அய்யா சரணம்

உறுதிமொழி எடுப்போம்

இன்று கார்த்திகை 18 ஆம் தேதி 

அன்புக்கொடி மக்கள்  எல்லோரும் கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி நோக்கி 

அகிலதிரட்டு  அம்மானை தினவிழா  கொண்டாட

“பல்லக்கேறி தெருவீதிப் பகலதேரு நீ நடத்தி
செல்லப்பதிகள் மிகமுகித்து திருநாள் கண்டு மகிள்ந்திரு நீ 
வல்லக்கொடிகள் மறம் நிறுத்தி வருவாய் நித்தம் வாகனத்தில்
பொல்லாக்கலியன் கண்டுளைந்து பொடிவான் நித்தம் மடிவானே”
—- அகிலதிரட்டு  அம்மானை 

அகிலதிரட்டு அம்மானை தினவிழாவை எல்லா பதிகளிலும் கொண்டாட  அனைவரும்  ஒருமித்து முயற்சி மேற்கொள்வோம்.

அய்யாவே நீர் வகுத்து கொடுத்த கலியுகத்து ஆசாபாசமான கொடி யேற்றி கொடி அமர்த்தி வாகன பவனி தேரோட்டம் நிறைந்த 11 நாள் திருவிழாவை முறைப்படி தத்துவம் குலையா வண்ணம் செயல் படுத்துவோம், மாறாக திங்கள் கிழமை நடத்த வேண்டிய தேரோட்டத்தை மக்கள் சங்கரியம் என்கிற மாயையில் ஞாயிற்றுக்கிழமை நடத்துவது,  வாகன பவனிகள் உமது  அவதாரங்களை பறை சாற்றுகிறது என்பதை மறந்து  ஆஞ்சநேயர் வாகனம் என்றால் ஆஞ்சநேயருக்கு வடை மாலை போடுவது காகித மாலை போடுவது இப்படி வாகன பவனியிலே பல தெய்வ வழிபாட்டை கொண்டு வருவது, திருவிழாவை திருஏடுவாசிப்பு விழாவோடு சேர்த்து திரு ஏடுவாசிப்பிற்க்கு இடையூறு விளைவிப்பது போன்ற தவறான செயல்களை ஒருபோதும் செய்யாமல் அய்யாவே நீர் காட்டின வழியில் சற்றும் பிசக மாட்டோம் என உறுதி மொழி எடுப்போம். 

அகிலதிரட்டை உலகறிய செய்வோம்

ஒழுங்குபடுத்துதல் குழு IASF 

வைகுண்டா சரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *