அய்யா சரணம்

அய்யா நிச்சையித்தபடி “அச்சுதேர் ஒடியும் முன்னே ஆண்டி வேலை செய்திடுங்கோ” – என்னும் அய்யா வைகுண்டரின் வாக்குப்படி நம்மால் முடிந்ததை செய்து கர்மகலியில் இருந்து விடுபடுவோம் .

அய்யா நிச்சையித்தபடி நம் அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & IASF குழுக்களின் செயல்பாடுகள் நடைபெற்ற விவரங்கள் (21/11/2018 – 27/01/2017) கீழே கொடுக்கபட்டுள்ளது.

இணைய பதிவு தீர்மானம் எண்- 20180127

அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள்

அய்யா நிச்சையித்தபடி 21/1/2018

நமது ரீகன்அய்யா அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் குடியிருப்புவிளை அய்யா பதியில் அறப்பாடசாலை நடத்தினார்கள்

நமது சிவபிரகாசம் அய்யா மற்றும் தாமோதரன் அய்யா அவர்களும் சேர்ந்து திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் வளர்பதியில் அறப்பாடசாலை நடத்தினார்கள்

நமது பாலையா அய்யா அவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் பிள்ளையார் விளை அய்யா பதியில் அறப்பாடசாலை நடத்தினார்கள்

நமது கிருஷ்ணமணி அய்யா, ராஜபிரசாத் அய்யா, செல்வம் அய்யா, கிருஷ்ண குமார் அய்யா, ரெகு ராஜா அய்யா ஆகிய ஐய்வரும் இணைந்து சென்னை மாவட்டம் அம்பத்தூர் ஒரகடம் அய்யா பதியில் அறப்பாடசாலை நடத்தினார்கள்

நமது லிங்கேஷ் அய்யா மற்றும் ரீகன் அய்யா அவர்களும் இணைந்து கன்னியாகுமரி மாவட்டம் தம்மத்துக் கோணம் அய்யா பதி யில் அறப்பாடசாலை நடத்தினார்கள்

நமது ரீகன் அய்யா மற்றும் லிங்கேஷ் அய்யா அவர்களும் இணைந்து கன்னியாகுமரி மாவட்டம் கரைகண்டார் கோணம் அய்யா பதியில் அறப்பாடசாலை நடத்தினார்கள்

நமது ராம்குமார் அய்யா அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மூக்குபீறி அய்யா பதியில் அறப்பாடசாலை நடத்தினார்கள்

பதினொரு பேருக்கும் அகில உலக அய்யாவழி சேவை அமைப்பு சார்பாக நன்றி!!!!

27/01/2018 வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் விவரங்கள்

இனி வரும் காலங்களில் நேரடி கலந்துரையாடல் நடைபெறும் முன்பாக எல்லா அன்பர்களுக்கும்
1. தொலைபேசி மூலமாகவும்
2. தபால் மூலமாகவும்
3. வாட்சப் மூலமாகவும்
4. முகநூல் மூலமாகவும்

தெரியபடுத்தி எல்லோரும் கலந்து கொள்ளும் விதமாக செயல்படுவோம் என தீர்மானம் நிறைவேற்றபட்டது.

IASF குழுக்களின் செயல்பாடுகள்

நம் கலந்துரையாடலில் பதிகள் ஒருங்கிணைப்பு குழு, அய்யா கீதம் குழு, இணையதள குழு, பொருளாதார குழு, அறப்பாடசாலை குழு, ஒழுங்குபடுத்துதல்குழு ஆகிய குழுக்களின் செயல்பாடுகள் பற்றி பகிரபட்டது.
நம் குழுக்களின் செயல்பாடுகள் பின்வருமாறு: 21/01/2018 – 26/01/2018

அறப்பாடசாலை குழு,IASF:
பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடைபெறுகின்றது.
பொருளாதார குழு, IASF:
அய்யா நிச்சையித்தபடி இணையதளம் புதுபித்தலுக்கான செலவு: 10250. அதற்கு மொத்தமும் தர்மகாசு வழங்கியவர்: சங்கரலிங்கம் அய்யா
ஒலி நாடா வெளியிட தர்ம காசு செலவு-54,280
ஒலி நாடா மொத்த செலவு- 54000
ஒலி நாடா வெளியீட்டு விழாவில் சால்வே வாங்கின செலவு: 1500
மீதி- 280

