You are here:
< Back

அகிலவிருத்தங்கள் – பாகம் 3

51.விருத்தம்
இந்தமொழியை தூஷணித்த யிடும்பர் படும்பாடதைக் கேளு
கந்தவுலகங் கலிபிடித்து கண்ணுமுருகிக் கால்வுளன்று
குந்தக்குடலும் பிரம்பூர கொப்பிள் சிலந்தி வுண்டாக்கி
எந்தயிடமும் அலைந்தழிவார் யென்னாணையிது தப்பாதோ

52.விருத்தம்
தப்பாதெனவே சாபமிட்டேன் சக்தி பேரில் உண்மையதாய்
எப்பாரெல்லாம் அறிந்திடவே இந்த மொழியை எழுதிவைத்தேன்
ஒப்பார் ஒருவர் எழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே
அப்பாநாதன் எழுதிவைத்த அகிலதிரட்டு அம்மானையிதே

53.விருத்தம்
என்றே இந்த திருவாசகம் இயம்பச் சரசுபதிமாது
கன்றேமேய்த்தோன் எழுதிமிக கலியுகம் அதிலே விட்டிடவே
நன்றோர் மறையோரிடம் யேகி நாட்டில் அறிய செய் எனவே
அன்றே அவனி தானறிய அனுப்பி மகிழ்ந்து இருந்தனரே🙏

54.விருத்தம்
குறோணிமுதலாய் கூறுகெட்ட நீசன்வரை
தரணியுகமாறுஞ் சாற்றியே சத்தியுடன்
தர்மபுவி தோன்றுவதுஞ் சாணாரை வைந்தர்வந்து
நன்மையுடன் நாடுவதும் நாட்டினார்

55.விருத்தம்
உரைத்திட வியாகர்தானும் வுண்மையாய் மொழிந்ததெல்லாம்
கரைந்திடா கைலைமீது கல்லிலே யெழிதிவையும்
நரைத்திடா முனிவன் சொல்லும் நாள்வழிதோறு முற்ற
உரைத்திட முனிக்குமேலும் வுதவிகள் செய்யவென்றார்

56.விருத்தம்
கடக்கரைத் தனிலேவந்து கரிய மாலீசறோடு
மடக்கொடியுமையாளோடு மறைமுனி தேவறோடும்
குடக்கலை பொந்தும்வேதக் கூர்முனி ரிசிகளோடும்
கடக்கரை தனிலேவந்து கண்டனர்க் கடலைத்தானே

57.விருத்தம்
வந்தவரெல்லாபேரும் வட்டமிட்டதிலே நிற்க
சந்தனவாரியோரந் தன்னிலே நின்று றெண்டு
சுந்தரமுனிவர் வந்து சுவாமிதன் பதமே பூண்டு
எந்தனின் பிரானேயென்று யிருவரும் வணங்கிச் சொல்வார்

58.விருத்தம்
என்றிந்த விபரமெல்லாம் யியல் முனிவோர்கள் சொல்ல
நன்றிந்த விபரமென்றே நாரணர் தயவுகூர்ந்து
சென்றிந்தச்சடலந்தன்னை திருச்செந்தூர் பதியிலெங்கும்
கொண்டந்த தெருவுங்காட்டி குளிப்பாட்டி வாருமென்றார்

59.விருத்தம்
மேலுள்ள சடலந்தன்னை மிகுமுனிமாரே நீங்கள்
நாலுள்ள தெருக்கடோறும் நடத்தியே தரையிலூட்டி
பாலுள்ள பதத்தில்கொண்டு பழவினைத் தீரக்காட்டி
மாலுள்ளம் புகுதநாட்டி வாருங்கோசிணமே யென்றார்

60.விருத்தம்
அப்படிமுனிமாரேகி அங்கங்கே கொண்டுகாட்டி
முப்படிதோஷம்போக முனைபதமதிலே மூள்கி
இப்படியிவரைக் கொண்டு யிவர்வரு முன்பதாக
செப்படிவித்தை நாதன் செகலினுள்ளகமே சென்றார்

61.விருத்தம்
வானவர் தேவர்போற்ற மறைமுனிமார்கள் பாட
தானவரிஷிகளோடு தமிழ்மறைவாணர் போற்ற
ஞானமாம் வீணைத்தம்பூர் நால்த்திசை யதிரவோசை
ஓ நமோவென்று தேவர் ஓலமிட்டாடினாரே

62.விருத்தம்
மத்தளத் தொனிகள் வீணை மடமடன்றேற்ற வானோர்
தித்திதெய்தித்தியெனத் தேவியர் பாடியாட
தத்தியாய் சங்கமெல்லாஞ் சதுர்முறை கூறிநிற்க
முத்திசேர் மாயன்றானும் முள்கினர் கடலினுள்ளே

63.விருத்தம்
கடலினுள்ளகமே போர்ந்து கணபதி மேடைகண்டு
மடவிபொன்மகரந்தன்னை வாகுடன் பூசிதேய்த்து
நிடபதி மாயன்றானும் நிறைந்த பொன்னிறம் போல்
வன்னி வடவனல் போலவீசி வந்தனர் மகரமுன்னே

64.விருத்தம்
வந்தனர் மகரமுன்னே மாதுபொன்மகரங்கண்டு
செந்தளலெரியோ வென்று சொல்லிடபதறி நொந்து
எந்தனின் மன்னவனோ யெறி வடவாசமாமோ
கந்தனின் மாயமாமோ யென்றவள் கலங்கினாளே

65.விருத்தம்
கலங்கியே மகரந்தானும் கருத்தளிந்தேதோ சொல்லும்
இலங்கியே வாறோமென்ற யென்மன்னர் தானோஆறோ
சலங்கியே அதிரபூமி சதிறெனக் கதிருபாய துலங்கிய
சுடரைப்பார்த்து சொல்லுவாள் மகரந்தானேது

66.விருத்தம்
தேடிய மறைநூல் வேததேவியர் கமலநாதன்
நாடியயிறையோன் ஞானி நாச்சிமார் தேவறோடும்
கூடிய ரிஷியோர் வானோர் குவலயமறியா விஞ்சை
தேடியமகனார்க் கென்று செப்பினா றொப்பிலானே

67.விருத்தம்
மகனேவுனது மனமறிய மறையோரறியா விஞ்சைசெய்து
அகமேயருளி தருவதெல்லாம் அனுப்போல் அகல ஆகாதே
உகமே முடிந்ததின்பிறகு வுதிக்குந்தர்ம யுகத்தில் வந்தால்
செகமேயறியச் சொல்லிமிக சிறந்தே வாழ்ந்து வாழ்வாரோ

68.விருத்தம்
ஆண்டாயிரத்தியெட்டதிலே அதன் மாசிமாஸ்த்தையிலே
நாந்தான் கடலின்கறையாண்டி நாராயணனே பண்டாரம்
கூண்டாந்தெக்ஷணாபுரியில் கொண்டேபள்ளி தர்மமுற்று
ஒன்றாம்விஞ்சை யிதுமகனே வுரைப்பேன் றெண்டாம் விஞ்சையிதே

69.விருத்தம்
வேண்டாம் வேண்டாம் காணிக்கையும் மிகவேண்டாம் கைக்கூலி
ஆண்டார் நாராயணர் தனக்கு அனுப்போல் வேண்டாங் காவடியும்
வேண்டாமெனவே நிறுத்தல் செய்து வாய்த்த சிறையாய்க் கவிள்ந்திருக்க
ரெண்டாம் விஞ்சை யிதுமகனே நவில்வேன் மூன்றாம் விஞ்சையிதே

70.விருத்தம்
கொற்றவர் தானுமாண்டு குறும்புகள் மிகவேதோன்றி
உற்றதோர் துலுக்கன்வந்து வுடனவன் விழுந்துவோடி
மற்றதோராண்டு தன்னில் வருவோமென்றாகமம் போல்
முற்றளத்தோருங்காண வுரைத்தனர் மூன்றாம் விஞ்சை

71.விருத்தம்
எந்தனின் தவத்தாலே யிகாபரன் வுனக்குள்ளகிதந்திடு
மகனே நானும் தனதுள்ளமமர்ந்தே நானும்
உந்தனைக் கண்டால் மூவர் வொஞ்சியே மகிள்வார் கண்டாய்
சித்தர்கள் யெவரும் போற்ற செயல்பெற்ற மகனும் நீயே

அய்யா உண்டு

குறிப்பு: பிழையிருப்பின் ayyaiasf@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்க.

Last Updated On June 09, 2018