வாழப்படிப்பு

சாஸ்திரததிலுள்ள கன்னிமக்கள் நம்முடைய
சான்றோர்கள் நன்றாய் தழைத்து வாழ

பத்திரத்தாள் பெற்ற மக்கள் நம்முடைய
பைந்தொடிமார் கன்னிமக்கள் கோத்திரத்தோடே நன்றாய்தழைத்து வாழ

விழிமடவார் படைத்தலைவர் நம்முடைய
வெற்றிச் சான்றோர் நன்றாய் தழைத்து வாழ

கடலதிலே தவசிருந்தேன் நம்முடைய
கண்ணு சான்றோர் நன்றாய் தழைத்து வாழ

வில்லுக் கொண்டே எய்து விட்டேன் நம்முடைய
விசயன் சான்றோர் நன்றாய்த் தழைத்து வாழ

பார்த்துவ்விட்டேன் இரண்டு கண்ணும் கொண்டு நம்முடைய 
பத்தினி மக்கள் நன்றாய்த் தழைத்து வாழ

மலைக் கன்னிமார் தாங்காமல் பெற்ற நம்முடைய
மக்கள் வலியசீமை கட்டி அரசாள வாழ

தருமருட குலத்திலுள்ள நம்முடைய தெய்வச் சான்றோர்கள்
நன்றாய் தழைத்து வாழ

கோத்திரத்துச் சான்றோர்கள் நம்முடைய
குடும்பத்தார்கள் நன்றாய்த் தழைத்து வாழ

கோட்டைத் தளம் மதில் இடித்து வாழ நம்முடைய
மக்கள் கோடிச் சீமை கட்டி அரசாள வாழ

ஆல்போலே தழைத்து வாழ நம்முடைய
ஐவர் மக்கள் சீமை கட்டி அரசாள வாழ

பயலுடைய தரம் அறுத்து பண்டாரம் சீமையாள மக்கள் 
நன்றாய்த் தழைத்து வாழ.

அய்யா உண்டு
(வாழப்படிப்பு முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *