அய்யா சரணம்

“விளக்கு ஒளி போலே வீரத்தன மாயிருங்கோ”
                                                                           – அய்யா வைகுண்டர்

  அய்யாவின் அன்பு பிள்ளைகளான அன்புக்கொடி சொந்தங்களுக்கு அன்பான வேண்டுக்கோள். தவ பூமியான சுவாமித்தோப்பு அய்யா பதியின் நிர்வாகிகளில் ஒருவர்தான் பிரஜாபதி அய்யா அவர்கள். அவரின் முயற்சியினாலும், அன்புக்கொடி மக்களின் தாராளமான தர்ம சிந்தையாலும் அய்யாவுக்கு ஒரு வெள்ளி வாகனம் செய்யப்பட்டது. அந்த வாகனம் செய்ய தர்மகாசினை பெறும் வகையில் பதியின் நாமமேடை பக்கத்தில் பணபெட்டகம் வைக்கப்பட்டு அருகிலே தர்மம் செய்ய வேண்டி அறிவிப்பும் வைக்கப்பட்டது. அதிக பணம் கொடுக்கமுடியாத போதும் தங்களின் மற்றும் தங்களது சிறுமதலைகளின் கொழுசை கூட கொடுத்து தாய்மார்கள் கலியுக கர்ணனாகவே உயர்ந்தனர். மேலும் அன்புக்கொடி மக்கள் தங்களால் முடிந்த தர்மகாசினை மனமகிழ்ந்து கொடுத்தனர். இவ்வாறு முழுக்க முழுக்க தர்மம் பெற்று செய்யப்பட்ட வெள்ளி வாகனத்தில் எட்டாம் திருவிழா அன்று அய்யா கலி வெட்டைக்கு சென்ற காட்சியை கண்ட கண்கள் கலியை கடர்ந்தது. அடுத்த ஆண்டு கலி வேட்டையை காண வந்த கண்களில் வந்த கண்ணீரை கண்டால் கலியனுக்கே கருணை வந்தாலும் வரும். காரணம் பிரஜாபதி அய்யா அவர்கள் தாம் நடத்தும் திருவிழா காலங்களில் மட்டுமே வெள்ளி வாகனம் என்று கூறி அவர் வீட்டு பக்கத்தில் வெள்ளி குதிரையை சிறை வைத்தார். கடர்ந்த 7 ஆண்டுகளாக வெள்ளிகுதிரை இரும்பு கூட்டுகுள் இருந்து விடுப்பட்டு நம் அய்யாவை சுமக்கும் நல்ல நாளை நோக்கி காத்திருக்கின்றது. பிரஜாபதி அய்யா சொல்லும் (அ)நியாயம் தான் என்ன?

    சுவாமித் தோப்பு பதியை நிர்வாகிக்கும் மற்ற நிர்வாகிகள் மட்டும் தாங்கள் நிர்வாகிக்கும் காலகட்டத்தில் பதிக்கு வருகின்ற விளக்எண்ணெய் காசுகள், வெங்கல விளக்குகள், அய்யாவுக்கு அன்பர்கள் அணிவிக்கின்ற தங்க நகைகள், தென்னம் பிள்ளை உட்பட அனைத்து விதமா வருமானங்களையும் அவரவர்கள் தங்களின் பங்காக எடுத்துக் கொள்ளும் போது , நான் மட்டும் வெள்ளி குதிரையை என்னுடைய உடைமையில் வைப்பதில் என்ன தப்பு என்கிறார். அது சரி உங்களின் நிர்வாக சட்டதிட்டத்தை எல்லாம் வாகனத்துக்கு தர்மகாசு வசூல் செய்யும் போதே சொல்லி கேட்டிருந்தால் நீயாயம். ஆனால் இப்போது உங்களின் நியாயம் வீணாண வெள்ளாத நியாயம் தான். முழுமையாக அய்யாவழி மக்களுக்கு செய்த நம்பிக்கை துரோகம் ஆகும்.யார் நம்மை கேட்பார் என்று எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில் வான் பெரிது என்பதை அறிந்தும் மறந்த பிரஜாபதி அய்யாவை அன்புக்கொடி மக்களே நீங்கள் கேட்க வேண்டாமா?

    வருகிற தை மாதம் 13ம் தேதி அதாவது பதியின் எட்டாம் திருவிழா அன்று(26-01-2018) காலை 10.00 க்கு பிரஜாபதி அய்யாவை சந்தித்து அன்றை வாகன பவனிக்கு வெள்ளி குதிரையை தர வேண்டி அய்யா காட்டிய அமைதியான, அன்பான, பொறுமையான முறையில் வலியுறுத்துவோம். அய்யா அருளால் தருவார் என நம்புவோம். மறுத்தால் அய்யாவின் தவவாசலான வடக்கு வாசல் சென்று அய்யாவிடம் முறையிடுவோம். வாருங்கள்! வாருங்கள்!!

*நல்லோரே ஆகவென்றால் ஞாயமதிலே நில்லும்*

வைகுண்டருக்கே பதறி வாழுவது அல்லாமல்
பொய்கொண்ட மற்றோர்க்குப் புத்தி அயர்ந்து அஞ்சாதுங்கோ

அய்யா உண்டு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *