அய்யா சரணம்

அய்யா நிச்சையித்தபடி “அச்சுதேர் ஒடியும் முன்னே ஆண்டி வேலை செய்திடுங்கோ” – என்னும் அய்யா வைகுண்டரின் வாக்குப்படி நம்மால் முடிந்ததை செய்து கர்மகலியில் இருந்து விடுபடுவோம் .

அய்யா நிச்சையித்தபடி நம் அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & IASF குழுக்களின் செயல்பாடுகள் நடைபெற்ற விவரங்கள் (31/12/2017 – 06/01/2018) கீழே கொடுக்கபட்டுள்ளது.

இணைய பதிவு தீர்மானம் எண்- 20180106

அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள்

அய்யா நிச்சையித்தபடி ( 31/12/2017)

நமது மகேசன் அய்யா அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் மாங்கன்றுவிளை அய்யா பதியில் அறப்பாடசாலை நடத்தினார்கள்

நமது சிவபிரகாசம் அய்யா மற்றும் செல்ல புஷ்பம் அம்மா அவர்களும் சேர்ந்து திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வளர்பதியில் அறப்பாடசாலை நடத்தினார்கள்

நமது கிருஷ்ணமணி அய்யா, செல்வம் அய்யா மற்றும் கிருஷ்ண குமார் அய்யா மூவரும் இணைந்து சென்னை மாவட்டம் அம்பத்தூர் ஒரகடம் அய்யா பதியில் அறப்பாடசாலை நடத்தினார்கள்

நமது சுயம்பு தங்கம் அம்மா அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் தம்மத்துக் கோணம் அய்யா பதியில் அறப்பாடசாலை நடத்தினார்கள்

ஏழ்வருக்கும் அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு சார்பாக நன்றி.

06/01/2018 வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் விவரங்கள்

1) தை மாதம் 13 ஆம் தேதி (ஜனவரி மாதம் 26 ஆம் தேதி) வெள்ளி குதிரையை மீண்டும் பதியில் வைக்க சுவாமிதோப்பில் காலை 10 மணிக்கு எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்.

2) நமது அமைப்பின் பொதுக்குழுவை எங்கு வைக்கலாம் என்றும் கலந்துரையாடல் செய்யபட்டது.

இடம்: வாகை பதி
நாள்: மாசி மாதம் 27 ஆம் தேதி
மார்ச் மாதம் 11 ஆம் தேதி
நேரம் காலை 10 மணிக்கு
உடன்பாடு சொல்லுங்க அய்யாமார்களே? அடுத்த வாரா வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் – 13/01/2018 அன்றும் பதிவு செய்யலாம்.

3) எல்லா குழுக்களின் செயல் பாடுகளை தவறாது வாராந்திர கலந்துரையாடலின் போது தெரியபடுத்த வேண்டும்.

4) நமது அமைப்பின் வாராந்திர கலந்துரையாடலில் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்.

IASF குழுக்களின் செயல்பாடுகள்

நம் கலந்துரையாடலில் பதிகள் ஒருங்கிணைப்பு குழு, அய்யா கீதம் குழு, இணையதள குழு, பொருளாதார குழு, அறப்பாடசாலை குழு, ஒழுங்குபடுத்துதல்குழு ஆகிய குழுக்களின் செயல்பாடுகள் பற்றி பகிரபட்டது.
நம் குழுக்களின் செயல்பாடுகள் பின்வருமாறு: 31/12/2017 – 06/01/2018

அறப்பாடசாலை குழு,IASF:
பாலைய்யா அய்யா, புதிய அறப்பாடசாலை ஆசிரியை; புதிதாக அறப்பாடசாலை – பி்ள்ளையார்விளை திருநிழல் தாங்கல்(அடுத்த வாரம்…)

பொருளாதார குழு, IASF:
அய்யா நிச்சையித்தபடி இணையதளம்  புதுபித்தலுக்கான செலவு: 10250. அதற்கு மொத்தமும் தர்மகாசு வழங்கியவர்: சங்கரலிங்கம் அய்யா
ஒலி நாடா வெளியிட தர்ம காசு செலவு-54,280
ஒலி நாடா மொத்த செலவு- 54000
ஒலி நாடா வெளியீட்டு விழாவில் சால்வே வாங்கின செலவு: 1500
மீதி- 280

அய்யா கீதம், IASF:
இந்த வார செயல்பாடுகள் குழுவில் பாடல் எழுதும் பயிற்சி மற்றும் பாடல் பாடும் பயிற்சி இவை இரண்டும் அன்பர்களின் ஆதரவுடன் தொடர்கின்றது மாங்கன்றுவிளை கச்சேரிக்கான பயிற்சி முனைப்புடன் நடைபெற்று வருகிறது.
அய்யாவே தஞ்சமென்று இசைதட்டினை கேட்டு பதிவிடும் அன்பர்களுக்கு அடுத்தவார இறுதிக்குள் அமைப்பு அன்பர்களின் ஒத்துழைப்புடன் சேர்க்க செயல்பட உள்ளது.

