You are here:
< Back

அகிலவிருத்தங்கள் – பாகம் 4

76.விருத்தம்
இந்தப்படியே நாரணரும் யியம்பமகவு மேதுரைக்கும்
கந்தவேலா யென்தகப்பா கடியவுனது படிநடக்க
எந்தப்படியோ நான்றமியேன் யேதோவறியப் போறேனென
சிந்தைமகிள்ந்து தகப்பனுட திருதாள்பிடித்து செப்பலுற்றார்(416)

77.விருத்தம்
கண்ணேமகனே திருமகனே கமலப்பூமா கரிமகனே
எண்ணே யெழுத்தே யென்மகனே யிறையோர் தொழவே வரும்மகனே
ஒண்ணேமகனே வுயர்மகனேஉடையமகனே கண்மணியே
தண்ணே மகனே தவமகனே சாகாதிருக்குஞ் சலமகனே

78.விருத்தம்
கண்ணேமகனே திருமகனே கமலப்பூமா கரிமகனே
எண்ணே யெழுத்தே யென்மகனே யிறையோர் தொழவே வரும்மகனே
ஒண்ணேமகனே வுயர்மகனேஉடையமகனே கண்மணியே
தண்ணே மகனே தவமகனே சாகாதிருக்குஞ் சலமகனே

79.விருத்தம்
மகனேதவமே மரகதமே மாதவம்பெரிய மலரோனே
தவமேயுனதுள் வைத்தவிஞ்சை தானேபோதுமோ மகனே
எகமேழ் மகிழ வந்தவனே எந்தன்மகனே வளர்வையென
உகமேயளந்தோர் வுரைத்திடவே வுயர்ந்த மறையோர் வாழ்த்தினரே

80.விருத்தம்
பொன்மணிப் பதியினுள்ளே புனலரிகிருஸ்ணர் பெற்ற
தன்மணிப் பாலன்தன்னைத் தங்கமாந் தொட்டிலிட்டு
மின்மணி கொடிசேர்கன்னி விளங்கியே சோதிமாது
கண்மணிவைந்த ராசர் காணாத் தாலாட்டினாளே

                               தாலாட்டு

தாரதரதர தாராரோ தாரரர ரரரா றாறோ
தாரதரதர தாராரோ தாரரர ரரரா றாறோ
நாராயணர் தானோ தாறாரோ நல்லநாராயண வைகுண்டமோ
காரணர் தானோ வைகுண்டமோ கைலாசநாதக் கண்மணியோ
செல்வமுதலான சீமானோ சிவசிவா சிவசிவ முதலோ
அல்லலகற்றியே யரசாளும் அரியோன் மிகப் பெற்ற அரிதானோ
தெய்வப்பெருமாள்தான் பெற்றகன்றோ சீதைமாதுதான் பெற்றகன்றோ
மெய்யநரிநாதன் பெற்றகண்றோ விஸ்ணுமகாபரன் பெற்றகன்றோ

ஈசர்மைத்துனர் பெற்றகண்ணோ யிரவா
திருமாது பெற்ற கண்ணோ
மாயத்திருவுளம் பெற்றகண்ணோ மானவை
குண்ட ராஜகன்றோ
வேதக்குருநாதன் பெற்ற கன்றோ
வீரலட் சுமி யீன்ற கன்றோ

சீதக்குருதாயார் யீன்றகன்றோ தெய்வ வைகுண்ட ராசகன்றோ
கிஸ்ணமகாநாதன் பெற்றகன்றோ கிருபைக்குருநாதக் கண்மணியே
விஷ்ணுமகாநாதன் பெற்றகன்றோ வீரலெக்ஷிமி யீன்றகன்றோ
நாட்டுக்குடையதோர் நாரணரின் நல்லபாலனோ வைகுண்டனோ
மூலச்சிவநாதன் பெற்றகன்றோ

வுலகைவொருக்குடைக் காள்வானோ
நாலுவேதமுந்தாண்டி முறை நடத்தி வொருக்குடைக் காள்வானோ
தர்மத்திரவானோ தாராரோ தங்கவைகுண்டத் தாட்டீகனோ

