில் வந்த ராவணனுக்கு அவனது தம்பியான விபீசணன் மூலம் புத்தி புகட்டியும் கேட்காத காரணத்தால்  ராமனாக நின்று அழித்து,……

……..துவராகயுகத்தில் ஐந்தாம் துண்டின் மூலம் வந்த துரியோதனனையும், கம்சன் முதலிட்ட தர்மத்திற்கு எதிராய் நின்ற பல சக்திசாலிகளுக்கும் பீஷ்மர் மூலம் புத்தி சொல்லியும் கேட்கவில்லை என்ற காரணத்தால்,  கண்ணனாக நின்று அழித்த…

……அதே மாயவன்தான் ஆறாம் துண்டின் தோற்றமாகிய கலியுக கலியனை  அழிக்க.,  வைகுண்டமாய் வந்தார் என்பதையும் தர்மயுக வரலாற்றையும் முன்னறிவிப்பாக மகாபாரத சகாதேவனாகிய அரிகோபாலனின்  அகமிருந்து இறைவன் உரைத்ததே அகிலத்திரட்டு அம்மானை.

அய்யாவழி ஆகமங்கள்