பதிகள் ஒருங்கிணைப்பு குழு, IASF:
அய்யா நிச்சையித்தபடி தெச்சணா பூமியின் சிறப்பை பிரதிபலிக்க செய்யும் விதமாக நமது அமைப்பு முதற்கட்டமாக புன்னை மரம் நடும் பணியினை கையில் எடுத்து உள்ளது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். இந்த பணியினை விரைவாக செயல் படுத்த நாம் எல்லோரும் முன் வந்து நாம் சார்ந்து இருக்கும் பதிகளில் புன்னை மரம் நட வேண்டும் என நம் அமைப்பில் பதிவு செய்யுங்கள், செய்த உடனே நம் அமைப்பில் உள்ள அன்பர்கள் வந்து புன்னை மரம் நட்டு தருவார்கள். அந்த அடிப்படையில்

1. திருநெல்வேலி மாவட்டம் வடலிவிளை அய்யா பதியில் நட வேண்டும் என கிருஷ்ணமணி அய்யா பதிவு செய்துள்ளார்
2. திருநெல்வேலி மாவட்டம் கடம்பன்குளம் கொடி தாங்கலில் நட வேண்டும் என சூரியபிரகாசம் அய்யா பதிவு செய்துள்ளார்
3. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், மெஞ்ஞானபுரம் அருகில் உள்ள சோலைகுடியிருப்பு அய்யா பதியில் நட வேண்டும் என பன்னீர்செல்வம் அம்மா பதிவு செய்துள்ளார்
4. திருநெல்வேலி மாவட்டம் பெத்தநாடார்பட்டி அஞ்சல் முருகன்குறிச்சியில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் தர்மபதியில் நட வேண்டும் என கிருஷ்ண குமார் அய்யா அவர்கள் பதிவு செய்துள்ளார்
5. கன்னியாகுமரி மாவட்டம் குடியிருப்புவிளை அய்யாபதியில் நட வேண்டும் என ஆல்பின் ஜோண்ஸ் அய்யா அவர்கள் பதிவு செய்துள்ளார்
6. கன்னியாகுமரி மாவட்டம் மாங்கன்றுவிளை அய்யாபதியில் நட வேண்டும் என ஆல்பின் ஜோண்ஸ் அய்யாஅவர்கள் பதிவு செய்துள்ளார்

இது போல் எல்லா அன்பர்களும் பதிவு செய்யுங்கள். புன்னை மரம் நடுவோம். தெச்சணா பூமியின் சிறப்பை பிரதிபலிக்க செய்வோம்

பத்திரிகை குழு, IASF: பணி துவங்கவில்லை

தகவல்தொடர்பு குழு, IASF: உறுப்பினர் படிவம் உரியவரிடம் பெறுதல் மற்றும் சேமித்தல். நடைபெறுகிறது.

இணையதள குழு, IASF:
இந்த வாரம் முடிவில் நமது இணையதள குழு சார்பாக நாம் செயல் புரிந்த செயல்பாடுகளை நம் வாராந்திர கலந்துரையாடல் ஆன இன்று (06/01/2018 ) நம் அமைப்பில் உள்ள அனபர்கள் அனைவருக்கும் பதிவு செய்கிறோம்.

1) நம் *ஒழுங்குபடுத்துதல் குழு* விற்கு உதவும் நோக்கத்தில், அவர்கள் உதவியுடன் நம் இணையதளத்தில் நம் கடந்த வார கலந்துரையாடல் செயல்படுகள் பதிவு செய்யபட்டுள்ளது.

இணைய தீர்மாணம் பதிவு எண் : *20171230*

கலந்துரையாடல் செயல்படுகள் பதிவு லிங்

http://ayyavaikundar.com/iasf_weekend_meeting_30_12_2017/

2) நம் பதிகள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக பதிகள்/திருநிழல் தாங்கல் விவரங்கள் சேகரிக்க உதவும் வகையில் இணைய விண்ணப்பம் தயாரிக்கும் பணியில் உள்ளது.

3) யூடிப் பதிவு: https://youtu.be/uoIEoYv5CEk

ஈத்தன்காடு, அய்யா வைகுண்டர் திருநிழல் தாங்கல் – திருகல்யாணம் திருநாள் 06/01/2018

காணொலி பதிவு: கண்ணன் அய்யா, அ.உ.அ.சே.அ

💧அய்யாவின் அருளால் பணிகள் தொடரும்…..

                                                                                                                                     ஒழுங்குபடுத்துதல் குழு IASF

ய்யா உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *