You are here:
< Back

நடுத்தீர்வை உலா

பூமிதனில் நாரணர்தான் பொதுத்தீர்வை தீர்ப்பதற்கு
கேட்கிற நாள் நேசமுடன் சீசருக்கு சொன்னகுறி நேமமுடன்
புத்தியுள்ள மானிடர்கள் பொங்கமுதுடன் கேட்க
பத்தமுள்ள எம்பிரான் பாதமது காப்பாம்
ஆதியிலே ஈஸ்வரன் தான் அம்புவிமயெல்லா மெரிக்கu
நீதியுடன் நேராகச் செத்த சனத்தை யெல்லாம்
சீக்கிரத் திலே யெழுப்பி நற்சொல்லாய்
ஞாய வழிகாட்டி குற்றமுள்ள பாவிகட்டுக்
கூர்நரகங் கொடுத்து மெத்தமிகச் சபித்து பேயாலே
தான் வதைத்து கோபித்துத் தள்ளிவிட்டு நல்லோர்க்கு
மோட்சம் கொடுக்க வள்ளலுடன் நாரணர்தான் வந்தக்கதை விள்ளக்கேள்
பாவிகட்காய் மானிடர்போல் சமுத்திரத்தில் பிறந்து
மூன்று நாளாயிருந்து எழும்பி பூவுலகில் வந்தவுடன்
நாற்பது நாளிருந்து ஞாய வழிகாட்டி
அற்புதமாய்ச் சீசருக்கு சொன்னகுறி
பொன்னுலகில் நாம் போவோம் பூவுலகோரே கேளும்
மண்ணில் நடுத்தீர்க்க வருவோமென்று சொன்னவுடன் சீசர்,
எத்தனை நாளிருக்குதென்று வினவப்பின் அதற்கே அரனுரைக்கும் வகையானது
நித்தம் நடக்கும் குறிகள் தன்னை நான் சொல்லுகிறேன்
என்று அடக்கமறச் சொல்லுகிறேன் அது கேளும்
பஞ்சம் வரும் செழிக்கும் பாவத்தால் பகையாம்
வஞ்சப் பெருங்காற்றால் வையகத்தில் சஞ்சலநோய்
தீநரகக் காந்தல் செகத்தோர்க்குத் தான் வயிற்றில்
மாநெருப்பாய்த் தங்கி வயிறுகழிந்து தீனமுடன்
மாள்வார் சிலபேர்கள் மாறாமலே சிலநாள் 25

தாழ்வார் உயர்வார் தான்கெடுவார் கோள்சண்டையாலே
சாவார்கள் அழிவார்கள் உண்டெனவே
இரத்தம் மிகவோடவே மண்டலத்தில்
நாடு பிழையாது நற்காலம் போயொளிக்கும்
கேடு தொடுத்து உலகம் கெட்டுவரும் நாடுதனில்
மழைதழைத்துப் பெய்யாமல் வானம் சுருங்கிவரும்
களைகள் பயிரில் கலக்குமே விளையாது
வெள்ளத்தால் பஞ்சம் வரும் வெண்சாவி ஆகிவிடும்
பள்ளத்தாலும் நெற்பயிர் நடுங்கும் சனங்களுற்ற
பட்டணங்கள் தோறும் பசிநோய் அதிகமதாய்
வட்டி அநியாயம் வாங்கிடுவார் தட்டழிந்து
பிள்ளையுடன் கொண்டபெண்ணை வேறாக விட்டிடுவார்
தெள்ளிமையாய்ச் கள்ளச்சிறைகள் வைப்பார்
வள்ளவிலாச் சூதுவிளையும் கடுஞ்சொல் களவும்
பொய் பெருத்து மாதரின்மேல் மோகமுற்று
வாடுவார் நீதமுள்ள ஞானங்கள் தப்பிவரும்
நாய்போல் சினந்திடுவார் ஊனக் கொலைபுரிவார்
ஓயாமல் தீனதியத் திருட்டுப் பெருத்து வரும்
சீமையெல்லாம் புரட்டு மிரட்டாகப் பேசிடுவார்
மருட்டியே எந்தன் கடன்பணத்தை இப்போது
தாவென்று சொல்லி சிந்தை கலங்கிடவே செப்பிடுவார்
நந்தலுறம் பொய்யாணை விட்டிடு வார்
பொய் சத்தியமே பெருகும்
மெய்யோனைத் தேடாமல் விட்டிடுவார் வையகத்தில்
ராஜனவன் கைக்கூலி நடத்தியே வாங்கிடுவான் 50

பேசிடுவான் ஞாயப் பிழையாக
ஆசையுள்ள அண்ணனுக்கு தம்பிபகை
அன்னையர்க்குப் பிள்ளைபகை கன்னி பெண்டு
கடும்பகையாம் பண்ணரிய மாமி மருமகளுக்கு
மாற்றானாய் மாறாமல் பூமிதனில் மாமி தன்மேல்
போர்ப்பகையாம் கூராண்மை அறிவு மயக்கமாய்
அண்ணனுடன் தங்கை முறைமை தப்பிச் செல்லுவாள்
முழுதுமே தரைதனிலே தாயும் மகனும்
சரசமிகப் பெருகி ஞாயவழிப் பாராமல்
நத்தியே நேசமுடன் சிற்றின்பம் செய்திடுவார்
சீமையெல்லாம் மயங்கி அத்தனையும் தேடார்கள்
அம்புவியெல்லாம் நித்தநித்தம் பெண்கள்
மோகம் பெருகிக் கண்ட கணவன்மேல்
மோகக்கலவி செய்வார் திண்டு முண்டாய்ப்
பாவமெனத் தோணாமல் பாருலகமெல்லாம்
அதிகக் கோபமுடன் பொய்யால் கொலைகள் செய்வார்
பாவமதாய் முன்னாலே பெண்ரூபம் முக்கோணமாய்ப் பிறக்கும்
பின்னாலே ஆண்போல் பிறந்துவிடும்
முன்னாலே ஆண்பிள்ளை பெண்பிள்ளைபோல்
அரையின் கீழ்ப் பிறக்கும் ஆண்பிள்ளைமீசை பெண்ணுக்கு ஆகிவிடும்
மட்டிகளாய் நாணுவார் நஞ்சு தின்பார்
நாக்கைப் பிடுங்கிடுவார் சினமுடன் சாவார் கிணற்றிலே
நாணமுடன் ஆற்றிலே மடிவாரும் அக்கினியில் மாள்வரும்
தாழ்மையாய்க் குத்திமிகச் சாவாரும் தேற்றமதாய்
வெட்டிக் கொண்டே சாவாரும் முகடராய் நாட்டமுடன் 75

பூலோகமெல்லாம் பிழையான துன்பத்தால் மாலோகச்
சக்கரத்தால் மடிவார்கள் பூலோகம் விசிறும்
பனியாலும் விசக் காற்றாலும் வெயிலினாலும்
சீறும் மிருகமதாய் செத்திடுவார் வீறுகெட்டு
நாளுக்கு நாளாய் நடக்கும் வழிகுறுகும் செவிக்குமே
வானம் திசைமாறும் கூலிக்கும்ப் பார்க்கும் பாழ்நரகில்
ஏறு அக்கினியால் நாள்தோறும் பூமிநடுக்க முண்டாம்
வாழ்வோர்க்கு மேல்புறத்து நஞ்சை விளையும்
அதற்குக் கீழ்புறத்து நஞ்சை விளையாது
மேல்மழைகள் தான்கூடி மரத்துக் கொப்பு
நனைந்துவிடும் நாடி ஒரு கொம்பு நனையாது
மூடிவரும் கோழிமுட்டை ஒன்றிலே குஞ்சிரண்டு
மூன்றுவரும் ‘கோ’ என்று பெட்டை கூவிவிடும்
நீளாமல் வெள்ளத்தினால் சிலவூர் மீழாமல் தாழ்ந்துவிடும்
மின்னல் இடியால் சிலவூர் வேகுமே பள்ளமதாய்
தாழுமே சிலவூர் சமுத்திரம் வந்தே பெருகும் மாழும்
சிலவூர் மகிழ்ச்சியுடன் ஆளறிய அக்கினியாலே அழியும்
சிலவூர் இருப்புடனே மண்மாரி பெய்துவிடும்
நாடுதனில் ராசாக்கள் பாவிகளாய் நாள்தோறும்
வந்துபாசாங்கு மந்திரியும் பாவிகளாய்க் கூசாமல்
பெண்ணாலும் பொன்னாலும் பேசி நிலங்கரையில்
மண்ணாலும் நித்தம் மடிவார்கள் முன்னோர்கள்
உண்டுபண்ணி வைத்த உட்பொருளைத் தேடாமல்
கண்ட தெல்லாம் தெய்வமெனக் கையெடுப்பார் சண்டாளர்
குட்டியளித்திடுவார் கொல்லுவார் கொண்டவனை 100