அய்யா கீதம், IASF:
இந்த வார செயல்பாடுகள் குழுவில் பாடல் எழுதும் பயிற்சி மற்றும் பாடல் பாடும் பயிற்சி இவை இரண்டும் அன்பர்களின் ஆதரவுடன் தொடர்கின்றது மாங்கன்றுவிளை கச்சேரிக்கான பயிற்சி முனைப்புடன் நடைபெற்று வருகிறது.
அய்யாவே தஞ்சமென்று இசைதட்டினை கேட்டு பதிவிடும் அன்பர்களுக்கு அடுத்தவார இறுதிக்குள் அமைப்பு அன்பர்களின் ஒத்துழைப்புடன் சேர்க்க செயல்பட உள்ளது.

பதிகள் ஒருங்கிணைப்பு குழு, IASF:
அய்யா நிச்சையித்தபடி தெச்சணா பூமியின் சிறப்பை பிரதிபலிக்க செய்யும் விதமாக நமது அமைப்பு முதற்கட்டமாக புன்னை மரம் நடும் பணியினை கையில் எடுத்து உள்ளது என்பதை நாம் எல்லோரும் அறிவோம். இந்த பணியினை விரைவாக செயல் படுத்த நாம் எல்லோரும் முன் வந்து நாம் சார்ந்து இருக்கும் பதிகளில் புன்னை மரம் நட வேண்டும் என நம் அமைப்பில் பதிவு செய்யுங்கள், செய்த உடனே நம் அமைப்பில் உள்ள அன்பர்கள் வந்து புன்னை மரம் நட்டு தருவார்கள். தேவை உள்ள அன்பர்கள் அமைப்பில் பதிவு செய்யுங்கள். புன்னை மரம் நடுவோம். தெச்சணா பூமியின் சிறப்பை பிரதிபலிக்க செய்வோம்

பத்திரிகை குழு, IASF: பணி துவங்கவில்லை

தகவல் தொடர்பு குழு, IASF: உறுப்பினர் படிவம் உரியவரிடம் பெறுதல் மற்றும் சேமித்தல். நடைபெறுகிறது.

இணையதள குழு, IASF:
இந்த வாரம் முடிவில் நமது இணையதள குழு சார்பாக நாம் செயல் புரிந்த செயல்பாடுகளை நம் வாராந்திர கலந்துரையாடல் ஆன இன்று (13/01/2018 ) நம் அமைப்பில் உள்ள அனபர்கள் அனைவருக்கும் பதிவு செய்கிறோம்.

1.நம் அமைப்பு சார்பாக அய்யாவின் கருத்துகளை புகைப்பட வடிவில் இணையத்தில் பகிர நமது “ரா.லிங்கேஸ்வரன் அய்யா – Instagram”, “சிவஅனந்தன் அய்யா & பன்னீர்செல்வம் அம்மா – முகநூலில்” முன்வந்து தங்கள் பணியை சிறப்பாக செய்கின்றன. அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

2.அனைத்து பதிகள் மற்றும் திருநிழல் தாங்கலுக்கு குறைந்த செலவில் இணையதளம் அமைத்தது நம் அமைப்புக்கு பொருளாதார நிலைக்கு உதவும் வகையில் செயல்பட ஆலோசனையில் உள்ளது.

3. நம் ஒழுங்குபடுத்துதல் குழுவிற்கு உதவும் நோக்கத்தில், அவர்கள் உதவியுடன் நம் இணையதளத்தில் நம் கடந்த வார கலந்துரையாடல் செயல்படுகள் பதிவு செய்யபட்டுள்ளது.

இணைய தீர்மாணம் பதிவு எண் : 20180120
கலந்துரையாடல் செயல்படுகள் பதிவு லிங்
http://ayyavaikundar.com/iasf_weekend_meeting_20_01_2018/

இணைய தீர்மாணம் பதிவு எண் : 20180113
கலந்துரையாடல் செயல்படுகள் பதிவு லிங்
http://ayyavaikundar.com/iasf_weekend_meeting_13_01_2018/

4. மேலும் பல இணைய பதிவேற்றங்கள்
http://ayyavaikundar.com/iasf_feb_2018_missions/

https://facebook.com/events/216713672232878

அய்யாவின் அருளால் பணிகள் தொடரும்…..

                                                                                                              ஒழுங்குபடுத்துதல் குழு IASF

அய்யா உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *