You are here:
< Back

அகிலவிருத்தங்கள் – பாகம் 5

101. விருத்தம்
பூரணத்தை னாடி புகழ்ந்துமுனி கொண்டாடி
வாரணத்தின் கோடு வரை தேர்ந்து- காரணத்தை
கட்டுரைத்து நாடுவளம் விட்டுவரைப்பே னென்று முனி
தொட்டுப் பதங் குவித்துச் சொல்லுவான்

102. விருத்தம்
ஆதியி லுதித்த வாறும் அரன் சிவன் பிறவி வாறும்
ஓதிய யுகங்கள் வாறும் ஒவ்வொரு அசுரன் வாறும்
நீதிய மனுக்கள் வாறும் நீதமாங் குண்டர் வாறும்
தீதிலாத் தர்ம ஞாயச் சிறப்புடவாறுஞ் சொன்னான்.

103. விருத்தம்
தெச்சணா புரியி நீதஞ் செப்பிடத் தொலையா தையா
மிச்சமாம் புவியி தாகும் மேவலர்க் குகந்த நாடு
பச்சமால் மகனே நீரும் பண்ணுறத் தவசு ஏறும்
அச்சமும் வாரா தையா என்றடிமிசைப் பணிந்து நின்றான்

104. விருத்தம்
நல்லது தானே யென்று நாராயணர் தயவு கூர்ந்து
வெல்லமர் மணவை வாரி மேன்முக மதிலே நின்று
அல்லல்நோய் பிணிகட் கெல்லாம் அறம தால் தண்ணீர் தன்னால்
தொல்லைநோய்த் தீர்ப்போ மென்று தெட்சணா பதியில் வந்தார்

105. விருத்தம்
வந்தவர் தலமும் பார்த்து வழியி னர்குலமும் பார்த்துச்
சந்தமாய் மகிழ்ச்சை கூர்ந்து சாமியும் முனியை பார்த்து
இந்தமா நகரில் வாழும் ராஜனு மறிய வென்றே
விந்தையா யறிவு ஒன்று விதித்தெழுதி யுனுப்பு மென்றார்.

106. விருத்தம்
என்றிந்த வசனம் தன்னை எழுதியே உலகில் விட்டு
நன்றிந்த வாச்சை வெள்ளி நற்கதி ரு திக்கும் வேளை
பண்டிந்த மூலந தன்னில் பஞ்சமி நேரந் தன்னே
குண்டத்தின் அரசு கோமான் குவலய மதிலே வந்தார்

107. விருத்தம்
உலகினில் மனுவாய்த் தோன்றி ஒருயிரு பதுநாலுக் கப்பால்
தலைமுறை வினைகள் போக்கிச் சடலத்துகள் ளூற லோட்டி
மலைசெந்தூர் ரலையி னுள்ளே மகரத்துள் ளிருந்து பெற்று
அலைகடற் கரை அய்யா நாராயணரெனப் புவியில் வந்தார்

108. விருத்தம்
வந்திந்த நாட்டிலுள்ள வன்குற்ற மதனைக் கேட்க
நந்திகோன் விபூதி சாத்தி நாடிய தவங்க ளேற்றி
முந்தநாள் மூவர்க் கெல்லாம் முதன்மையாய்ச் சாதித் தேறி
சந்ததஞ் சாகா விந்சை தலைவனாய் சமைய வென்றே

109. விருத்தம்
நீதிய ரோமம் வீசி நினை வொன்றைக் கருணை வாசி
சாதிக ளுரைக ளாறிச் சடத்துற வாசை அற்று
வாதியாங் கார மத்து மலசல மதங்க ளத்து
ஆதியை கருணை நாட்டி அவர்தவம் புரிந்தா ரையா

110. விருத்தம்
ஆசையால் பாச மத்து அனுதர்க் குளாங்க ளத்து
மாசதாம் வினைக ளத்து வாக்கலங் கார மத்து
நீசமாங் கலியை யத்து நீணிலத் தாசை அத்து
ஓசையாய் வெளியைத் தாண்டி ஒருவனைக் கண் டுகந்தாரையா

111. விருத்தம்
கண்டவர் பாலேத்து கண்சுழி முனையில் நாட்டி
பண்டவர் செகலில் பெத்த படிமுறை தவறா நாட்டி
கொண்டவர் லோகந் தன்னைக் குமியவோர் தலத்தி லாக்கி
இரண்டது மறிய வென்றே இவர் தவம் செய்ய லுற்றார்.

112. விருத்தம்
மனுதவ தாரங் கொண்டு வந்தவர் பிறக்க லுற்றார்
தனுமனு வோர்க ளெல்லாம் தழைத்து நீடூழி வாழ்ந்து
வனுதர்மப் புவியைக் கண்டு மாள்வறா வாழ்வு வாழ்ந்து
துணிவுடன் மனதி லேத்தி சூரியத்தவஞ் செய்தாரே

113. விருத்தம்
முற்பிதிர் வழிக ளெல்லாம் முதன்மை போலாக என்றும்
கற்பினைப் படியே தோன்றிக் கலியுக மீதில் வந்தார்
அற்புத மடவாரோடும் ஐவர்தன் குலங்க ளோடும்
செப்பியச் சாதி யெல்லாம் செயல்பெறத் தவசி யானார்.