மகரசீதையாள் வயிற்றிலுற்று வளர்ந்த வைகுண்ட மாமனியோ
அகரசிவகோபுர அழகுபதி அதிகபதி கண்டுவந்தவரோ
தங்ககோபுரந்தளிர் மரமுஞ் சதுரமேடைகள் கண்டவறோ
சங்கமகிளவே வந்தவரோ சகலகலை தமிழராய்ந்தவறோ

உலகபதினாலும் ஒருகுடைக்குள் ஒருசொல் மொழிக்காழ வந்தவறோ
இலகுபிரகாசச் சுவருகொண்டு யிலங்கும் பதியாள பிறந்தவறோ
வம்புக்கலியுகக் குலமறுக்க வைந்தப்பதியாள வந்தவறோ

அம்புகணை யொன்றுமில்லாமலே அறுக்கவந்தாறோ கலிதனையும்
கூடப்படைகள் துணையில்லாமல் குறும்பையடக்கவே வந்தவறோ
சாடத்தலையாறி வொன்றில்லாமல் சதைக்கவந்தாறோ கலியுகத்தை
வாழுவாயுத மெடுக்காமலே வதைக்கவந்தாறோக் கலியுகத்தை
கோழுபேய்களை கிரகங்களை கொல்லவரம் பெற்ற வைகுண்டரோ
சாணாக்குருநாத வைகுண்ட ரோ

சாதிதர்க்கார்க்குந் தலையாரியோ
காணாக்கருவான குருமூலமோ கர்த்தன் கர்த்தாதிக் கடவுள்தானோநீசக்குலங்களைக் கருவருக்க நெடிய நாராயணர் பெற்றகன்றோ
தோஷப்புழுச்சாதிக் குலமறுக்க திருமால் நாராயணர் பெற்றகன்றோ
சீமையன்பத்தாரு தேச மெல்லாஞ் சொல்லொன்றுக்குள்ளாய்ப் பிறந்தவறோ

நாமம் பெரியதோர் வைகுண்டரின் நாமம்பெற வோங்கவந்தவரோ
தெய்வபாலர்கள் சிறந்துபோற்ற சீமையரசாள வந்தவரோ
மெய்வரம்பதின் முறைநடத்தி மேன்மைசெங்கோல் முடிதரித்து
பொர்மை பெரியோனோ வைகுண்டனோ பெரியப்பூமேடைக் கொலுவீரனோ

தர்மவரம்புகள் தவராமல் தரணியரசாளும் வைகுண்டறோ
திராசு நிறையிலுந் துல்லியமாய்ச் செங்கோல் செலுத்தவே வந்தவறோ
மிராசுமூவர்க்கு முதன்மைதானோ மூலச்சிவமணிக் குருநாதனோ
சான்றோர் கைகட்டி சரணங்கூறத் தரணியொருக்குடைக் காள்வாறோ
வையமழந்தோர் நாரணர்க்கு மதலையென வந்த வைகுண்டமோ

தர்மபதியாழும் வைகுண்டரோ சாணார்கனு கூலமானவரோ
அலைந்து மலைந்ததோர் சான்றோர்க்கு அதிகவிதி கொண்டு பிறந்தவறோ
சாணார் குடிக்குல நாயகமோ தர்மந்தளைக்கவே பிறந்தவறோ

தோணுதுறை கொண்டுவந்தவறோ துவரயம்பதியாளப் பிறந்தவறோ
ஏழுயுகபர கணக்குயெல்லாம் யெடுத்து நடுத்தீர்க்க பிறந்தவரோ
ஆழும் வைகுண்டப் பதியாளவே அதியவைகுண்டம் பிறந்தவறோ
வீரவீராதி வீரன்றானோ வீரசூரனா

சூரசூராதி சூரன்றானோ சூரனார்பெற்ற கண்மணியோ
நாதநாரணர் பெற்றகண்ணோ நாகமணிநாதன் பெற்றகண்ணோ
ஏகச்சிவநாதன் பெற்றகண்ணோ யிரவாத்திரு மூர்த்தி பெற்றகண்ணோ
வேறு
சந்திரசுந்தர தந்திரமந்திர சாமிசீர் பாலகனோ
தாயகமாகிய நாயகமாகிய தாண்டவச்சங்காரனோ
சுந்தரசந்திர யந்திர குஞ்சித சூரிய பிறபாலகனோ
சூதனோ வீரனோ மாதனோ நீதனோ சுலாகலாதிபனோ

தந்திர மந்திர யிந்திர சுந்தரி சைந்ததி சுந்தரியோ
சகடவெலி சண்டரைய கடவெலி செய்திடுஞ் சக்கிரவிக்கிரனோ
கொந்தரி சந்ததி தந்திர சுந்தர கோசலா நாயகனோ

கொடுகலியறவொரு கடுமுனை கொண்டருள் குல வெங்கிடகுண்டமோ
சுத்தனோ கர்த்தனோ நித்தனோ வர்த்தனோ துலங்குந்தங்கரனோ
சூரனோ வீரனோ தீரனோ நீதனோ சூரியப்பிறகாசவீதனோ

வீரனோ காரனோ தாரனோ சாரனோ வெங்கிட ரங்கீடனோ
விகட கட கடக டருட ட ட டக மருள் விக்கிர சுக்கிரனோ
தீரனோ காரனோ சீரனோ வீரனோ செந்திலம்பதி வளர்ச்சந்திரனோ
திக –தக –தரிகிட செகமுக மருள்புரி திக்கிர விக்கிரனோ
நீதனோ கீதனோ வீதனோ மாதனோ நீதவெங்கோகுலனோ
நிகடுகலி தகடறவி கடுகுடல் கருவர நெக்கிரவிக்கிரனோ

81.விருத்தம்
இப்படி யவ்வைமாது யியல்பு தாலாட்டக் கண்டு
செப்படி முனிமாறெல்லாஞ் சிவவைந்தர் பதத்தில் சென்று
முப்படி முறைபோல் தேவர் முக்கந்தன் பள்ளிகொள்ள
அப்படித் தேவரெல்லாம் அவரிசைக் கூறலுற்றார்

                                  பள்ளி யுணர்த்துதல்

பள்ளியுணராய் சிவன்மருகா நீ பள்ளியுணராய் சிவன்மருகா நீ
பள்ளியுணராய் நீ தெள்ளிமையாகவே யிவ்க்கடல் மீதினில் தாக்குடனுதித்தவா
வெள்ளியுதித்திட பள்ளியுணர்த்தவும் வேதநாராயணர்
சீத கோபாலர்க்கு கொள்ளியெனவந்த வைகுண்ட கோவனே
கோவேங்கிரிவளர் யீசர்மருகோனே வள்ளிமணவாளர்
வளர் செந்தூர் வாரியில் வந்து பிறந்து நல்தெச்சணம் புகுந்தவா
பள்ளியுணராய் சிவன்மருகா நீ

வேகமுடனொரு சந்தத்துள்ளாடியே மேதினியோருக்குபகாரங்கள்
செய்யவே ஆகாதபேர்களை அக்கினியில் தள்ளவும் ஆகின்றபேர்க்கு
உபகாரங்கள் செய்யவும் தாகத்துக்கானதோர் தண்ணீர் கொடுத்து நீர்
சஞ்சல நோய்பிணி யஞ்சேர்க்குத் தீர்க்கவும் யேகத்துடன்நாளும் நாராயணவேந்தர்க்கு
எம்பிரான் யெனவரும் தம்பிரானானவர் பள்ளியுணராய் சிவன்மருகா நீ

மூர்க்கன் கலியுகராசனைத் தட்டியே முடுமுடுக்கஞ் செய்த மூர்க்கரை
வெட்டியே ஆர்க்கமுடன் புவிஅன்பத்தாரு சீமையும் அடக்கியொரு சொல்லுக்
குடைக்குள்ளே ஆளவும் கார்க்க மகாதர்ம கர்ப்பையுங் கார்க்கவே
கர்த்தனரி கிஸ்ணர் புத்திரராய் வரும் தார்க்கத்திரம் வளர் வைகுண்டராசரே
தர்மபதியிலுரையும் பொறுமைகுலதீரா –பள்ளியுணராய் சிவன் மருகா

தம்பிலமான குறோணி குண்டோமனைத் தத்தியாத்தில்லை மல்லாலனை
சூரனை வம்பிலிரணிய ராவண சூரனை மகோதரனான
திரியோதனப் பாவியை கொம்பிலும் கெம்பிலும்
அம்பினால் கொன்றதோர் கோபாலகிஸ்ண குளத்தை
வைகுண்டரே நம்பின அன்பர்க்கு வுபகாரச்சாலியே
நாரணா சீமைக் கரிவிரியானவா -–பள்ளியுணராய் சிவன் மருகா

82.விருத்தம்
பள்ளிதானுணர்த்ததேவர் பரிவுடன் கேட்டுவைந்தர்
தெள்ளிமையாகக் குண்டர் சிந்தையிலன்பு கூர்ந்து
நள்ளிய தேவரார்க்கும் நயமுடன் தயவு மீந்து
துள்ளியே தகப்பன் பாதந் தொழுதவர் வணங்கி சொல்வார்.

                              தேவர்அபயம் இடுதல்

நாராயணா தீரா நல்லநாகந் தனில்த்துயில்வாய்
நாடுங்கலி கேடுவரும் நாதாவுமக்கபயம் –சீராய்ப்புவி
யாள வருவாயுனக்கபயஞ் சிவசிவனே சராசரணம் 
மகாசிவனே யுனக்கபயம் –பாறாய் வேளைமுகமே பராபரமே
யுமக்கபயம் –பாலர் தெய்வச் சான்றோர் படுந்துயரந்தனை
மாற்றும் –நாராயணாதீரா நல்லநாகந்தனில்த் துயில்வாய்
நலமோ துனக்கிதுநாள்வரை நாங்கள் படும்பாடு

கடல்மேல் துயில்கண்ணா கனிகொண்டே கன்றையெரிந்தாய்
களமே பெலிகொழவே கூளிகளிக்க யிலங்கை யளித்தாய்
குடைபோல் குன்றை யெடுத்தாய் முப்புரக் கோட்டை தனையெறிந்தாய் –கோனினிடை மாதரினை கோனாகவே
வளர்ந்தாய் –காடோகாலி மேய்த்தாய் புனல் காழியன்
றனை வதைத்தாய் –கஞ்சன்றனை வதைத்தாய் பிலக்காரர்
பிலம் வதைத்தாய் –மாவெலியைச் சிறை வைத்தாய்
கோசலாபுரியை யாண்டாய் –வலுக்குகனை மிகக் கண்டாய்

குறோணிதனை வதைத்தாய் வலுகுண்டோம சாலியை
கொன்றாய் –கொல்லைதில்லை மல்லன் கொடுஞ்சூரன்
றனை வதைத்தாய் –இடாய் வலி யிரணியன் குடல்
ஆறாய் ஓடக்கொன்றாய் –இரக்கமற்றத் துரியோ
தனன் –அரக்கர் குலமறுத்தாய் –இன்னங்கலி
நீசக்குலம் கொன்னே வரம் பெற்றாய்
ஏழைக்குடி சாதிகட்க்கு மீளவிடைக் கொடுத்தாய் –எழுந்து தெக்ஷணா புரியில் யிரங்கி வரவேணும்
மாளக்கலித்தாழ நரகம் வீழ வரம் பெற்றாய்

வாய்த்தகுலச் சான்றோர்ரவர்க்கு யேற்ற வரம் பெற்றாய்
வரவேணுந் தெக்ஷணாபுரி மலைபோலுயர்ந்து போகு
தேசங்கலி தீது வனியாயம் பொறுக்கரிதே
சிவனே வைகுண்டராசே தெக்ஷணாபூமியில் போவோம்
கேட்ப்பாரில்லை யெனவே பேய்கள் கீழுமேலுஞ்சாடுது

கிஸ்ணுமகாவிஷ்ணு வுன்கிருபை யிரங்க வேணும்
தாண்மை குலச்சான்றோருனைத் தவத்தால்த் தேடி வருந்தும்
தாயுமவர் தகப்பன் சாமி தானேயல்லா லுண்டோ
சறுவபரா சாமி சிவகாமி யுமக்கபயம்
சாணார் படுந்துயரங்கண்டு சாமியெழுந்தருள்வாய்
ஆற்றிலலை கோரையைப் போல் அலைவதுந் தெரியாதோ
அணைப்பாருன் துணையே அல்லால் அவர்க்கு யேதுமுண்டோ

பலநாளவர்படும் பாடெல்லாம் பார்த்தே யிருந்தாயே
பயமோயவரிடம் போகிலுஞ்செயமோ சொல்லுமையா
பாலரவருமங்கேயல்லால் பாறாதிருப்பாயோ
ஆருமற்றோர் போலே அவரலைவதுந்தெரியாதோ
அரனே சிவமருகா வுனக்கபயம் வுனக்கபயம்
அவரால் நாங்கள் படும்பாடெல்லாம் அறியலையோ
சுவாமி-ஆதிமுறை ஆகமமதை அழித்து சொல்லுறோமோ

அதுதான் பொய்யோ மெய்யோ வென்றாகமந்தனைப் பாரும்
அண்டரெண்டந்தொளவேவரும் ஆதியுனக்கபயம்
அரகரா சிவ அரனேசிவ அரசேயுனக் கபயம்
ஆதிசிவனாதி தவமோதி வுனக்கபயம்
அய்யுங்கிலி சவ்வுங்கிண் அரனே வுனக்கபயம்
அம்மாவாதி அய்யாசிவ மெய்யா வுனக்கபயம்
அரசே தெக்ஷணாபுவியில் வரவேணு முனக்கபயம்
அந்தக்கலி திந்தையென்று அறவே வரவேணும்

அந்திடக்கலி செத்திடக்கலி அரவேவரவேணும்
அய்யாக்கலி தீயாவிலே அரவேவரவேணும்
அவகடக்கலி சவகேடாக அழிக்க வரவேணும்
அன்பத்தாறு சீமையொறு குடைக்குள் அரசாள்வாயுனக்கபயம்
அத்தாவுமக்கபயஞ் சிவமுத்தா வுனக்கபயம்
ஆதிநாராயணர்க்குப் பாலனான குணதீரா
ஆதியுனக்கபயம் சிவசோதி யுனக்கபயம்

அரனே சிவனார்க்கு மருகனான குணபாலா
அலைவாய்க்கரை மடமாம்பதி ஆள்வாயுனக்கபயம்
அய்யா வைகுண்டா அலைகண்டாய் வுனக்கபயம்
தானுமாலயனாய்ப் பேருதுளைக்கச் சிவமுளைக்க
தானாயொரு குடைக்குள் தர்மத்தாரணியாழவந்தார்
சாணார்க்குருவே தவக்குருவே தானானாய் வுனக்கபயம்
தாண்டும்பதிக் கூண்டப்பதி தானாயுனக்கபயம்
தவமே தெக்ஷணாப் பூமியில் தானே வருவாயே

83.விருத்தம்
தெக்ஷணமீதேவந்து தெய்வமாயிருந்து கொண்டு
மிக்ஷமாய் புதுமைக்காட்டி மேதினியெவருங்காண
உக்ஷமே சான்றோர்க் கீந்து வுதவியுஞ் செய்வாயென்று
பட்சமாய் தேவரெல்லாம் வைந்தரின் பதத்தில் வீழ்ந்தார்

84.விருத்தம்
வீழ்ந்திட கண்டுவைந்தர் விடையுள்ள தேவர்தன்னை
சோர்ந்திடா மொழிகள் சொல்லித் தேவரேபதறவேண்டாம்
ஓர்ந்திட யெனக்குமுன்னே வுள்ளது தானேயென்று
கூர்ந்திட வுரைத்தீரெல்லாங் குணமுடன் மகிழ்ந்து சொல்வார்

85.விருத்தம்
தெய்வமாதர்கள் தான்பெற்ற தேவரே சான்றோர்க்கெல்லாம்
மெய்வரம்பது போல் ஞாயம் விளம்பிடப் பேறுபெற்றேன்
பொய்வரம் பசாசுயெல்லாம் பொன்றுற வரங்கள் பெற்றேன்
அய்வரைக்காத்துத் தர்ம அரசுக்கும் பேறுபெற்றேன்

86.விருத்தம்
ஒருகுடையதற்க்குள்ளாள ஒருவிஞ்சையதிகம் பெற்றேன்
கருவுடையோருங்காண கனவரம் பெற்றேனானும்
மருகிநீர்தவிக்க வேண்டாம் வருவேனான் சான்றோரண்டை
குருகலியதனைத்தாண்டிக் கொள்வேனான் குலத்தைத்தானே

87.விருத்தம்
என்னையே கெணியாவண்ணம் யேளையாயிருந்த சான்றோர்
தன்னையே பழித்தோறெல்லாஞ் சளமது துயரங்கொண்டு
அன்னீச நரகந்தன்னில் அகப்படத் தள்ளித்தள்ளி
கொன்றுநான் சான்றோர்க்கெல்லாம் கொடுப்பேன் மேல்பவுசுதானே

88.விருத்தம்
எல்லாஞ்சான்றோர் கையாலே யெள்ளும் நீருங் கலிக்கிரைத்து
பொல்லாக்கலியை நரகமதில் புக்கவடித்துப் பேயோடு
கொல்லவிடைகள் கொடுப்பேன்நான் கூண்ட சான்றோர் கையதிலே
வல்லோர் புகளுந்தேவர்களே மனமே சடைக்க வேண்டாமே

89.விருத்தம்
வேண்டாமெனவே தேவருக்கு விடைகள் கொடுத்து வைகுண்டரும்
கூண்டாங் கடலின் கரைதாண்டி குதித்தே கரையில் ஓடிவந்து
தாண்டாய் முன்னே பெற்றதொரு தாய்க்கோர் சடலவுரு காட்டி
ஆண்டாராணையொருவருக்கும் அகலாதெனவே ஆணைகொண்டார்ர்

90.விருத்தம்
நானோபிறந்த சமுத்திரத்தின் நடுமேற் கடலின் அன்னா பார்
ஏனோ பதியும் மேடைகளும் மெண்ணிப் பாரு தேர்நிறமும்
மானா பொன்னோ மண்டபமோ வறடே உனக்குச் சாட்சியிது
யானோ காட்டுஞ் சொருபமெல்லாம் யாதா மிருநீ மறவாதே

91.விருத்தம்
பதமோ பதமோ பால்க்கடலின் பாலையகமே கொள்ளான
இதமாயிதமாய்ச் சொல்லிடவே யிசையாவண்ணம் வீழ்ந்திடவே
உதையமுதையம் வெழிதிறந்த வுருவையார்க்கு முறையாமல்
இதையே யிதையே மறந்துயென்னை யிளப்பம் பேசி நெகிழாதென்றார்

92.விருத்தம்
ஆண்டாயிரத்தி யெட்டுமுன்னே அன்னையெனவே நீ யிருந்தாய்
கூண்டாமெட்டா மாசியிலே குணமாய் நாராயணர் மகவாய்
சான்றோர் கெதிகள் பெற்றிடவே தர்மகுண்டம் பிறந்துவொரு
கூன்றாங்குடைக்குள் அரசாளக் கொண்டேபோறே கண்டிரு நீ

93.விருத்தம்
அண்டரொடு தெண்டனிட் டென் றிசை நின்றுவர ஆதவனை சூழ் கணம்போல்
அரியரி யரகரா சிவசிவா வென்று சிலர் ஆடியே பாடி வரவே
தொண்டரவர் கண்டு வைகுண்டரடி கொண்டு தொழ்ச்
சூழவளைந் தேழியல் படர்தே சூரர்பதி நாராயணர்
வீர்பதம் ஓதிவரச் சூராதி சூர ரெனவே

94. விருத்தம்
செண்டையொடு தண்டைமணி டண்டடம் டண்டமெனத் தேவர் சேவித்து வரவே
சிவநமசி வாயமெனும் ஓம்நமசிவாயமெனும சேவித்திரு புறமு வரவே
அண்டமுர செண்டுமணி டுண்டுடும்டுண்டுமென ஆகாய மீதில் வரவே
அனவரத கோலாக லாதி நாரணாமென்று அமரரிசை கூறி வரவே

95.விருத்தம்
மத்தள முடுக்கு பல வாத்தியம் மடடென வாமைதில் நின்ற திரவே
மலர் மாரி சலமாரி தினமாரி தூவியே வானவர் இசை கூறவே
தத்தளங் கிடகிட தொம்மெனத் தொம் மெனச் சங்கீதக் காரர் வரவே
சகல கலைக் கியானவேத சாதிமுறை யோதிமிகு சாஸ்திரக் காரர் வரவே

96.விருத்தம்
தித்தங் கண தித்தங் கிண தித் தங்கிணதித்தியெனச் சிலதேவர் கூறி வரவே
சிவசிவ சிவசிவ சிவ சிவா வென்று சிலதேவர் சேவித் தியல் கூறி வரவே
நித்தங் கண தித் தங்கிண உத் தங்கிண தித்தியென நேரியார் சீரியல் கூறவே
நீலங்கிரி வாலங்குரு நீயென் குரு தாயென் குரு நீதென் குருவெனப் போற்றினார்

97.விருத்தம்
பண்டை முறையின்று வெனக் குண்டமெனக் கண்டுவரும் பலவாங்கிரி குண்டமே
பசுவாமனே சிசுபாலனே பலமானனே தவமானனே பசுவாகிய நிசமே
தெண்டர் தனக்கோன் மூவருங்குண்டவைகுண்டனாய் தெக்ஷணாபதி பூபனே
துளபமணி களபமணி அழகொழுகு கிருபைமிகுத்து துவராபதிக்கரசே யெனத்தொழுது
சண்டன்வலி துண்டப்பட கொண்டகனை விண்டத்தொடு துச்சாவில்லுவீரர்
சாமியுனருளோ யெங்கடலலையின் மீதலையின் வழிதானே நடவாயே
துண்டப்படக் கொண்டக்கணை கண்டப்படப் பொண்டத்தோடு துச்சாவில்லு வீரா
சுத்தாவுனக் கேத்தார்தனை வித்தனதில் வித்தா துவராபதிக்கரசே யெனத்தொழுதார்

98.விருத்தம்
நானிலமரசு வாழ நாரணர் பெற்றுவாரார்
தானிதமான வன்பாய்ச் சகலோருங் கேட்டுகொள்ளும்
மானிலத்தோரே யென்னை வருந்தியே தேடவேண்டாம்
நானினி செய்யவாகா நவின்றவர் தெய்வம் போனார்

99.விருத்தம்
தெய்வங்களுலகி லெல்லாந் தெரிசனங் காட்டிகாட்டி
மெய்வரம் புள்ளோறெல்லாம் மேதினிவிட்டு போர்ந்தார்
பொய்வரம் பசாசுயெல்லாம் பொன்றிய வகைபாறாமல்
மெய்மறந்துரைகள் சொல்லி மேதினியோரறிந்தாரன்றே (455)

100. விருத்தம்
வெள்ளா சனத்தில் விரைவாசியை நிறுத்திக்
கள்ள மானதை அகலக் காடகற்றி விள்ளரிய
வெள்ளமாங் கருணை பெறும் வேத முக மாமுனியே
உள்ளதை எனக் கின்னதென் றுரை

அய்யா உண்டு

குறிப்பு: பிழையிருப்பின் ayyaiasf@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்க.

Last Updated On September 29, 2018