You are here:
< Back

அகிலவிருத்தங்கள் – பாகம் 2

26.விருத்தம்
வந்தனே வந்தாய்ப் போற்றி மாதுமை கணவா போற்றி
சந்தனமயிலே போற்றி சன்முகத்தாயே போற்றி
நந்தகோவேந்தே போற்றி நாதனே நீதா போற்றி
சிந்தரென் கணவாபோற்றி சிவசிவா போற்றிபோற்றி

27.விருத்தம்
மாதவா போற்றிபோற்றி மறைமுடி காணாய்வல்ல
நீதனே போற்றிபோற்றி நிசரூபச்சித்தா போற்றி
சீதைவாளுமையே போற்றி தெய்வனன் மணியே போற்றி
மாதவா வனத்தில் தொட்ட பாங்கனே கணவாபோற்றி

28.விருத்தம்
மூவர்தேடிய முற்றாமுதலேயுனது பதம்போற்றி
தேவர்க்கரியத் திரவியமே தெய்வமணியே சிதம்பரமே
காவக்கானக வனமதிலே கர்ப்பையழித்துக் கைவிட்டகன்று
தாவத்துணையே யென்கணவா தவமேயுனது பதம்போற்றி

29.விருத்தம்
மாட்டிலேறும் மகாபரனே மாதுவுமையாள் பங்காளா
காட்டிலடியாரேழ் பேருங் கற்றாவிழந்த பசுவதுபோல்
ஊட்டிவுரக்காரில்லாமல் வூமைகண்ட கனவதுபோல்
வாட்டமறிந்து மனதிரங்கி வந்தாய் கவலைதீர்ந்தோமே

30.விருத்தம்
தீர்ந்தோமினி யெங்களைத்தான் திரும்பக்கைலைக்களையாமல்
ஈந்தோர் பிள்ளையேழ்வரையும் யினமுமேழுங் குறையாமல்
சாந்தோரெங்கள் கணவரையும் தந்தேதரணி யரசாண்டு
வாழ்ந்தேயிருக்க வரமருளும் மாயாதிருக்கும் மறைமுதலே

31.விருத்தம்
காரணா அரிநாரணா கவிபூரணா வெகுதோரணா
கவிஞோர் தொழும் வாரணா கருணாகர தருணாவெகு
தருணாகவி வருணா கவிமால் சிவாபோற்றி
காயம்பூவின்மேனி நிறவாயா சிவசிவாயா
கருவாயுரு யுருவாயுனைத் தினமேயருணியாயா
குறிமந்தகா கருணாகரா போற்றி
குணசீரா வெகுதீரா கவிவீரா புவிநாதா
திருவோடுறு மார்பா சிறியார்மிக தரியாச்செய்த
வெறியானதைச் சிறிதாக்கியே சேர்ப்பாய்
முகம்பார்ப்பாய் முடிவானதை யறியாமலே
மோகமாய் வெகுதாகமாய் வுளறித்தவங்குளறியே
உன்சொல்பதமஞ்சொல்லென ஒஞ்சிப்பதமஞ்சி
னோம்வுன்செயல் தந்தருள்வாயே

32.விருத்தம்
ஆறுசெஞ்சடை சூடிய அய்யனே அலையிலே துயிலாதிவராகவா
நீறுமேனி நிரந்தரம் பூ சிவா நீ சிவாசிவமைத்துனராகவா
வீறுசத்திமணவாளரானவா வீரலெட்சுமி மன்னரிராகவா
ஏறுமீதினிலேறிடுமீஸ்பரா எம்மையாள்க் கொள்ளும் நாரணா போற்றியே

33.விருத்தம்
சீதமாங்குணசெல்வனே போற்றி சிவசிவா சிவா சிவனேபோற்றி
நீதவாநடப்பே யதுவாபோற்றி நீசிவாசிவ ராகவாபோற்றி
மாதவாஅரிகேசவா போற்றி வல்லனேயரி செல்வனே போற்றி
ஆதவாஅரிநாரணா போற்றி அனாதியே யுந்தன் போற்றியே போற்றியே

