அய்யா சரணம்

உறுதிமொழி  எடுப்போம்

இன்று கார்த்திகை 20 ஆம் தேதி 

இன்னும் 7 நாட்களே இருக்கிறது கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி வர 

அன்புக்கொடி மக்கள்  எல்லோரும் அகிலதிரட்டு  அம்மானை தினவிழா  கொண்டாட 

“அறிவேனான் யென்ற பெண்ணே ஆதியுமெனதுள் கண்டாய் 
தறுமொழி சொல்லவேண்டாம் தாணுமாலயனும் நானே”
 —- அகிலதிரட்டு  அம்மானை 

அகிலதிரட்டு அம்மானை தினவிழாவை எல்லா பதிகளிலும் கொண்டாட  அனைவரும்  ஒருமித்து முயற்சி மேற்கொள்வோம் 

அய்யாவே நாங்கள் மனங்களை அலைபாய விடாமல் உம்மை நினைத்து ஓர் நினைவாய் உம்மிடம் வர தர்மயுக வாழ்வை நோக்கி பயணிப்போம்,  மாறாக கலியுக ஆசாபாசத்தில் தவறாக  உழன்று வகனங்களை அங்கும் இங்கும் ஆட்டுகின்ற நிலை, வகனங்களை கொண்டு குளத்தில் இறக்குகின்ற நிலை, வாகன பவனியோடு சென்று கடை திறந்து வைப்பது, வாகன பவனியோடு சென்று பல விதமான விழாக்களை துவக்கி வைப்பது, எங்க  ஊர்  அய்யா  உங்க  ஊர் அய்யா  என்று பரிப்பது போன்ற தவறான செயல்பாடுகளில் மனம் அலைபாயாமல் அய்யாவே நீர் வகுத்து தந்த கட்டுகோப்பான  வழியை பயபக்தியோடு மேற்கொண்டு  அய்யாவே நீர் காட்டின வழியில் சற்றும் பிசக மாட்டோம் என உறுதி மொழி எடுப்போம். 

அகிலதிரட்டை உலகறிய செய்வோம் 

ஒழுங்குபடுத்துதல் குழு IASF 

வைகுண்டா சரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *