You are here:
< Back

அகிலவிருத்தங்கள் – பாகம் 1

01.விருத்தம்
கச்சணிதனத்தாளோடு கறைமிடற் றண்ணலீசர்
பச்சமால் முனிவர் தேவர் பதுமலர்க் கமலத்தேவி
நிச்சயமான கன்னி நிறைந்திடும் பூமியான
தெச்சணாபுதுமை சொல்லி சீமையின்யியல்பும் சொல்வாம்.

02.விருத்தம்
காமனை எரித்தயீசன் கழலினை மறவாவண்ணம்
பூமணக் குழலாள் கன்னி பொருந்திடும் நகரியான
சீமையின் குணமும் சொல்லிச் சிறந்திடும் பூமிதன்னில்
நேமதா தர்மஞாய நிலைதனை நிகழ்த்து வாரே

03.விருத்தம்
இவ்வகையாகச் சோழன் இருந்து ராச்சியத்தையாள
கவ்வைகளில்லா வண்ணம் கலியுகம் வாழும்நாளில்
செவ்வகை திருவேயான திருவுளக்கிருபை கூர்ந்து
தெய்வமெய் நீதம்வந்த செய்தியை செலுத்துவாரே

04.விருத்தம்
இப்படி தெய்வநீதம் யீசுரரிதுவேகூற
செப்படிமறவா வண்ணம் திருமருகோனுஞ்செய்தார்
அப்படித்தவறா நீதம் அம்புவிதனிலேவாழ
மற்பணிகுழலார் தங்கள் மனுநெறிவகுத்தார் தாமே.

05.விருத்தம்
இப்படித்தெய்வ இராச்சிய நீதமும்
மற்படித்தேச மனுவுட நீதமும்
நற்புடன் தேசம் நாடிவாழ்வதைக்
கற்புரியீசர் கண்டு மகிழ்ந்தனர்

06.விருத்தம்
ஆறு செஞ்சடை சூடிய அய்யனார்
அமர்ந்து வாழுங் கைலை வளமதை
கூறக் கூறக் குறைவில்லை காணுமே
கொன்றை சூடிய அண்டர்த்திருப்பதம்
வாறு வாறு வகுக்க முடிந்திடா
மகிளுங்குண்ட வளஞ் சொல்லியயற்ப்புதம்
வேறு வேறு விளம்பவே கேளுங்கோ
மெய்யுள்ளோறாகிய வேத அன்போரே

07.விருத்தம்
சுருதிமுனியுட நெட்டைத்துலைத்தவர்
கருதிய சூரர் கைலை மேவிய
பருதிசூடும் பரமனைப் போற்றியே
வருதிகேட்டு வருந்தினர் சூரரே

08.விருத்தம்
சூரனைத்துணித்து சத்தி சூலமும் கடலில் முழ்கி
வீரமால்பதத்தைப்போற்றி விளம்புவாள் சத்திமாது
மூரனை செயிக்க முன்னே முர்ச்சூலமாய்சபித்த சாபம்
தீரவே வேணுமென்று திருப்பதம் வணங்கிநின்றாள்

09.விருத்தம்
ஆதியைத்தொளுதுபோற்றி அரக்கனும் வரமும் வேண்டி
சீரிய சீதையாலே சீவனுக்கிடறும் பெற்று
வாரிய மூணுகோடி வரமது தோற்றுபின்னும்
மூரியன்மூன்று லோகம் முளுதுமேயடக்கியாண்டான்

10.விருத்தம்
இராவணன்தன்னைக்கொல்ல ராம பாணங்களோடே
ஸ்ரீராமராய் மாயன்றானுத் தசரதன் தனக்குத் தோன்ற
விராகனமாதுசீதை வில்லுடனுதிக்கத்தேவர்
மராமரக் குலங்களாகி வந்தனர் புவியின் மீதே

11.விருத்தம்
உன்னுடைய தம்பியாலே வுயிர் நிலையறிந்துயானும்
என்னுடைய சரந்தால்க்கொன்றேன் என்றியம்பிய அரக்காவுன்னை
பின்னுகப்பிறப்பு தன்னில் பிறப்பு நூறோடுங்கூடி
அன்றுகந் தன்னில் தோன்ற அருளுவேனுன்னை நானே

12.விருத்தம்
என்னொரு தம்பியாலே யென்னையுங் கொன்றாயென்று
தன்னொரு மதத்தால் நீயுஞ் சாற்றியவரக்காவுன்னை
பின்னொருயுகத்தில் நூறு பிறப்புடன் பிறவிசெய்து
இன்னொரு ஆளின் கையால் யிரந்திட செய்வேனுன்னை

13.விருத்தம்
வாடியே மடவார் தானும் மார்பதில் துயிலை மூடி
கோடியே அயர்ந்துயேங்கிக் குருவதைப் பாறாவண்ணம்
நாடியே தாழ்ந்து பெண்கள் நாணியே நின்றதண்மை
தேடியே மாயன் செய்த செயலென அறிந்தாரீசர்

14.விருத்தம்
அறிந்தார் மாயன் சேயாகி அழுதேயிரங்குங்குரலதினால்
செறிந்தார் குழலார்யிவர்கள் சென்று சேர்த்தே யெடுத்து அணைத்ததுவும்
பறிந்தேயிவர்கள் நாணினதும் பால்தான் தனத்தில் பாய்ந்ததுவும்
அறிந்தேகன்னியிருவரையும் அழித்தேபிறவிசெய்தனராம்

15.விருத்தம்
பிறவியதுதான் செய்யவென்று பெரியோனுரைக்கப் பெண்ணார்கள்
அலறியழுது முகம்வாடி அரனாரடியை மிகப்போற்றி
திரவிமுதலேதிரவியமே சிவமேயுமது செயலைவிட்டு
இறவியானாலெங்களுக்கு யினிமேல்பிறவி வேண்டாமே

16.விருத்தம்
வேண்டாமேனவே மெல்லியர்கள் விமலனடியை மிகப்போற்றி
மாண்டாரெலும்பை மார்பணியும் மறையோன் பின்னும் மகிழ்ந்துரைப்பார்
தூண்டாசுடரோன் திருமாலைச் சேயென்றெடுத்த செய்கையினால்
ஆண்டாருனக்கு மகனாகி அதின்மேல் பதவியுங்களுக்கே

17.விருத்தம்
முன்னே மொழிந்தபடி முறைநூல் தவறிப்போகாமல்
தன்னைமதலை யெனவெடுக்கத் தவமாயிருந்த தெய்வகியும்
சொன்னமொழியுந்தவறாமல் துயரமறவே தேவருக்கும்
என்னைப்பிறவி செய்தனுப்பும் யிறவாதிருக்கும் பெம்மானே.

18.விருத்தம்
அய்யோமுனிதான் சபித்தப்படி ஆயர்ப்பதியில் போகறியேன்
மெய்யோதளருதுடல் மெலியு மெல்லி மொழிந்த விசனமதால்
கையோசலித்துக் காலயர்ந்து காலவிதியால் கருத்தயர்ந்து
பையோராளைத்தானளைத்து பார்க்கவிடுத்தான் கஞ்சனுமே

19.விருத்தம்
பூதனைச் சகடனோடும் பின்னுள்ள வரக்கர் தன்னை
சூதனையெல்லாங் கொன்று சுத்தமாய் மதுரைபுக்கி
நீதமேயில்லாக் கஞ்சன் நெஞ்சையும் பிளந்து கொன்று
கூதவன் துபரயன்பதியில் குணமுடனிருந்தாரன்றே

20.விருத்தம்
ஆயர்குடியில் வளர்ந்து வெண்ணைஅருந்தி முறைமாதரையணைத்து
தீயன்கொடியக்கஞ்சனையுந் திருக்கிய றுத்து அசுரரையும்
உபாயமுடனே குலையடக்கி வுருப்பிணி முதலாய்ப்பெண்களையும்
தேசம்புகள மணமுகித்து துவரயம்பதியிலிருந்தனரே

21.விருத்தம்
கனலைத்துணையாமென்றாவிக் கர்ப்பையிழந்தோம் கன்னியரே
புனலைத்திரட்டப் பிலனின்றி புத்தியழிந்தோம் பூவையரே
அனலைத்தரித்த வரன்முன்னே அங்கேசென்றால் பங்கம்வரும்
இனத்தைப் பிரிந்தமானதுபோல் யிருப்போம் வனத்திலென்றனரே(120)

22.விருத்தம்
தங்கமணியே நவமணியே சலத்தில் விளைந்த தாளமுதே
சிங்கமுடிகள் பெற்றவரோ சீமையடக்கி ஆண்டவரோ
துங்கவரிசை பெற்றவரோ திருமால்விந்திலுதித்தவரோ
சங்கமகிள வந்தவரோ சான்றோர் வளரறாறாறோ

23.விருத்தம்
முன்னேபிறந்த குரோணிதனை மூவிரண்டாக வுடல்பிளந்து
தன்னேவுயிறோடஞ்சுசெய்து சாமிதனை நினையாததினால்
வன்னத்திருமால் குலையடக்கி வந்தார் சடலமிளந்து குண்டம்
இன்னும் பிறப்பொன்றுண்டல்லவோ யிறந்தகுரோணி அவன்றனக்கே

24.விருத்தம்
கலியுகமெனச் சிவங்கருதிட தேவர்கள்
பொலிவுடன் சேர்த்தனர் புராணமீதிலே
சலிவுடனீசனுந் தரணியில் போர்ந்திட
வலிமையுள்ள மாயன் ஸ்ரீரங்க மேவினார்

25.வெண்பா விருத்தம்
ஆனைமதமாய் அடர்ந்து மிகத்தேவா
பூனைநாயோடு புல்குமோ
நல்லறிவில்லா தேவா
ஈயோடே சேர்மோ யிசல்

அய்யா உண்டு

குறிப்பு: பிழையிருப்பின் ayyaiasf@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்க.

Last Updated On September 29, 2018