You are here:
< Back

அகிலவிருத்தங்கள் – பாகம் 6

126. விருத்தம்
மந்திரங் கழிவு சூனு மாரணக் கருவு கோளும்
உபாந்திரத் தீது கேடு ஊறியப் பொய்பொல் லாங்கு
ஏந்திய நினைவு பாச மிதுமுதல் வினைக ளெல்லாம்
சாந்தியி லெரித்து நீத்தித் தர்மத்தை வளர்க்க லுற்றார்

127. விருத்தம்
அன்னீதத் தnலே லோக மவனி யீரேழும் வாடிக்
குன்னியேக் கலியில் மூழ்கிக் குறுகியே அலைவர் கண்டு
கன்னிகள் மதலை யானக் கற்பகக் குலங்கள் தன்னில்
மன்னிய மனுப்போல்த் தோன்றி மன்னிகத் துதித்தார் தானே

128. விருத்தம்.
உதித்தாயிரத் தெட்டாமாண்டி லுவரிசெந் தூரில்பெற்று
குதித்தாண் டினில்மாசியில் தெச்சணா குருநாட்டினில்
பதித்தாமரை யூரினில் பள்ளிதான் கொண்டநாளும்
விதித்தாமிதைக் கருத்தா யருளுரைத்தாயறமுரைத்தாயே

129. விருத்தம்
பொய்யில்லைப் பசாசு யில்லைப் பில்லியின் வினைக ளில்லை
நொய்யில்லை நோவு மில்லை நொம்பலத் துன்ப மில்லை
தொய்யில்லை யிறைக ளில்லை சுருட்டுமா ஞால மில்லை
மையில்லை யுலகத்தோரே வாழுமோர் நினைவா லென்றார்

130. விருத்தம்
இத்தனை எல்லா மில்லை என்றரி நாதன் சொல்ல
புத்தியி லறிந்து மன்னோர் புதுமையென் றன்பாய் கண்டு
முத்தியி லிவரைக் கண்டு முயன்றவர் பேறு பெற்றார்
பக்தியில் லாத ரெல்லாம் பாழெனச் சொல்லி நின்றார்

131. விருத்தம்
இப்படி மனுட ரெல்லாம் யிவர்மொழி தர்மங் கண்டு
ஒப்புடன் கூடி வந்து ஒருவனே தஞ்சமென்று
செப்பிடத் துலையா தய்யா சீர்பதம் பதமே என்று
நற்புடன் மனுட ரெல்லாம் நாடியே மகிழ்ந் திருந்தார்

132. விருத்தம்
நாடியே யுலகிலுள்ள நருளெல்லாமோர் தலத்தில் வந்து
கூடியே நிற்கும் போதுக் குறோணிதன் கொடியால் வந்த
சாடிக ளதினால் நீசன் சாகிற தறியா மீறி
பாடிய வைகுண்டர் தம்மைப் படையேவிப் பிடிக்க வந்தான்.

133. விருத்தம்
வந்தவன் சுசீந்திரந் தன்னில் வளைந்தவன் கூடார மிட்டு
மந்திரி மாரை நோக்கி வகையெனப் புகல்வா னீசன்
இந்தமா நிலத்தி என்னோ டெதிரிதா யாரோ சொல்வீர்
விந்தையா யவரைச் சென்று விருத்திட்டு வருக என்றான்.

134. விருத்தம்
கேட்டீரோ முன்னா ளுள்ள கெறுவித வளங்க ளெல்லாம்
தாட்டிமை யாகச் சொல்வேன் தமியேனும் வணங்கி நீன்று
பூட்டியே மனதில் வைத்துப் புத்தியென் றெண்ணி நீரும்
நாட்டினில் நன்மை செய்து நலமுடனரசு செய்யும்

135. விருத்தம்
மாயனோ யுபாயத் தாலே மனுவது போலே யாகி
அயனர்க் குலமுந் தோன்றி அவனியி லிருப்பான் கண்டீர்
மாயத்தை அறியா நீரும் மாளவே போக வேண்டாம்
ஞாயமா உரைத்தே னையா நம்முட அரசு கேக்கும்

136. விருத்தம்
எளிமையாங் குலங்க ளென்று எண்ணுற மனுவே யல்ல
பழியென ஆதி நாதன் பார்க்கவே மாட்டா ரையா
அழிவது யுகத்துக் காச்சு ஆனதால் வருவார் திட்டம்
வழியிது இல்லை யையா மாறியே போவோம் வாரும்

137. விருத்தம்
தசரதன் மகவாய் மாயோன் சீமையில் வந்து தோன்றி
புசமுடப் பிறப்போர் கூடப் பிறந்ததுங் கேட்டி லீரோ
வசையுடன் மனுத்தா னென்று வாதிட்ட வரக்கன் தன்னை
விசையுட னறுத்த செய்தி விளம்பியுங் கேட்டில் லீரோ

138. விருத்தம்
தெய்வகி வயிற்றி லுற்று ஶ்ரீ கிருஷ்ண ரெனவே தோன்றி
வைவசு தேவன் பெற்ற மனுவென வளங்கள் நாட்டி
நெய்யிடை வழியில்ச் சேர்ந்து நெருட்டிமா ஞாலஞ் செய்து
செய்வதுங் கஞ்சன் தன்னைச் செயித்ததுங் கேட்டி லீரோ

139. விருத்தம்
ஐவர்க்குத் தூத னாகி யங்குமிங் கோடிச் சென்று
மைக்குழல் சிலர்கள் தம்மை மணங்களும் மிகவே செய்து
மெய்ப்புடன் கிளை களோடு மேவியே குழாங்கள் செய்து
செய்துரி யோதனைக் கொன்றச் செய்தியுங் கேட்டி லீரோ

140. விருத்தம்
இப்படி மாயன் தானும் இருமூன்று யுகங்கள் தன்னில்
ஒப்புடன் மனுப்போல் தோன்றி உவமைகள் பலதுஞ் செய்து
அப்படி யுகங்கள் தன்னால் அழிந்திடா வரங்கள் பெற்ற
செப்பிடக் கூடா மாயன் செய்தியுங் கேட்டி லீரோ

141. விருத்தம்
சாணெனக் குலத்தில் மாயன் சார் வரோயென் றெண்ண வேண்டாம்
பாணனாய்த் தோன்றி நிற்பார் பறையனாய்த் தோன்றி நிற்பார்
தூணெனத் தோன்றி நிற்பார் தோலனாய்த் தோன்றி நிற்பார்
ஆணெனத் தோன்றி நிற்பார் அவருரு கேட்டி லீரோ

142. விருத்தம்
குசவனின் குலத்தில் வந்தார் குறவனின் குலத்தில் வந்தார்
மசவெனக் குலத்தில் வந்தார் மாடெனக் குலத்தில் வந்தார்
விசுவெனக் குலத்தில் வந்தார் வேடனின் குலத்தில் வந்தார்
அசுவெனக் குலத்தில் வந்தார் அவருரு கேட்டி லீரோ

143. விருத்தம்
எவ்விடந் தானாய் மேவி இருப்பவர்க் கெந்தச் சாதி
அவ்விடமாகா தென்று அவர்தள்ள மாட்டா ரையா
செவ்விட மாயோன் சூட்சம் செப்பிடத் தொலையா தையா
இவ்விடம் விட்டு நாமள் ஏகுவோ நம்மூ ரென்றான்.

144. விருத்தம்
என்றவன் சொன்ன போது இராசனு மிகவே கேட்டுப்
பொன்றுற வகையி னாலே புத்தியி லறியா வண்ணம்
மன்றலத் தோர்க்கு ஏற்கா வார்தையை யுரைத்தா யென்று
கொன்றவன் தன்னைப் போடுங் கோபமாய் உரைத்தா னீசன்

145. விருத்தம்
வேதமாங் கலைகள் தேர்ந்த மேற்குல மதிலே மாயன்
சீதமாய்ப் பிறவா வண்ணஞ் சிறுகுலம் புக்கு வாரோ
ஆரடா இந்த வார்த்தை ஆர்க்குமே ஏற்கா போடா
பாதகா எனக்குப் புத்திப் பகரவே வந்தாய் மோடா

146. விருத்தம்
நித்தமும்முன்னால் லட்சம் நேடிய பொன்க ளிட்டுச்
சத்திரச் சாலை தோறும் தர்மமு மளித்து நாமள்
சித்திரத் திருநாள் நித்தஞ் செய்கிற குலத்தைத் தள்ளி
நித்தியம் வேலை செய்யும் இழிகுலம் புக்கு வாரோ

147. விருத்தம்
பிரமனை ஒப்பாஞ் சாதிப் பிராமணக் குலத்தைத் தள்ளிச்
சிராமனு மற்றோர் தன்னில் சேர்வது திடனோ இல்லை
வராகமா யுதித்த மாயன் மனுவெனப் பிறக்க மாட்டார்
ஏதடா இந்த வார்த்தை என்முன்னே சொல்லி நின்றாய்

148. விருத்தம்
காரண மான மாயன் கலியுகம் வருமென் றெண்ணி
நாரணன் பயந்து ஒடி நல்மலை ஏறி மானாய்
வாரண நாதனம்பால் வல்வேட எய்து செத்து
தாரணி வாறே னென்று தவலோகம் சேர்ந்தார் மாயன்

149. விருத்தம்
அப்படிக் கொத்த மாயன் அவனியில் மனுப்போல் வாரன்
இப்படி இவன்றான் சொன்ன இகழ்ச்சியை எங்கே கண்டோம்
கப்பிடிச் சாணான் கையில் கைக்கூலி வேண்டிக் கொண்டு
இப்படி மழுப்ப வந்தாய் ஏதடா செய்தி என்றான்

150. விருத்தம்
மழுப்பில்லைக் கேளுங் கேளு மாண்டுநான் போனா லென்ன
வழுப்பில்லை உனக்குத் தூண்டல் வளருது அவரிடமே கண்டாய்
கழுத்திலே உனது கையால் கத்தியை வாங்கி வைப்பாய்
முழுத்தில்லை யானா லென்சொல் மேல்வீசை அரிந்து தாறேன்.

அய்யா உண்டு

குறிப்பு: பிழையிருப்பின் ayyaiasf@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்க.

Last Updated On September 29, 2018