114. விருத்தம்
இத்தவ மதியீ தெல்லாம் இயல்புடன் வசமே யாகக்
குற்றமே செய்வோ னீசக் கொடுக்கலி வழிகள் சாகக்
கர்த்தனார் கர்த்த னாகக் கலியுகத் தீர்வை யாக
உற்றவை குண்ட சுவாமி ஒருகுடைக் கரசு பெற்றார்.

115. விருத்தம்
பேய்கள்தான் பிறந்த வாறும் பெருவரம் பெற்ற நாளும்
மாய்கையாய் உலகில் பேய்கள் வந்ததோர் நாளும் பார்த்து
ஞாயமாய் நடுவுங் கேட்டு நாமதை எரிக்க என்றே
ஆயர்முன் னெழுத்துங் கொண்டு அருள்முனி வரவே என்றார்.

116. விருத்தம்
வரவென உரைத்த போது மறைமுதல் வேதன் வானோர்
துரித மீதோ டாவிச் சீக்கிரம் வந்தா ரங்கே
பரமருள் வைந்த ராசர் பார்த்தவர் தன்னை நோக்கி
விரைவுடன் பேய்க்கு முன்னாள் விதிதனைப் பாருமென்பார்

117. விருத்தம்
விதிதனைப் பார்த்து வேந்தன் விளம்புவான் வைந்த ரோடு
துதிகொளு வெழுத்தும் எந்தன் சுருதியுங் கேள்மோ அய்யா
ஆதிநாரா யணர்தா னிந்த வலிகலி யுகத்தி லேதான்
பதிவை குண்ட மென்று வந்தன்றே பிசாசு ஒழிந்து போனார்

118. விருத்தம்
பொய்யொடு பசாசு கூளி பொறாமையும் கலியும் நீசம்
மாயொரு கபடு கள்ள மனக்கறுப் புகங்கள் தீர்ப்பு
பொய்யொடு மிரட்டு வஞ்சம் பிழை பொல்லாப் பென்ற தெல்லாம்
வாயோடு வாயால் கெட்டு மறுவிறப் பில்லா போனார்.

119. விருத்தம்
நாரணர் வைகுண்ட மாகி நாட்டினில் வந்த அன்றே
காரண மெல்லா மாச்சு கலியுக மழிந்து போச்சு
பூரண வேத நூலும் புராணமுன் னாக மங்கள்
சாரமும் கெட்டுப் போச்சு சதாசிவம் வைகுண்ட மாச்சே

120. விருத்தம்
அழிவதை அழித்துப் போட்டு அவரொரு சொல்லுக் குள்ளாய்
சுழிவரை எழுத்தை ஊனி தெய்வமா தவரு மாகி
வழிதனில் வன்னி யாகி வகுத்திடும் மகவோ ராகி
அழிவில்லாப் பதிதா னாள்வார் ஆகமத் துரைதா னென்றார்

121. விருத்தம்
ஆனதால் ஆகா தென்றவ் வகைக்கிது நாள் சாக
யேனமு மிதுதா னென்று இயம்பிட வே தன் தானும்
மானமாய்க் கேட்டு வைந்தர் வானவர் சாட்சி யென்று
தானவர் கணக்கி லூனிச் சத்தியாய்ப் பதித்தா ரென்றே

122. விருத்தம்
கணக்கிலே எழுதிக் கொண்டு கருத்தினி லடக்கி வைத்து
இணக்கியே அவரை யெல்லாம் இலக்குலக் கதிலே கொல்வோம்
பிணக்கியே கோலம் தானும் பிசகில்லா வழியே செய்வோம்
குணக்கில்லாச் செய்வோம் பாரும் கோகிரித் தேவ ரெல்லாம்

123. விருத்தம்
உகசிவவானோர் வேதனொருதரும் போக வேண்டாம்
வகையுடன் நான்தான் செய்யும் வளிதன்னைப் பார்த்துக்கொள்ளும்
இகபரன் முதலாயிங்கே இருங்கென சொல்லி வைத்து
பகைசெய்த களிவை யெல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்.

124. விருத்தம்
ஆகமப் படியே பேய்கள் அதினுடவரங்கள் வைத்து
லோகங்க ளறியக் காட்டி யுகபர சாட்சி நாட்டி
வேகத்தில் மந்திர தந்திர விசையெல்லா மடக்க வென்று
நாகத்தை ஆண்டு வாழு மலையரசனை வருத்த வென்றார்

125. விருத்தம்
வருத்தவே வேணு மென்று மகாபரன் மனதி லுன்ன
விருத்தமாய் மலையில் வாழு மிருகங்கள் கோப முற்று
துரத்தலைக் கண்டு மெத்தத் துயரமுற் றயர்ந்து மந்திர
வருத்தலைச் செய்து பார்த்து மலைந்தனன் னரசந் தானே

அய்யா உண்டு

குறிப்பு: பிழையிருப்பின் ayyaiasf@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்க.

Last Updated On September 29, 2018