அய்யா துணை

சார்ந்தோர்க்கு சந்தனமாய் தர்மங் கொடுத்தருள்வார்

சேர்ந்தவர்க்கு நல்ல செல்வமுண் டாகும்
                                                              – அய்யா வைகுண்டர்

நமது அகில உலக அய்யாவழி சேவை அமைப்புக்கு  வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்.

நாம் அனைவரும் சேர்ந்து செயல்ப்பட்டு “அச்சுதேர் ஒடியும் முன்னே ஆண்டி வேலை செய்திடுங்கோ” என்னும் அய்யாவின் வாக்குப்படி நடப்போம். 

நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ

ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்
– அய்யா வைகுண்டர்

நமது அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள்:

1. நமது குழுவில் அய்யா வழியை தவிர வேறு எந்தவிதமான பதிவுகளையும் பதிவிட வேண்டாம் என அனைவராலும் ஏக மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

2. அமைப்பில் நாம் கருத்து பறிமாற்றம் செய்யும் போது அன்பாகவும்,பொறுமையாகவும்,அமைதியாகவும்,மரியாதையுடனும் செயல்ப்பட வேண்டும்.

3. நமது அமைப்பின் ஏகோபித்த முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

4. நமது அமைப்பு ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பு ஆகும். கட்டாய சந்தா கிடையாது. ஆனால் விருப்பினால் விருப்ப சந்தாவாக மாதம் ரு.100 மட்டும் செலுத்தலாம்.

அமைப்பின் வங்கி கணக்கு விவரம்:

Duraisamiyapuram Akila Ulaga Ayyavazhi Sevai Amaipu Sangam,
State Bank of Travancore,
Vallioor Branch,
A/c.No- 67366569564,
IFSC- SBIN0070010

5. உறுப்பினர் படிவம் பெற்று பூர்த்தி செய்து உடனே உரிய நபரிடம் சமர்பிக்கவும்.

6. நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும்

7. நமது அமைப்பு அய்யாவை பற்றிய பட்டி மன்றம், சொற்பொழிவு, தர்மயுக சங்கமம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இவற்றில் கலந்து கொண்டு பங்காற்ற விருப்பம் உள்ள அன்பர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்.

8. எந்த சூழ்நிலையிலும் அய்யாவழிக்கோ, நமது அமைப்புக்கோ குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட கூடாது.

9. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இரவு 9 மணி முதல் 11 மணி வரை வாராந்திர கலந்துரையாடல் நடைப்பெறும். அனைவரும் அதில் கலந்து தங்களின் மேலான கருத்தினை பதிவு செய்து நமது அமைப்பின் வளர்ச்சிக்கு உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

10. நமது அமைப்பு அய்யா காட்டிய சமத்துவமான முறையில்  செயல்ப்பட்டு வருகிறது.

தாங்கள் நமது அமைப்பில் இணைய விருப்பம் என்றால் கீழே உள்ள ‘இணைய விருப்பம்‘ என்பதை கிளிக் செய்து
உறுப்பினர் சேர்க்கை படிவத்தை பதியிறக்கம் செய்யவும். உறுப்பினர் படிவம் பெற்று பூர்த்தி செய்து உடன் அமைப்பு முகவரிக்கு அனுப்பவும்.

இணைய விருப்பம்

அமைப்பு முகவரி

அகிலஉலக அய்யாவழி சேவை அமைப்பு
பதிவு எண்: 36/2016, பொன்மகரபதி
371A, துரைசாமியாபுரம், ஸ்ரீரெகுநாதபுரம் (அஞ்சல்),
பணகுடி (வழி), திருநெல்வேலி மாவட்டம்-627109
Web: www.ayyavaikundar.com Mail: ayyaiasf@gmail.com 

தபால் பெறும் அய்யா:சிவபிரகாஷ் அய்யா
கைப்பேசி எண்: +91-9095108788

அய்யா உண்டு