34.விருத்தம்
அய்யனே தவம் யானிற்கும் போதிலே யிந்திராணிமன்னனிந்திரனானவன்
பொய்யின்மாய்கை நினைவதிலானவன் பொர்ப்பக்கிரீட மீதுர்ப்பனவாசையால்மெய்யின்
ஞானத்தவமிட்டு வாடினேன் வித்தரேவுன் சித்தமிரங்கியே
செய்யும் பாவவினைத் தவிர்த்தாண்டருள் சிவசிவா சிவசிவா போற்றியே

35.விருத்தம்
போத்தியென்றேத்தித்தேவன் பொர்ப்பதம் வணங்கி நின்று
ஆத்தியே சூடும்வேதன் ஆகமேலிச்சை கூர்ந்து
தீத்தியவாயனோடு செய்தியேதெனவே கேள்க்க
நால்திசை புகளுந்தெய்வ நாரணருரைக்கின்றாரே

36.விருத்தம்
மண்ணிலுமடங்கா மனதிலுமடங்கா மறையிலு மடங்கா
பலவசத்திலுமடங்கா கண்ணிலுமடங்கா கருத்திலுமடங்கா
கவியிலுமடங்கா பலவிதச்செபிப்பிலு மடங்கா
எண்ணிலுமடங்கா யிகத்திலு மடங்கா யிரையினி லடங்கா
இறங்கிலு மடங்கா ஒண்ணிலுமடங்கா வுனைவந்தடங்கிட
உரைத்திட திடமருள்யெனப் பதத்தடிமிசைவிழுந்தான்

36. விருத்தம்
மறையினிலடங்கா யிரையினிலடங்கா வணங்கிலு மடங்காய்
பலவகையிலு மடங்காய் நுறையினிலடங்காய் தொல்புவியிலடங்காய்
சுறுதியிலடங்காய் சுகயினிலடங்காய் உறவிலுமடங்காய்
யொழியிலுமடங்காய் யுகத்திலுமடங்காய் ஒருவிதத்திலு மடங்காய்
புரத்திலுமடங்காய் அகத்திலுமடங்காய் புகள்ந்துனையடக்கிட
வகுத்துரையென பதத்தடி மிசை விழுந்தான்

37.விருத்தம்
சரிகையிலடங்கா கிரிகையிலடங்காய் சயோகத்திலடங்கா
ஞானத்திலடங்காய் கலைக்கியானத்தி லடங்காய் கனவிலுமடங்காய்
கருவிலுமடங்காய் வுருகினிலடங்காய் வுருவிலு மடங்காய்
யுகத்திலு மடங்காய் யோதிலுமடங்காய் வுணர்விலு மடங்காய்
உர்பணத்திலு மடங்காய் தவத்திலுமடங்காய் தழுவிலுமடங்காய்
தயவிலுமடங்காய் அகத்திலு மடங்காய் புரத்திலு மடங்காய் மனத்தகத்தடக்கியுன்
பதத்தடிபணிந்திட வகுத்துரை யெனப் பதத்தடி மிசைவிழுந்தான்

38விருத்தம்
உகத்திலுமடங்காய் யோதிலுமடங்காய்
உரைப்பிலுமடங்காய் உர்ப்பனத்திலுமடங்காய்
தவத்திலுமடங்காய் தழுவிலுமடங்காய்
தனத்திலுமடங்காய் தயவிலுமடங்காய்
அகத்திலுமடங்காய் புரத்திலுமடங்காய்
அசத்திலுமடங்காய் புசத்திலுமடங்காய்
அகத்தினில் யடக்கியுன்பதத்தடி பணிந்திட
வகுத்துரையென பதத்தடி மிசைவிழுந்தான

39.விருத்தம்
கலையோடு கலையதாக்கிக் கண்ணின்மேல் கருணைநாட்டி
மலையோடு மலையைத்தாண்டி வளர்ந்தவன் பதமேகண்டு
சிலையொடு சிலையினாழும் சிவபராக் கிருபையென்று
அலைகடல் முழக்கம்போலே அவளுரைக் கூறலுற்றாள்

40.விருத்தம்
கூறிய வாசகத்தை யிந்தக் குவலயத்தோர்கள் காண
மீறிய மொழிகள்சொல்லி விளம்புவார் நாசமாகும்
தேறியபூதத்தோடு தேர்ந்துணர்ந்தவரே வாழ்வார்
கூறிய வாசகத்தை வுள்ளங்கொண்டவர் குருவைக் காண்பார்

