அய்யா சரணம்

உறுதிமொழி  எடுப்போம்

இன்று கார்த்திகை 21 ஆம் தேதி 

இன்னும் 6 நாட்களே இருக்கிறது கார்த்திகை மாதம் 27 ஆம் தேதி வர 

அன்புக்கொடி மக்கள்  எல்லோரும் அகிலதிரட்டு  அம்மானை தினவிழா  கொண்டாட

“மக்களே நீங்களெல்லாம் வாழ் பொன்னம்பதியில் சென்று 
முக்கியமான தர்ம யுகநிலமதிலே தன்னால்
கக்கிய பொன்கள் சொர்ணங் கைமணங் குளிரவன்னம்
பொக்கிசம் நிறையவைத்து புகழவுண்டினிதாய் வாழ்வீர்”
 —- அகிலதிரட்டு  அம்மானை 

அகிலதிரட்டு அம்மானை தினவிழாவை எல்லா பதிகளிலும் கொண்டாட  அனைவரும்  ஒருமித்து முயற்சி மேற்கொள்வோம் 

அய்யாவே நீர் தந்த  அற்புத வழிபாட்டை அழகாக கடைபிடிப்போம், மாறாக தேங்காய் எலுமிச்சை போன்றவைகளை கொண்டு  தலையை சுத்தி வீட்டை சுத்தி கடலிலே எறிவது காசுகளை கொண்டு கடலிலே எறிவது, தர்மகாசு பூ வெற்றிலை பாக்கு பன்னீர்  போன்றவைகளை வடக்கு வாசலில், கொடிமரத்து மூட்டில், பள்ளியறை நடையில் கொண்டு வைப்பது போன்ற  அறியாமை மூடநம்பிக்கை  இல்லா வண்ணம் அய்யாவே நீர் காட்டின வழியில் சற்றும் பிசக மாட்டோம் என உறுதி மொழி எடுப்போம்.

அகிலதிரட்டை உலகறிய செய்வோம் 

ஒழுங்குபடுத்துதல் குழு IASF 

வைகுண்டா சரணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *