அய்யா சரணம்!!                            அய்யா துணை                              வைகுண்டா சரணம்!!

சுவாமிதோப்பு பதி நிர்வாகிகள்/பாலபிரஜாதிபதி அய்யாவுக்கு அன்புகொடி மக்களின் கண்ணீரோடு கூடிய அன்பு வேண்டுகோள்:

1. அய்யா வைகுண்டபரம்பொருளின் அவதார காலம் 18 ஆண்டுகள். ஆனால் சுவாமி தோப்பில் முன் வாசலில் 42 வது ஆண்டில் வைகுண்ட லோகம் சென்றார் என்று கல்வெட்டு வைக்க பட்டுள்ளது, தவறை மாற்றி உண்மையை எழுதுங்கள் அய்யா

2. அகிலதிரட்டின் படி அய்யாவின் இல்லற துணைவியார் திருமால்அம்மை என்று இல்லை, பின்பு ஏன் சுவாமி தோப்பு பதியின் உள்ளே அய்யா வின் இல்லற துணைவியார் திருமால்அம்மை என்று எழுத பட்ட காரணம் என்ன? ஏன் அய்யா இந்த பொய், தவறை மாற்றுங்கள் அய்யா

3. அகிலதிரட்டின்படி அய்யா வின் இல்லற புதல்வன் என்று ஒருவர் இல்லை. அப்படி இருக்க சுவாமி பதியின் உள்ளே அய்யா வின் இல்லற புதல்வன் பொதுகுட்டி என்று எழுத பட்ட காரணம் என்ன? ஏன் அய்யா பொய் மேல் பொய்யாய் இருக்கிறது, தவறுகளை மாற்றுங்கள் அய்யா

4. சுவாமிதோப்பு பள்ளி அறைக்கு உள்ளே பனை ஏறுபவர் பயன் படுத்தும் பொருட்களை வைக்க காரணம் என்ன? பனை பொருட்களை வேண்டாம் அய்யா இந்த சூழ்ச்சி, பகவான் கணக்கிட்டு கொண்டு இருக்கிறார் என்பதை உணர்ந்து தர்மயுக வாழ்வை நோக்கி பயணிங்கள்

5. உலக பொதுமறையாம் அகிலதிரட்டு அம்மானையின் அட்டையில் தவறாக “பொ.முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டது என்று எழுத பட்ட காரணம் என்ன? எதற்கு அய்யா இந்த பொய், வேண்டாம் அய்யா இந்த பாவ செயல் விட்டுவிடுங்கள் பொய் உரைபதை

6. நாராயண பரம்பொருள் அருள அரிகோபாலன் சீடரால் கைபட எழுதின ஆதி ஓலை சுவடி எங்கே? ஆதி ஓலை எல்லா மக்களும் பார்க்கும் வண்ணம் அமைத்து அய்யாவின் அருள் பெறுங்கள்

7. பழைய பதிப்பு அருள் நூலுக்கும் புதிய பதிப்பு அருள் நூலுக்கும் வித்தியாசம் வர காரணம் என்ன? அருள் நூலின் ஆதி ஓலை சுவடி எங்கே? இதனை மக்களுக்கு தெளிவு படுத்தி சான்றோராய் திகழுங்கள்

8. அய்யா வைகுண்ட பரம்பொருளின் அவதாரம் 1008 இல் நிகழ்ந்தது, நீங்கள் ஏன் செவிவழி செய்தியாக சொல்ல படும் முத்துக்குட்டியின் பிறப்போடு சேர்த்து கொண்டாட காரணம் என்ன, வேண்டாம் அய்யா இந்த கபட நாடகம், இது உங்களை நகரத்திற்கு அழைத்து செல்லும், பாவத்தை சம்பாதிக்காமல் புண்ணியத்தை தேடுங்கள் அய்யா

9. நாத்திக வாதிகளையும் இந்து எதிர்ப்பு அரிசியில் வாதிகளிடம் நட்பு பாராட்டுவது ஏன்? அவர்களை அழைத்து இது எங்கள் பாட்டன் சமாதி என்ற சொல்ல காரணம் என்ன? இல்லாத ஒன்றையும் பொய்களையும் உரைத்து எதை சாதிக்க போகிறீர்கள், அற்ப்பம் இந்த வாழ்க்கை, வைகுண்ட பரம்பொருளின் உபதேசங்களை உணருங்கள்

10. அன்புகொடி மக்களால் அன்பாக செயல்படுத்திய வெள்ளிகுதிரை வாகனத்தை பதியில் வைத்துக்கொள்ளுங்கள் அய்யா

11. அய்யாவின் பிள்ளைகள் இயற்கை கடனை கழிப்பதற்கு கழிவறை கட்டி மற்றும் தினமும் பராமரிப்பு செய்ய வேண்டும்

ஒவ்வொரு நாளும் அன்புக்கொடி மக்களாகிய நாங்கள் நீங்கள் செய்யும் இந்த விதமான தவறான செயல்களால் மனம் வேதனை அடைகிறது கண்களில் கண்ணீர் வருகிறது அய்யா.

எல்லா பாவ செயல்களையும் முதலில் மாற்றுங்கள், அய்யாவிடம் மாப்பு கேளுங்கள்

வைகுண்ட பரம்பொருள் சொன்னது போல நியாயவானாக செயல்படுங்கள், தர்மயுக வாழ்வு பெறுங்கள்.

அய்யா உண்டு

அகிலம் படிப்போம்!                             அறநெறி நடப்போம்!!                     தர்மயுக வாழ்வு பெறுவோம்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *