You are here:
< Back

திருநடன வெண்பா

1-நாதன் முறையார்க்கு நர்ப்பிறவி யொன்றுபத்தாம்
வேதன்றனக்குப் பிறவி ஆயிரமாம் – வெண்டரள
மாதுங்குமாயிரமாம் மாதுமைக் கோரேழாம்
சீதுக்குப் பத்தெனவுஞ் செப்பு

2-இந்திரர்க்கு மூன்றெனவும் யிறையவருக் கேழெனவும்
சந்திரர்க் கோறேழாஞ் சாற்று –நன்றியுள்ள
மரையதுக்கு மோரேழாம் மானமுள்ள தொண்டர்களுக்கு
இறப்பிரப்பில்லை யென்றியம்பு

3-என்றிவைகளெல்லாம் யிப்படியே வந்துதென்று
ஒன்றியுள்ள சித்தாதி யோதினான் –பண்டையுள்ள
தாவடத்தை மேவிடத்திக் கோவிடத்தி லோமிடத்தி
நாவிடத்தி பூண்டாடினார்

4-தன்னால்முளைத்த சர்க்கணையின்றான் வாங்கி
பின்னாலேயோர்கணை பீறி – பின்னாலே
பீறுங்கணையதினால்ப் பெரும்புவியெல்லாந்தோன்றி
சீறுங்கலவயதால்ச் – சென்றதோ

5-வானத்தளவில் வளர்ந்த கம்பத் தன்னருளால்
சேனைச் சிகம்படைத்த செல்வமோ-மானத்த
மாகலியனே துவினால் வாழ்விழந்திவ்வுகமும்
போகத்தான் பூட்டினதிப்போது

6-நல்லாறு சாஸ்த்திரமும் நாலுமறைவேதமதும்
பொல்லாக்கலியனால் பொய்ச்சூடி –பொல்லாப்
பொடியக்கலியோடும் பொன்றியடிவேரறவே
இடியத்தான் –வந்தொத்த தின்று

7பக்கம் பதினைந்தும் பார்மேடம் பன்னிரண்டும்
வக்கனை கோளொன்பதுவும் மங்கி யக்கிகொண்டு
அழிந்த கலியோடல் மாந்தளிர்ந்திடவே
சுழிந்து கனலாறு வந்து சுற்றி

8-மாந்திர தந்திரத்தை வைத்தியவா கடத்தை
சூழ்ந்திருந்த வச்சரத்தைச் சோதித்து –ஏந்திருந்த
இழகு கலியோடிம் முறையெல்லா மொடுக்கி
கழவறுக்கச்சோதி யொன்றுகாணுதோ

9-ஐயமிட்டுண்ணா அரும்பாவி யாவரையும்
பொய்யரையும் வெட்டிப்பெலியாக்கி –மெய்யிளந்து
நய்யுங்கலியோடனலாவி கொண்டெறிக்க
வெய்யவன் போல்ச் சோதியொன்றாகுமோ

10-பக்திசோதித்தே பலநாழுங் காத்திருந்த
வித்தகனேவந்து வேண்டார்மேல் –வீடிழந்து
செத்திரந்தீ நரகச்சீக் கூட்டிலேயடைக்க
கொத்தியருந்த புழுக்கள் கொஞ்சுதோ

11-பாங்களியனேது வினால்ப் பண்டுண்டு செய்ததெல்லாம்
முங்கிக்கலியனுள் மூடி –மூச்சுவிட்டு
ஓங்குவ தோங்கி உறங்குவது தானுறங்கி
முங்கிக் குப்பதுநாள் முற்றுதோ

12-லெச்சை கெட்டபாவி யென்று வந்தானன்று முதல்
நர்ச்சடலங்கள் நல்வகைகள் நாடிளந்து நாணமுற்று
பச்சிமுதல் மாமிருகம் பால்நரிகள் கற்றாவும்
அச்சமுற்று வாழ்புவி யொன்றாகுதோ

13-பொல்லாத்துயரங்கள் கொண்டபேய்ச்செடிகள் தாமொழிந்து
கல்லாதபுல்லக் கருமொழிந்து நல்லோறாய்ச்
சாகாமல்நாளும் நகறொன்றதுக்குள்-சொல்லொ
ன்றாலாளச் சோதி யொன்று தோன்றுதோ

14-தானுமால்வேதன் தர்ப்பொருளாய் முப்பொருளும்
ஆணுவமாயொன்றில் அடங்குதோ அஞ்செழுத்தும்
ஆணாஅரியெழுத்தும் ஆங்கார முன்றெழுத்தும்
ஓம்நமோ வென்றதுக்குள் வொருங்குதோ

15-ஆகாதவஸ்த்துவெல்லாம் அழித்து நரகிலிட்டு
வாகாய்க்குழி மூடவந்ததோ சாகாத
சனங்கள் பலவஸ்த்து வையும் தர்மபதிராக்ஷீயத்தில்
இனங்களொன்றாய் ஆழ ராஜாவொன்றாகுதோ

16-பொன்னூற்று தன்னூற்று புரவுதன்னால் விளையூற்று
முன்னூற்று யோசனையில் வாசுழி பன்னூற்று
பாலூற்று மேலூற்றுச் சேலூற்று வாலூற்று
மாலூற்று மாபதியுமாகுதோ

17-செப்பொற்ற பொன்னுஞ் சிவமேடை சிங்காசனமும்
முப்பத்திரண்டரமு மோங்குதோ ஒப்பற்ற
ஊர்தெருவு மொன்றதுக்குள் ஒர்யோசனைத் தெருக்கள்
சீர்பதினாயிரத்தெண் சேருதோ

18-தெருக்கள் பதினாயிரத்தெண் செந்திருமால் வாழ்பதிக்கு
குருக்கள் விஞ்சைதானென்று கூறுதலோ –மருக்கள்
மாறாமல் வாழ்பதிக்கு மனங்கொடுத்து நிர்ப்பதல்லால்
வேறார்களும் பறிக்க வேண்டுமோ

19-பொர்ம்மைபதியில்ப் பொன்வாசலொன்றதிலே
தர்மமணியொன்று தாங்குதோ தர்மமது
மணியினது கூறறிய மணிகணீறென்றதல்லால்
இனியிருளில்லா தேகுதோ

20-அலைந்தலைந்த சூரியனும் அவனலையச்சாயாமல்
நிலந்தெரிய வெப்போதும் நேரேகுலைந்தலைந்த
கார்மேகத்தட்டெல்லாங் கண்டுடைந்து வானமதில்
ஊர்மேகமெல்லாம் வொருமேக மாகிடவே

21-தோணிக்கச்சிந்தை துலங்கி வழிகாட்டுமல்லால்
காணிக்கை யென்றயிறை காணாதோ –மாணிக்க
கல்லால் வளைந்தபதி கானுமொழியல்லாது
பொல்லாரெனப் பேர்கள் போச்சுதோ

22-ஈசர்நடனம் யிருபத்தி வொன்றதுக்குள்
தேசமதுதீது நலஞ்செப்பினார் –வாசமுடன்
வன்னியமர்த்தி மாதுமைவைத்தானோக்கி
உன்னிச்சிவமு முறைப் பார்

அய்யா உண்டு

குறிப்பு: பிழையிருப்பின்  ayyaiasf@gmail மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்க.

Last Updated On June 09, 2018