அந்த யுகப்பிறப்பு ஆனபின் எம்பெருமாள் நந்த சிவனுகத்தோர் நாடும்வா னோர்களையும் வாருங்கோ பிள்ளாய் வானோரே என்றுசொல்லி ஏதுங்கள் ஞாயம் இயம்புமென்றா ரெம்பெருமாள் அப்போது வானோர் எல்லோரு மேமகிழ்ந்து செப்புகிறா ரந்தச் சிவனாதி தன்னோடு மாயவரே…

திருச்செந்தூர் தன்னில் திருமா லங்கேயிருக்க விருச்சமுள்ள நீசன் வேசைநசு ராணியவன் வையங்க ளெல்லாம் வரம்பழித்து மாநீசன் நெய்யதியச் சான்றோர்கள் நெறியெல் லாங்குலைத்துப் பேரழித்துத் தர்மம் பெருமையெல்லாந் தானழித்தான் மார்வரை யேகூடும் மைப்புரசு சஞ்சுவம்போல் தான…

பூலோக மெல்லாம் பொய்யான மாகலியால் மாலோ சனையிழந்து மாறியே மானிடவர் சாதி யினம்பிரித்துத் தடுமாறி மானிடவர் ஊதி னங்களாக ஒன்றுக்கொன் றேயெளிதாய் பிரட்டுருட்டாய் மானிடரைப் பிலமுள்ளோர் தானடித்து மருட்டும் புரட்டுடனே மாநீச னாளுகையில் மாரி…

தண்டமிழுங் கன்னி சான்றோர்க ளானோர்க்குக் கோட்டையு மிட்டுக் குமாரரையும் பெண்ணதையும் தாட்டிமையாய்ச் சான்றோர்க்குத் தரந்தரமே மாளிகையும் வைத்துக் கொடுத்தாள் வாழ்ந்திருந்தார் சான்றோர்கள் மெய்த்துப்புவி கொண்டாட மெல்லியர்கள் தங்களுக்கு வயிற்றில் கெற்பமாகி மதலைபெற்றா ரம்மானை நெய்த்தெளிய…

கஞ்சனையு மற்றுமுள்ள காலவுணர் தங்களையும் வஞ்சகமா யுள்ள வாணநர பாலனையும் இம்முதலா யுள்ள ஏற்ற அரக்கரையும் அம்முதலா யுள்ளவரை அரியோ னறுத்தனராம் சத்தபெல முள்ள தத்துவத்தார் தங்களையும் வித்தகனார் கொல்ல மேல்நினைத்தா ரம்மானை கஞ்சன்…