41.விருத்தம்
ஒருதிருவிபூதி வுண்டை ஒருயிரு மிக்சமாகும்
ஒருதிட தேங்காய்போலும் ஒருமனத்திரனை போட்டுக்
கருதிட வெற்றிலைபாக்குங் கனிந்திடுவோர்க்கு மூவர்
வருகிட ஞாயமெய்யின் வழியிதுவாகுந்தானே

42.விருத்தம்
மனுமொழி யிதுவாமென்று மதத்துடன் பேசுவோர்க்கு
இனிதல்ல வீண்தானென்று யியம்பிய பகஞ்ஞர் தன்னை.
குனிதவள் துர்க்கைசென்று கொன்றவள் நரகம் பூத்தி
கனிதுடன் துர்க்கைவாரி கடல்தீர்த்தமாடுவாளே

43.விருத்தம்
பாக்கியங்கொடுப்போம் நாமும் பலனுடன் வாழுவோர்க்கு
நோக்கியக் கருணையுண்டாம் நோயில்லாதிருந்து வாழ்வார்
தாக்கியவாசகத்தின் தண்மையை நம்புவோர்க்கு
வாக்கிய வைகுண்டவீடு வந்தவர் வாழ்வார்தானே

44.விருத்தம்
தினமொரு நேரமெந்தன் திருமொழியதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்
கனிமொழி சோதிவாக்குங் கையெழுத்தாதி நோக்கும்
துணிவுடன் கேட்டோர் வுற்றார் துலைத்தனர் பிறவிதானே

45.விருத்தம்
வாசித்தோர் கேட்டோர் வுற்றார் மனதினால் வுணர்ந்து கற்றோர்
ஆசித்தன் பதமே கண்டு அவ்வழிமுறையே நின்றோர்
கோசிதன் பதமேகண்டு கோமலைப் புவியின் வாழ்வும்
தேசத்தின் செல்வத்தோடுஞ் சிறப்புடனிருந்து வாழ்வார்

46.விருத்தம்
திருமொழி வாசகந்தன்னை தேசத்தில் வருமுன்னாக
வருவது திடானமென்று வழுத்தினோம் தொழாயிரத்தொண்னூறெட்டில்
ஒருதிருக்கூட்டமாக ஓராயிரத் தெட்டாமாண்டில்
வருகென வந்துநாங்கள் அம்மானையில் வருத்தினோமே

47.விருத்தம்
வருத்தினோ வம்மானை தன்னில் மனமாய் புதியதாக்கி
கருத்தினுள் அகமேகொண்டு கவனித்தோர் அவர்க்கேதக்கும்
உருத்தில்லாக் கேள்ப்போர்க்கெல்லாம் ஓருரை வெளியே காணார்
சிரித்துரைக் கேட்போரெல்லாஞ் சிவப்பொருள் வெளியே காண்பார்

48.விருத்தம்
உலகில் மனுக்கள் தமிழாலே வுவமையுரைத்து விட்டார்போல்
கலக்கமுடனே யென்மொழியைக் கண்டுபழித்து நகைத்தோரை
அலகைதுழைத்து நரகதிலே ஆணியறைந்து அவனிதனில்
குலையக்குலைத்து தீநரகமதில் கொண்டேபோடச்சொல்வேனே

49.விருத்தம்
எந்தன் தன்மொழியும் யெண்னெழுத்தும் ஏடாய்ச்சேர்த்து யிவ்வுலகில்
சிந்தைமகிழ்ந்த யன்பருக்கு தெரியத்திடமாய் யெழுதிவைத்தேன்
எந்தபேரும் யென்திருமொழியை யெடுத்துவாசித்துரைத்தோரும்
சந்தமுடனே வாழ்ந்துமிகத் தர்மபதியுங் காண்பாரே

50.விருத்தம்
காண்பார் தர்மக் கண்காட்சை கண்டே மரணமில்லாமல்
காண்பாறென்னுங் களிகூர்ந்து கண்ணோன் பதத்தைக் கண்ணாடி
காண்பார் நீதங்கண்ணாலே கருணாக்கரறாய் கவ்வையற்று
காண்பாரென்னுங் கைலாசம் கண்டே நன்றாய் வாழ்வாரே

அய்யா உண்டு

குறிப்பு: பிழையிருப்பின் ayyaiasf@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்க.

Last Updated On September 29, 2018