மட்டியவள் தாயை மகன் கொல்லுவான் கெட்டுவிழ நஞ்சுடனே
பேயால் நாடும் மருந்தாலே துஞ்சிவிடும் மாற
பில்லி சூனியத்தால் அஞ்சாமல் கொன்றிடுவார்
பாவமதாய் கூர்மையுடன் பாராமல் பன்றி உருக்காட்டி
பரியாகும் நன்றிகெட்டு தீவைப்பார் பகையால்
தீங்கான நோய்பெருகும் பான்மை வையகம்பாழாகும்
ஏவல்செய்ய சின்னப்பிள்ளைகள் சிற்றின்பம் செய்திடுமே
மண்ணில் கடவாத வார்த்தை சொல்லும்
பின்னும் மந்தப்பாவம் பிணி கருத்தாய் பாருலகில்
மானிடர்க்கும் காவலூறு புண்ணியம் கசப்பாகும்
மேவரிய ஒருத்தனுடன் ஒன்பதெட்டுப் பேர்கள்
திருத்தமறவே திரிவார் தேசமதில்
வருத்தமாய் தேடிநித்தம் குரு தாய் தகப்பன் கூறும்மொழி கேளார்
திருத்தமுடனே சிவத்தைத் தேடார்கள்
கருத்துடனே பிச்சையது போடாமல் பேய்க்குக் கொடுத்திடுவார்
அச்சமுடன் தெண்ட மதற்கிடுவார்
வஞ்சமற நாடு உயர்ந்து வரும் நாள்தோறும்
பூமியெல்லாம் காடு தணிந்து வரும்t கண்டிருங்கோ
வெள்ளி இடிகளாய் விழுமாம் வில்போடும் மாறிமாறி
வெள்ளாண்மை குன்றிவரும் மேல்மேலும் வெள்ளமது பெருகும்
மேகத்திலே இருந்து மீனும் விழும் மழையிலே
மேகமதாய் வில்லும் வெவ்வேறாகி விடும்
ஆகமத்தில் ஜனங்கள் வளர்த்தி குன்றிவிடும்
தாக்குப் பொறுக்காது ஜனங்களுக்கு ஆயுள்தான் குறையும்
காப்புக்கட்டி வைத்தமகன் கனபவுசா யிருக்கிறான் 125

மாமன் நானிருக்க மனம்போல் நடத்துகிறான்
அவன் பட்டம் பறித்திடுவேன் கொட்டிக்
கலைத்திடுவேன் குடிகெடுப்பேன் நாரணனும்.

*நடுத்தீர்வை உலா முற்றியது*

அய்யா உண்டு

குறிப்பு: பிழையிருப்பின் வரி எண்ணுடன் சரியான வரியையும் குறிப்பிட்டு ayyaiasf@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்க.

Last Updated On July 24, 2018